TN 10th board exams result 2024 தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 10ஆம் தேதி வெளியீடு!

By Manikanda Prabu  |  First Published May 8, 2024, 4:53 PM IST

தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 10ஆம் தேதி வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது


தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் இந்த ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 1ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரையும், பிளஸ் 1 பொதுத் தேர்வு மார்ச் 4ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரையும் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெற்றன.

தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 9.10 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். தேர்வுகள் முடிந்ததும் ஏப்ரல் 12 முதல் 22ஆம் தேதி வரை விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெற்றது. இதற்காக தமிழகம் முழுவதும் 88 முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன.  விடைத்தாள் திருத்தும் பணியில் சுமார் 50 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

Tap to resize

Latest Videos

இந்த நிலையில், தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 10ஆம் தேதி வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மே 10ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என கூறப்பட்ட நிலையில், திட்டமிட்டபடியே தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளது.

தமிழ்நாட்டில் 2023-24 கல்வியாண்டுக்கான 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்று முடிந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள அரசு தேர்வுகள் இயக்கத்தில் மே 10ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கில் நாளை மறுநாள் இடைக்கால உத்தரவு: உச்ச நீதிமன்றம்!

அதேசமயம், மாணவர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து https://www.tnresults.nic.in/ https://www.dge.tn.gov.in/ https://results.digilocker.gov.in/ ஆகிய இணையதளங்களிலும் தங்களது தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

மேலும், மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மாணவர்களின் செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி மூலமாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுலவகத்தில் அமைந்துள்ள தேசிய தகவலியல் மையங்கள், அனைத்து மைய, கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.

click me!