- Home
- Cinema
- Sreeleela: அமரன் படம் பார்த்துட்டு கடும் மன அழுத்தத்துக்கு ஆளானேன்... ஸ்ரீலீலா ஓபன் டாக்!
Sreeleela: அமரன் படம் பார்த்துட்டு கடும் மன அழுத்தத்துக்கு ஆளானேன்... ஸ்ரீலீலா ஓபன் டாக்!
Sreeleela About Amaran movie : அமரன் படத்தை பார்த்த பிறகு நான் கடும் மன அழுத்தத்துக்கு ஆளானேன் என்று நடிகை ஸ்ரீலீலா தெரிவித்துள்ளார். அவர் எதற்காக அப்படி சொன்னார் என்பதைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.

பிசியான நடிகையாக வலம் வரும் ஸ்ரீலீலா
தென்னிந்திய சினிமாவில் பிஸியான நடிகையாக வலம் வருபவர் ஸ்ரீலீலா. சமீபத்தில் ஒரு பேட்டியில் அமரன் படம் குறித்து அவர் பேசிய விஷயங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஸ்ரீலீலா, இன்று தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் தெலுங்கு மட்டுமின்றி பல்வேறு மொழிகளிலும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. விமர்சகர்கள் மட்டுமின்றி பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மமிதா பைஜூ முதல் ஸ்ரீலீலா வரை: 2K ஹிட்ஸ்களின் மனதை கொள்ளை கொண்ட டாப் ஹீரோயின்கள்!
தமிழில் எண்ட்ரி
இந்த ஆண்டு வெளியான பராசக்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாகவும் ஸ்ரீலீலா அறிமுகமானார். படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்றாலும், படத்தில் ஸ்ரீலீலாவின் நடிப்பு ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தமிழில் மேலும் சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். இதற்கிடையே ஸ்ரீலீலா நடிக்கும் மற்றொரு தமிழ் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. தனுஷ் நடிக்கும் ஓ.எம். ஆபரேஷன் மோல் படத்தில் ஸ்ரீலீலா நாயகியாக நடித்துள்ளார். தற்போது இப்படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், அவர் அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது.
அமரன் படம் பார்த்து மிகவும் கஷ்டப்பட்டேன்
பேட்டியில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியின் அமரன் படம் குறித்து பேசிய ஸ்ரீலீலா, படத்தை பார்த்த பின் தான் பட்ட மன வேதனையை பகிர்ந்து கொண்டார். இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியின் அமரன் படத்தை பார்த்த பிறகு நான் கடும் மன அழுத்தத்துக்கு ஆளானேன். என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அந்த அளவுக்கு வலி இருந்தது. அந்த படம் கொடுத்த அனுபவம் மிகவும் கனமாக இருந்தது.
வைரலாகும் ஸ்ரீலீலா பேட்டி
ஒரு படத்தை பார்த்த பிறகு அதன் தாக்கம் நீண்ட நேரம் மனதில் இருக்கும். இந்த படம் நான் எதிர்பார்த்ததை விட நீண்ட நேரம் மனதில் இருந்தது. அதே நபர்களுடன் இணைந்து ஒரு படத்தில் வேலை செய்வேன் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை என்று ஸ்ரீலீலா கூறியுள்ளார். ஸ்ரீலீலாவின் இந்த பேட்டி தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், அமரன் படம் அவருக்கு ஏற்படுத்திய தாக்கம் குறித்து சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
Actress Sreeleela : 'ஆண்கள் மேல ஆசை இல்லை' நடிகை ஸ்ரீலீலா ஓபன் டாக்! ஷாக்கிங் காரணம்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.















