Asianet News TamilAsianet News Tamil

போன் செய்தால் எடுக்க இவ்வளவு நேரமா? கண்டித்த தாய்.. ஆத்திரத்தில் மகள் என்ன செய்தார் தெரியுமா?

நாகை மாவட்டம், மயிலாடுதுறை பகுதியை சேர்ந்தவர் முரளி. தாம்பரம் அருகே சிட்லபாக்கம் பாரதிபுரம் பகுதியில் ஒரு வாடகை வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகள் ஸ்ரீமதி குரோம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார்.

College student suicide in chennai
Author
First Published Dec 20, 2022, 7:29 AM IST

போன் செய்தால் எடுக்க இவ்வளவு நேரமா? என தாய் கண்டித்ததால் கோபத்தில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நாகை மாவட்டம், மயிலாடுதுறை பகுதியை சேர்ந்தவர் முரளி. தாம்பரம் அருகே சிட்லபாக்கம் பாரதிபுரம் பகுதியில் ஒரு வாடகை வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகள் ஸ்ரீமதி குரோம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில், ஸ்ரீமதியை விட்டுவிட்டு முரளி மனைவி, மகனுடன் சொந்த ஊரான மயிலாடுதுறைக்கு சென்றுள்ளனர். 

இதையும் படிங்க;- தடுப்பு சுவரில் மோதல்! சினிமா பாணியில் கார் கதவில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஐடி பெண் ஊழியர் பலி..!

மயிலாடுதுறைக்கு சென்ற பெற்றோர் ஸ்ரீமதியின் செல்போனுக்கு பல முறை தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால், அவர்களது அழைப்பை மகள் எடுக்கவில்லை. பின்னர், சிறிதுநேரம் கழித்து ஸ்ரீமதி அவரின் அம்மாவுக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, கோபத்தில் அம்மா எந்நேரமும் செல்போன் பயன்படுத்திக் கொண்டே இருக்கிறார். ஆனால், நாங்கள் போன் செய்தால் மட்டும் எடுக்க உனக்கு இவ்வளவு நேரமாகிறது என கண்டித்துள்ளார். 

இதனையடுத்து, பேசிக்கொண்டே இருந்த ஸ்ரீமதி உடனே இணைப்பை துண்டித்துள்ளார். பின்னர், பலமுறை போன் செய்தும் ஸ்ரீமதி எடுக்காததால் சந்தேகம் அடைந்த  அவரது தாய் பக்கத்து வீட்டினரை சென்று பார்க்கும்படி கூறியுள்ளனர். அவர்கள் முரளியின் வீட்டுக்கு சென்று பார்த்தபோது, அங்கு ஸ்ரீமதி தூக்கில் தொங்கிய நிலையில் நடலமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்தத போலீசார் ஸ்ரீமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க;- நேரலையில் தற்கொலை.. ஊரை மாற்றிய நாயகன்.. என்ன ஜெயலலிதா உதவியாளர் இப்படி மாறிட்டாரு.!

Follow Us:
Download App:
  • android
  • ios