குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி! டாஸ்மாக்கை மூடும் நேரத்தில் மாற்றமா? தமிழக அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு.!
மதுக்கடைகளும், பார்களும் மூடப்பட்ட பின், பொது இடங்களில் மது அருந்திவிட்டு, கண்ணாடி பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கப்புகளை பொது இடங்களிலும், கால்வாய்களிலும் வீசி செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
டாஸ்மாக் மதுபானக் கடைகள், பார்கள் மூடப்பட்ட பிறகு பொது இடங்களில் மது அருந்துவதை தடுக்கக் கோரி வழக்கில் தமிழக அரசு, டாஸ்மாக் நிர்வாகம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
டாஸ்மாக் மதுபானக் கடை மற்றும் பார் ஆகியவை தினமும் இரவு 10 மணிக்கு மூடப்படுவதால், மூடும் நேரத்தில் மதுபானம் வாங்குபவர்கள், மதுபானக் கடை முன்பும், சாலையோரத்திலும், அருகில் உள்ள பொது இடங்களிலும் அமர்ந்து மது அருந்துவதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி, திருவள்ளூர் மாவட்டம் வெங்கத்தூரை சேர்ந்த மோகன், கோபிநாத் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
இதையும் படிங்க;- டாஸ்மாக் சரக்குக்கு பில் இருக்கா.? வாட்ச்க்கு மட்டும் பில் கேட்குறீங்க.? திமுகவுக்கு எதிராக சீறிய பாஜக!
அந்த மனுவில், மதுக்கடைகளும், பார்களும் மூடப்பட்ட பின், பொது இடங்களில் மது அருந்திவிட்டு, கண்ணாடி பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கப்புகளை பொது இடங்களிலும், கால்வாய்களிலும் வீசி செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இந்த நேரங்களில் குற்றங்கள் நடப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். 2003ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மதுபான சில்லறை விற்பனை விதிகளின்படி காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை மதுபான கடைகளை திறந்துவைக்கலாம் என அனுமதிக்கப்படுவதால், மதுபானம் வாங்குபவர்கள் அதை அருந்துவதற்கு பார்கள் இயங்கும் நேரங்களை மாற்றம் செய்தால் பொது இடங்களில் நடக்கும் குற்றங்களை தடுக்கலாம் என டிசம்பர் 9ஆம் தேதி தமிழக மதுவிலக்கு துறை மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என மனுவில் கூறியுள்ளனர்.
பொது இடங்களில் மது அருந்துவது சட்டப்படி குற்றம் என்பதால், டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட்ட பிறகு பொது இடங்களில் மது அருந்துவதை முறைப்படுத்த உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரியுள்ளார். இந்த மனுவை விசாரித்த பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா, டி.பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வு மனுவுக்கு ஜனவரி முதல் வாரத்துக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க;- கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த டாஸ்மாக் பணியாளர்கள் சஸ்பெண்ட்... டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி!!