MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • படம் பிளாப் ஆனாலும் சம்பள விஷயத்தில் அவர்தான் டாப்... விஜய், அஜித் முதல் ஷாருக் வரை பிரபலங்களின் சம்பள விவரம்

படம் பிளாப் ஆனாலும் சம்பள விஷயத்தில் அவர்தான் டாப்... விஜய், அஜித் முதல் ஷாருக் வரை பிரபலங்களின் சம்பள விவரம்

சினிமா பிரபலங்களின் சம்பளம் தற்போது ரூ.100 கோடியை கடந்து சென்றுவிட்டன. அந்த வகையில் தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
| Updated : Dec 20 2022, 03:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

பிரபாஸ்

அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்திருப்பவர் பிரபாஸ். பாகுபலி வெற்றியால் இவரது சம்பளம் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. இவர் தற்போது ரூ.150 கோடி சம்பளமாக வாங்குகிறார். இந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான ராதே ஷியாம் திரைப்படம் தோல்வியை தழுவினாலும் இவரது சம்பளம் குறைந்தபாடில்லை.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
210

விஜய்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய், தற்போது ஒரு படத்துக்கு ரூ.125 கோடி சம்பளமாக வாங்குகிறாராம். இவர் நடித்துள்ள வாரிசு திரைப்படம் அடுத்த மாதம் ரிலீசாக உள்ளது.

310

அஜித்

துணிவு படத்துக்கு முன்பு வரை ரூ.100 கோடிக்கு குறைவாகவே சம்பளம் வாங்கி வந்த நடிகர் அஜித், அடுத்ததாக நடிக்க உள்ள ஏகே 62 படத்துக்காக ரூ.105 கோடி சம்பளமாக வாங்கியுள்ளாராம்.

410

ரஜினி

அண்ணாத்த படத்துக்கு முன்பு வரை ரூ.120 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வந்த நடிகர் ரஜினிகாந்த், அப்படம் தோல்வி அடைந்ததால் தனது சம்பளத்தை ரூ.110 கோடியாக குறைத்துக்கொண்டார்.

510

கமல்

4 ஆண்டுகளாக ஒரு படமும் ரிலீஸ் ஆகாததால் மார்க்கெட் இல்லாமல் இருந்த கமல்ஹாசனுக்கு, அவரது விக்ரம் படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றி மிகப்பெரிய டிமாண்டை உருவாக்கிவிட்டது. இவர் இந்தியன் 2 படத்துக்காக ரூ.130 கோடி வரை சம்பளம் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

610

அல்லு அர்ஜுன்

புஷ்பா படத்தின் வெற்றிக்கு பின்னர் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் சம்பளத்தை உயர்த்திவிட்டார். இவர் புஷ்பா 2 படத்துக்காக ரூ.100 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... கிறிஸ்துமஸ் விருந்தாக... தியேட்டர் மற்றும் ஓடிடி-யில் ரிலீசாக உள்ள படங்கள் ஒரு பார்வை

710

ராம்சரண்

ஆர்.ஆர்.ஆர். படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் ராம்சரணும் சம்பளத்தை தாறுமாறாக உயர்த்திவிட்டாராம். இவர் தற்போது ரூ.100 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

810

சல்மான் கான்

பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படங்கள் தோல்வியை தழுவினாலும், இவர் தற்போது ஒரு படத்துக்கு ரூ.125 கோடி சம்பளமாக வாங்குகிறாராம்.

910

அக்‌ஷய் குமார்

பாலிவுட்டின் பிளாப் ஸ்டார் என்று பெயரெடுக்கும் அளவுக்கு இந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த அனைத்து படங்களும் பிளாப் ஆகிவிட்டன. இருந்தபோதிலும் இவர் ரூ.120 முதல் ரூ.130 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

1010

ஷாருக்கான்

ஷாருக்கான் நடிப்பில் கடந்த சில ஆண்டுகளாக படங்கள் எதுவும் ரிலீசாகாததால், இவர் தற்போதைக்கு ரூ.100 கோடி சம்பளமாக வாங்குகிறாராம். பதான் படம் ரிலீசானதும் தன் சம்பளத்தை உயர்த்த அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... தமிழ் பிக்பாஸ் வரலாற்றில் முதல்முறையாக மணிகண்டா ராஜேஷ் படைத்த சாதனை - எப்புட்ரா என வியந்துபோன ஹவுஸ்மேட்ஸ்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சம்பளம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Samantha: 15 வருஷமா சகிச்சிட்டு இருக்கேன்... கணவர் பற்றி முதல்முறையாக பேசிய சமந்தா...!
Recommended image2
Ethirneechal Thodargiradhu : வாய்விட்டு மாட்டிக்கொண்ட ஜனனி... ஈஸ்வரி போட்ட உத்தரவால் கதிகலங்கிப் போன சக்தி
Recommended image3
Siragadikka Aasai : விஜயா மீது கோபத்தை கொட்டிய ரோகிணி... புது சிக்கலில் மாட்டிக்கொண்ட முத்து
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved