இப்போ புகழ்ந்தது பல்வளத்துறை அமைச்சர்; அடுத்தது என்ன மின்துறை அமைச்சரா? அண்ணாமலை கேள்வி!!
பால்வளத்துறை அமைச்சர் நாசர் இல்ல திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துக்கொண்டு பேசியுள்ளார்.
முன்னதாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் இல்ல திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துக்கொண்டு பேசினார். அப்போது, பால்வளத் துறை அமைச்சராக இருக்கும் நாசர், ஆவின் நிறுவனத்தில் செய்யும் ஆய்வுகளை பார்த்துள்ளேன். உணவு பொருளில் முடி விழக் கூடாது என்பதற்காக போடப்படும் தொப்பியை போட்டுக் கொண்டு ஆய்வு பணிகளை அவர் மேற்கொள்வதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கும்.
இதையும் படிங்க: ஏப்ரல் 1 முதல் ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி.. அமைச்சர் சக்கரபாணி வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு !!
ஆவினில் அதிமுக ஆட்சியை விட தற்போது விற்பனை அதிகரித்துள்ளது. ஆவினில் பல புதிய பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நம்பர் 1 தமிழ்நாடு என்ற கனவு நிறைவேறியுள்ளது. ஆவின் மூலம் 4.20 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயனடைந்துள்ளனர் என்று தெரிவித்திருந்தார். இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைகண்டனம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: போதை ஒழிப்பு மையத்தில் வைக்கப்பட்ட தொலைக்காட்சி… சிகிச்சைக்கு வருபவர்களின் மன இறுக்கத்தை புதுவழி!!
இதுக்குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், ஒரே ஆண்டில் ஆவின் பொருள்களின் விலையை 3 முறை உயர்த்தியபின், ஆவின் வருவாய் உயர்ந்துள்ளதாக முதல்வர் பாராட்டியுள்ளார். ஆவின் நெய்யின் விலை மட்டும் கடந்த 9 மாதங்களில் 22% உயர்ந்துள்ளது. அடுத்து என்ன, மின்வாரியத்தின் வருவாய் உயர்ந்ததற்கு சாராய அமைச்சரை பாராட்டவுள்ளீரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.