என் ஐ ஏ அதிகாரி என நடித்து ஏமாற்றிய பாஜக நிர்வாகி.!செல்போன் கடைக்காரரிடம் 20 லட்சம் கொள்ளை.! சிக்கியது எப்படி?
சென்னையில் என்ஐஏ அதிகாரிகள் போல் நடித்து செல்போன் கடை உரிமையாளரின் வீடு மற்றும் கடையில் 20 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த பாஜக நிர்வாகி உள்ளிட்ட 6 பேரை போலீசார் தேடிவந்த நிலையில் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.
என்ஐஏ போலீசார் சோதனை
கோவை குண்டுவெடிப்பை தொடர்ந்து என்ஐஏ போலீசார் சந்தேகத்திற்கு இடமான பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு வந்தனர். குறிப்பாக தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பவர்களும் அவர்களுக்கு ஆதரவாக செயல்படும் நபர்களின் வீடுகளில் என் ஐ ஏ போலீசார் சோதனை மேற்கொண்டு வந்தனர். இதனை பயன்படுத்தி கொள்ளை கும்பல் ஒன்று செல்போன் கடை உரிமையாளர் வீடு மற்றும் கடைகளில் சோதனை நடத்துவது போல் நடித்து 20 லட்சம் ரூபாய் கொள்ளை அடித்து விட்டு தலைமறைவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. சென்னை முத்தியால்பேட்டை மலையப்பன் தெருவில் ஜமால்(40) என்பவர் தனது சகோதரர்களுடன் வசித்து வருகிறார். இவர் பர்மா பஜார் பகுதியில் தனது சகோதரர்களுடன் சேர்ந்து செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார்.
நாங்க கொண்டு வந்த திட்டத்தை இனி எந்த அரசாலும் கொண்டுவர முடியாது.. மார்த்தட்டும் இபிஎஸ்..!
20 லட்சம் கொள்ளையடித்த என்ஐஏ போலீஸ்
இவரது வீட்டிற்கு கடந்த 12 ஆம் தேதி வந்த 6 பேர் கொண்ட கும்பல் மர்மநபர்கள் ஜமாலிடம் தங்களை என்ஐஏ அதிகாரிகள் என்றும், உங்கள் வீட்டை சோதனையிட வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஜமாலின் வீட்டில் இருந்து பத்து லட்ச ரூபாய் எடுத்து சென்ற மர்ம கும்பல், ஜமாலின் செல்போன் கடைக்கு சென்று அங்கிருந்தும் சோதனை என்கிற பெயரில பத்து லட்ச ரூபாயை எடுத்துக் கொண்டு சென்றது. இதனையடுத்து என்ஐஏ போலீசார் சோதனை நடத்தியதாக வெளியான தகவலையடுத்து முத்தியால் பேட்டை போலீசார் ஜமாலிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தன்னிடம் இருந்து 20 லட்சத்தை கொள்ளையடித்து சென்றது என்ஐஏ அதிகாரிகள் இல்லையென்றும் கொள்ளை கும்பல் என தெரியவந்தது.
பாஜகவில் ஐக்கியமான பிரபல ரவுடி டொக்கன் ராஜாவை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்..!
நீதிமன்றத்தில் சரணடைந்த போலி என்ஐஏ
இதனையடுத்து ஜமால் வீடு மற்றும் அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது ராயபுரத்தைச் சேர்ந்தவரும், பாஜக நிர்வாகியுமான வேலு (எ) வேங்கை அமரன், கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த கேஸ் டெலிவரி பணியாளரான புஷ்பராஜ், வீரா (எ) விஜயகுமார், பல்லவன் சாலையைச் சேர்ந்த சப்பரம் தூக்கி பணியாற்றும் கார்த்திக், பல்லவன் சாலை பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தேவராஜ் மற்றும் ரவி என தெரியவந்தது. இதனையடுத்து இந்த கும்பலை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் அந்த 6 பேரும் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.
இதையும் படியுங்கள்
இப்போ புகழ்ந்தது பல்வளத்துறை அமைச்சர்; அடுத்தது என்ன மின்துறை அமைச்சரா? அண்ணாமலை கேள்வி!!