இந்த நாள் விஜய் அண்ணாவுக்கும், அவருடைய ரசிகர்களுக்கும் ரொம்பவே எமோஷனலான நாளாக இருக்க போகிறது என இசையமைப்பாளர் தமன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

விஜய் நடித்துள்ள வாரிசு படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாக உள்ளதால் இப்பாடத்தின் அப்டேட்டுகளும் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளன. ஏற்கனவே இப்படத்தில் இருந்து ரஞ்சிதமே மற்றும் தீ தளபதி என இரண்டு பாடல்கள் வெளியாகி இருந்தன. இந்த இரண்டு பாடல்களுமே பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பி வருகின்றன.

இதற்கு அடுத்தபடியாக தற்போது அப்படத்தில் இருந்து மூன்றாவது பாடலை ரிலீஸ் செய்ய உள்ளனர். முதல் இரண்டு பாடல்கள் குத்துப்பாடல்களாக வெளியிடப்பட்ட நிலையில், இன்று வெளியாக உள்ள soul of varisu பாடல் மிகவும் எமோஷனலான பாடலாக இருக்கும் என்றும், இது அம்மா செண்டிமெண்டை மையமாக வைத்து உருவாக்க பட்டுள்ள பாடல் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்... கிறிஸ்துமஸ் விருந்தாக... தியேட்டர் மற்றும் ஓடிடி-யில் ரிலீசாக உள்ள படங்கள் ஒரு பார்வை

Scroll to load tweet…

இப்பாடல் குறித்து இசையமைப்பாளர் தமன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது : “இந்த நாள் விஜய் அண்ணாவுக்கும், அவருடைய ரசிகர்களுக்கும் ரொம்பவே எமோஷனலான நாளாக இருக்க போகிறது. soul of varisu பாடல் கேட்டதுக்கு அப்புறம் கண்டிப்பாக எல்லாருமே உங்க அம்மாவுக்கு கால் பண்ணுவீங்க. பாடலாசிரியர் விவேக், அவரது பாடல் வரிகள் மூலமாக என்மனதை பலமுறை அழவைத்துவிட்டீர்கள். இயக்குனர் வம்சி லவ் யூ என்று எமோஷனலாக பதிவிட்டுள்ளார் தமன்.

இந்த soul of varisu பாடலை சின்னக்குயில் சித்ரா தான் பாடி உள்ளார். தற்போது வெளியாகி உள்ள இப்பாடலின் புரோமோ வீடியோவில் சித்ராவின் குரலைக் கேட்டு பலரும், நிச்சயம் இந்த பாடல் ஹிட் அடிக்கும் என சொல்லும் அளவுக்கு இருப்பதாக பதிவிட்டு வருகின்றனர். இப்பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.

Scroll to load tweet…

இதையும் படியுங்கள்... படம் பிளாப் ஆனாலும் சம்பள விஷயத்தில் அவர்தான் டாப்... விஜய், அஜித் முதல் ஷாருக் வரை பிரபலங்களின் சம்பள விவரம்