போலீஸ் அதிரடி.. அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது பாய்ந்த வழக்கு.. என்ன வழக்கு தெரியுமா?
ஏற்கனவே 6 முறை ஒத்திவைக்கப்பட்ட கரூர் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி கரூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் போட்டியிட இருந்த வேட்பாளர் திருவிக என்பவர், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் திண்டுக்கல்லில் இருந்து கரூர் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று அனுமதியின்றி கூடி பொதுமக்கள், அரசு ஊழியர்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உட்பட 10 பேர் மீது தாந்தோணி மலை போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஏற்கனவே 6 முறை ஒத்திவைக்கப்பட்ட கரூர் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி கரூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் போட்டியிட இருந்த வேட்பாளர் திருவிக என்பவர், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் திண்டுக்கல்லில் இருந்து கரூர் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது, 4 காரில் வந்த மர்ம கும்பல் விஜயபாஸ்கர் காரை வழிமறித்து கண்ணாடியை உடைத்து திருவிக கடத்தப்பட்டார். கடத்தப்பட்ட சில மணிநேரங்களில் கல்வார்பட்டி காவல்நிலைய சோதனைச்சாவடி அருகே அதிமுகவினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அப்போது காலை 11 மணியளவில் வேடசந்தூர் நெடுஞ்சாலை அருகே வந்து கொண்டிருந்தபோது, காரின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு மர்ம நபர்கள் சிலரால் திருவிக கடத்தப்பட்டதாகவும், பின்னர் மாலை 6 மணியளவில் கல்வார்பட்டி காவல்நிலைய சோதனைச்சாவடி அருகே அதிமுகவினரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார். இந்த சூழலில் நேற்று மதியம் தேர்தல் நடைபெறும் சமயத்தில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுங்கட்சியான திமுகவினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், சட்டவிரோதமாக அனுமதியின்றி கூட்டம் கூடியது, அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.