ஸ்டாலின் சொத்து பட்டியல் ரெடி! 13 அமைச்சர்களின் சொத்து மதிப்பு 2 லட்சம் கோடி.. பீதியை கிளப்பும் அண்ணாமலை!

முதல்வர் மு.க ஸ்டாலின், திமுக அமைச்சர்கள், பினாமிகள், உறவினர்களின் சொத்து பட்டியலை வெளியிட உள்ளேன் என்று கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார் அண்ணாமலை.

TN Ministers CM Stalin property list release soon says annamalai

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. அப்போது பேசிய அவர் திமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார்.

அவர் பேசிய போது, எனது சொத்து கணக்கை வெளியிடும் அதே நாளில் முதல்வர் மு.க ஸ்டாலின், திமுக அமைச்சர்கள், பினாமிகள், உறவினர்களின் சொத்து பட்டியலை வெளியிட உள்ளேன். முதல்வர் மு.க ஸ்டாலின், தனக்கு சொந்த கார் இல்லை என தேர்தல் ஆணையத்தில் சொன்னார். எந்த கார் வைத்துள்ளார் என்பதை சொல்வோம்.

இதையும் படிங்க..அப்போ இருந்த இலங்கை போராட்ட களமா இது.? அனைவரையும் ஆச்சரியப்படுத்திய வைரல் புகைப்படம் !!

TN Ministers CM Stalin property list release soon says annamalai

ஏப்ரல் முதல் வாரத்தில் அனைத்து பில்களும் வெளியிடப்படும். அதிகாரத்தில் இருப்பவர்களை கேள்வி கேட்கும் உரிமை மக்களுக்கு உண்டு. இன்று சாமானிய மக்களை ஆளுங்கட்சி கேள்வி கேட்கிறது. இதுவரை முதல்வர் உள்ளிட்ட 13 அமைச்சர்களின் சொத்து பட்டியல் தயாராகிவிட்டது. சொத்து மதிப்பு மொத்தம் 2 லட்சம் கோடி வந்திருக்கிறது.

சாராய அமைச்சர் செந்தில் பாலாஜி, தனது வக்கிலுக்கு கொடுக்கும் ஒரு சிட்டிங் பணம், சாமானிய மனிதர் 10 ஆண்டுகள் சம்பாதிக்கும் தொகையாகும். எனது வாட்சுக்கு பில் மட்டும் இல்லை. 13 ஆண்டுகள் சம்பாதித்த முழு கணக்கையும் கொடுக்கிறேன். எனக்கு ரூ.18 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை சம்பளம் வந்துள்ளது. ரூ.13 லட்சத்துக்கு கிரெடிட் கார்டு பில் கட்டி உள்ளேன் என்று அதிரடியாக பேட்டி கொடுத்துள்ளார் அண்ணாமலை.

இதையும் படிங்க..அண்ணாமலை கட்டிய ரபேல் வாட்ச்.. ரபேல் விமான பாகத்தில் செய்யலையா.? உண்மை இதுதான் மக்களே !

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios