சவுக்கு சங்கருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்: மதுரை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம்!

By Manikanda Prabu  |  First Published May 8, 2024, 5:03 PM IST

யூடியூபர் சவுக்கு சங்கரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது


கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட யூ ட்யூபர் சவுக்கு சங்கருக்கு மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்துள்ளது

பிரபல யூ டியூபரான சவுக்கு சங்கர், காவல்துறை அதிகாரிகள், பெண் போலீஸார் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கடந்த 4ஆம் தேதி தேனி மாவட்டத்தில் கோவை சைபர் கிரைம் போலீஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tap to resize

Latest Videos

அந்த கைது நடவடிக்கையின் போது போது கஞ்சா வைத்திருந்ததாக சங்கர் உள்ளிட்ட மூவர் மீது தேனி பழனிசெட்டிபட்டி போலீஸார் வழக்குப்பதிந்தனர். அந்த வழக்கில் சவுக்குசங்கர் நேற்று (மே 7) மீண்டும் கைது செய்யப்பட்ட நிலையில், அந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக கோவையிலிருந்து பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு மதுரையில் உள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

TN 10th board exams result 2024 தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 10ஆம் தேதி வெளியீடு!

நீதிபதி செங்கமலச்செல்வன் முன்னிலையில் நடைபெற்ற விசாரணையின் போது, கோவை சிறையில் 10 காவலர்கள் சேர்ந்து தன்னை தாக்கியதாகவும், கோவை சிறையில் தனக்கு பாதுகாப்பில்லை எனவும் கூறி மதுரை சிறைக்கு தன்னை மாற்றுமாறு சவுக்கு சங்கர் கோரிக்கை விடுத்தார்.

வழக்கை விசாரித்த மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம், மே 22ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சவுக்கு சங்கரை சிறையில் அடைக்க உத்தரவிட்டது. இதையடுத்து, கோவை சிறைக்கு சவுக்கு சங்கர் அழைத்து செல்லப்பட்டார். முன்னதாக, சவுக்கு சங்கருக்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்ற வாயிலில் போராட்டம் நடத்திய நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், அவர் அழைத்து செல்லப்பட்ட வாகனம் மீது துடைப்பங்களை வீசி எறிந்து முழக்கமிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!