டாஸ்மாக் சரக்குக்கு பில் இருக்கா.? வாட்ச்க்கு மட்டும் பில் கேட்குறீங்க.? திமுகவுக்கு எதிராக சீறிய பாஜக!
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் கருத்து மோதல் தொடர்ந்து வருகிறது.
கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ‘நான் கையில் கட்டி இருக்கும் வாட்ச் ரூ. 3.5 லட்சம் மதிப்பிலான ரபேல் விமானத்தின் உதிரி பாகங்களால் செய்யப்பட்டது. மொத்தம் 500 வாட்சுகள் நாட்டில் இருக்கின்றது. நான் அணிந்திருப்பது 149 வது வாட்ச். என் உயிர் இருக்கும் வரை இந்த வாட்ச் இருக்கும் என்று கூறினார்.
இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, ‘பிரான்ஸ் நிறுவத்திற்காக, உலகில் வெறும் 500 கை கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்ட, 5 லட்சத்துக்கும் மேல் விலையுள்ள Rafale watchஐ, வெறும் 4 ஆட்டுக்குட்டி மட்டுமே சொத்தென சொல்லும் ஆட்டுப்புளுகர் கட்டியிருக்கிறார். அவர் வாங்கின ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட்டால் எளியவர்களும் வாங்கி மகிழலாம்.
இதையும் படிங்க..சொத்து பட்டியலை வெளியிட தயார்! வேலியில் போகிற ஓணானை.. அண்ணாமலைக்கு சவால் விட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி!
வெளிநாட்டு வாட்சை கட்டியிருக்கும் தேசியவியாதி, மன்னிக்க தேசியவாதி.ஆடு வளர்த்து சேர்த்து 5 லட்ச ரூபாய் வாட்ச் கட்டும் அளவுக்கு உயர்ந்தது எப்படி? வார்ரூம் வழியாக தொழிலதிபர்களை மிரட்டினால் இப்படியெல்லாம் பணம் கிடைக்குமா ?கடிகாரம் வாங்கிய ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட முடியுமா ? இல்லை வழக்கம்போல excel sheet ஏமாத்து வேலை தான் வருமா ? என்று கேள்வி எழுப்பினார்.
இந்த விவகாரம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் கருத்து மோதல் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி ட்விட்டரில் பதிவு ஒன்றினை வெளியிட்டு உள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஒவ்வொரு நாளும் பல நூறு கோடிகளுக்கு விற்பனை செய்யும் டாஸ்மாக் சரக்குகளுக்கு 'பில்' கொடுக்க துப்பில்லாதவர்கள், கையில் கட்டியிருக்கும் 'வாட்ச்'க்கு பில் கேட்பதா ?’ என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க..2024 டார்கெட்! ராகுலுடன் கைகோர்த்த கமல்ஹாசன்.. அப்போ திமுக + காங்கிரஸ் + மநீம கூட்டணி கன்ஃபார்ம்!