தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.இதில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் சபாநாயர் அப்பாவு, அமைச்சர்கள் பொன்முடி, கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, மா. சுப்பிரமணியம், பழனிவேல் தியாகராஜன், மெய்நாதன், செந்தில் பாலாஜி ஆகியோர் மற்றும் எம்.எல்.ஏக்கள் பங்கேற்றுள்ளனர். ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களான வைத்தியலிங்கம் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோருடன் பங்கேற்றுள்ளார். ஆனால் இதில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளவில்லை.
10:41 PM (IST) Aug 15
இளம் வயதிலேயே பிரபல பத்திரிக்கையாளர் கௌஷிக் மாரடைப்பால் மரணமடைந்துள்ளது, திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க
10:40 PM (IST) Aug 15
நயன்தாராவுடன் ஸ்பெயின் நாட்டில் 75 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடிய நயன் - விக்கி ஜோடி தற்போது ரொமான்டிக் புகைப்படம் ஒன்றை வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் படிக்க
10:02 PM (IST) Aug 15
சுதந்திர தினத்தை முன்னிட்டு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கட்சி அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றுவார் என்று நேற்று தெரிவிக்கப்பட்டது.
08:53 PM (IST) Aug 15
வரும் ஆகஸ்ட் 16ம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
08:52 PM (IST) Aug 15
சுதந்திர தினத்தையொட்டி சென்னை அமைந்தகரையில் உள்ள ஏகாம்பரீஸ்வரர் கோயிலில் தமிழக அரசு சார்பில் இன்று சமபந்தி விருந்து நடைபெற்றது.
08:14 PM (IST) Aug 15
08:08 PM (IST) Aug 15
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.
07:07 PM (IST) Aug 15
சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் துணை தலைவர் அன்பழகன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
06:25 PM (IST) Aug 15
தற்போதைய ஆளும் கட்சியினரால் காவல் துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளதால், தமிழகத்தில் கஞ்சா போன்ற போதைப் பொருட்களின் வியாபாரம் கொடிகட்டி பறக்கிறது.
05:36 PM (IST) Aug 15
கன்னியாகுமரி மாவட்டம் குறுந்தன் கோடு ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.மேலும் படிக்க
05:35 PM (IST) Aug 15
கனல் கண்ணன் கைதை கண்டித்து நாளை மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக இந்து முன்னணி கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
05:09 PM (IST) Aug 15
இந்திய தர ஆய்வு நிறுவனத்தில் (பி.ஐ.எஸ்) காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
04:40 PM (IST) Aug 15
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் காலியாக 3,552 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை இரண்டாம் நிலைக் காவலர், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்டப் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இன்றுடன் விண்ணப்பித்திருக்க வேண்டும். மேலும் படிக்க
04:22 PM (IST) Aug 15
75வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில், அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தேசியக்கொடி ஏற்றி மரியாதை செய்தார்.
04:07 PM (IST) Aug 15
'விருமன்' திரைப்படம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியான நிலையில், இந்த படத்திற்கு சிலர் தொடர்ந்து நெகடிவ் விமர்சனங்கள் தெரிவித்து வருவது மட்டும் இன்றி, குறிப்பிட்ட சாதியை இப்படம் தூக்கி பிடிப்பதாக சர்ச்சை கருத்தை முன்வைத்து வருகிறார்கள். மேலும் படிக்க...
03:52 PM (IST) Aug 15
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காலியாக உள்ள 19 பணியிடங்களுக்கு தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. சமையல்காரர், பிளம்பர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விருப்பமுள்ளவரின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் படிக்க
03:39 PM (IST) Aug 15
ஸ்ரீமதியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் புகார் தெரிவித்து மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இது தொடர்பாக உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
02:49 PM (IST) Aug 15
விஜய் சென்ற அதே இடத்திற்கு அஜித் தன்னுடைய படப்பிடிப்பிற்காக செல்ல உள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது. மேலும் படிக்க...
02:48 PM (IST) Aug 15
நடிகை நயன்தாரா... தற்போது தன்னுடைய காதல் கணவர் விக்னேஷ் சிவனுடன் இரண்டாவது முறையாக ஹனிமூனுக்கு சென்றுள்ள நிலையில், நயனின் சோகமான புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. மேலும் படிக்க...
02:48 PM (IST) Aug 15
நடிகர் பாபி சிம்ஹா நடிப்பில் உருவாகி வரும் 'தடை உடை' படப்பிடிப்பு விரைவில் நிறைவடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க...
02:39 PM (IST) Aug 15
கீழ்பென்னாத்தூரில் ஆடி மாதம் முன்னிட்டு அன்னபூரணி அரசு அம்மா கையில் சூலம், தலையில் கிரீடங்களுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
மேலும் படிக்க
02:39 PM (IST) Aug 15
India corona : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 14,917 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் புதிதாக 32 பேர் உயிரிழந்துள்ளனர்மேலும் படிக்க
02:13 PM (IST) Aug 15
தமிழகத்தில் தொடர்ந்து 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க
02:06 PM (IST) Aug 15
வாரிசு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களும், வீடியோக்களும் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் தற்போது மருத்துவமனை ஒன்றில் வாரிசு படத்தின் ஷூட்டிங் நடைபெற்றபோது எடுத்த வீடியோ காட்சி கசிந்துள்ளது. அதில் நடிகர் விஜய் மற்றும் பிரபு ஆகியோர் உயிருக்கு போராடும் ஒருவரை ஸ்ட்ரெச்சரில் படுக்கவைத்து பதறியபடி தள்ளிச் செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ தற்போது இணையத்தில் படு வைரல் ஆகி வருகிறது. மேலும் படிக்க
01:24 PM (IST) Aug 15
மடிக்கணினி வழங்க நடப்பாண்டின் நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கப்படாததால், இத்திட்டம் கைவிடப்படுமோ? என்ற ஐயம் எழுந்துள்ளது. அத்தகைய நடவடிக்கை எதையும் தமிழக அரசு மேற்கொள்ளக் கூடாது. தகுதியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் உடனடியாக மடிக்கணினி வழங்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
01:17 PM (IST) Aug 15
கே.ஜி.எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், சுருதிஹாசன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் சலார் படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.மேலும் படிக்க
01:06 PM (IST) Aug 15
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இருப்பதாக கூறும் முதலமைச்சருக்கு, பட்ட பகலில் வங்கியில் கொள்ளை நடந்ததுது குறித்து எதுவும் தெரிவில்லை. அடுத்த மாதத்தில் தேமுதிக உட்கட்சி தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தேமுதிக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் விஜயகாந்த் தலைமையில் நடைபெறும் என்றும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறினார்மேலும் படிக்க
12:58 PM (IST) Aug 15
பெற்றோர் எச்சரித்ததையடுத்து கள்ளக்காதலை கைவிட்டு திருந்திவாழ்ந்தார். இதனால் ஆத்திரத்தில் கள்ளக்காதலன் பெண்ணின் பெற்றோரை கொல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
12:37 PM (IST) Aug 15
வீடு துடைக்க பயன்படுத்தப்படும் மாப் குச்சியில் தேசிய கொடியை கட்டி பறக்க விட்டு, அதை போட்டோ எடுத்து பதிவிட்ட நடிகர் சூரியை நெட்டிசன்கள் திட்டித்தீர்த்து வருகின்றனர். மேலும் படிக்க
12:09 PM (IST) Aug 15
நாட்டின் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய போர் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
11:57 AM (IST) Aug 15
சென்னை அருகே தனியார் பள்ளியில் சுதந்திர தினவிழாவை கொண்டாடி விட்டு திரும்பி வரும் போது விபத்து ஏற்பட்டுள்ளது. சைக்கிளில் வந்துக்கொண்டிருந்த மாணவி லட்சுமிஸ்ரீ, அரசு மாநகர பேருந்து மோதி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். குரோம்பேட்டை பள்ளியில் பயின்று வரும் மாணவி, இன்று சுதந்திர தினவிழாவை முடித்து, சைக்கிளில் வீடு திரும்பும் போது அஸ்தினாப்புரத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது.மேலும் படிக்க
11:43 AM (IST) Aug 15
சென்னை அருகே தனியார்பள்ளியில் சுதந்திர தினவிழா கொண்டாடி விட்டு திரும்பி வரும் போது பேருந்து மோதி பள்ளி மாணவி பலி . குரோம்பேட்டை பள்ளியில் சுதந்திர தினவிழா முடித்து, சைக்கிளில் வீடு திரும்பும் போது அஸ்தினாப்புரத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது.
11:40 AM (IST) Aug 15
புதிய இந்தியாவின் சவால்களுக்கு மேட் இன் இந்தியா தொழில்நுட்பம் தீர்வுகளை வழங்கும். இந்தியாவில் விரைவில் 5 ஜி சேவை தொடங்கப்படும் என்று 75வது சுதந்திரதின உரையில் பிரதமர் மோடி தெரிவித்தார். விரிவான செய்திகளுக்கு
11:39 AM (IST) Aug 15
அடுத்த 25 ஆண்டுகளுக்கு புதிய இந்தியாவை முன்னோக்கி எடுத்துச் செல்ல 5 முக்கியத் தீர்மானங்களை எடுப்பது அவசியம் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். விரிவான செய்திகளுக்கு
11:36 AM (IST) Aug 15
சென்னை அரும்பாக்கம் ஃபெடரல் வங்கி கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த ஊழியர் முருகன் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே இந்த வழக்கில் பாலாஜி, சக்திவேல், சந்தோஷ் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது திருமங்கலம் காவல்நிலையத்தில் முருகன் சரணடைந்தார். நேற்று முன் தினம், வங்கியில் காவாலாலி குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து, கிளை மேலாளர், ஊழியர் இருவரை அடித்து, கை கால்களை கட்டி போட்டு, 11 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்தனர். கொள்ளையடிக்கப்பட்ட 32 கிலோ தங்கத்தில் இதுவரை 18 கிலோ நகைகள் வரை மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.மேலும் படிக்க
11:01 AM (IST) Aug 15
தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் இந்திய விடுதலை போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியத் தொகை ரூ.18 ஆயிரத்திலிருந்து, ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் குடும்ப ஓய்வூதியம், ரூ.9 ஆயிரத்திலிருந்து, ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று சுதந்திர தின விழா உரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மேலும் படிக்க
11:00 AM (IST) Aug 15
பெரியார் சிலை குறித்து அவதூறு கருத்து கூறிய சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் புதுச்சேரியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
10:34 AM (IST) Aug 15
சென்னை எழும்பூர் அருட்காட்சியகத்தில் காந்தி சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 75 வது சுதந்திர நாளை முன்னிட்டு, சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தேசிய கொடியை முதலமைச்சர் ஏற்றினார். பின்னர் இந்தாண்டிற்கான நல்லாளுமை விருதுகளை வழங்கினார். பின்னர் தமிழக காவல்துறை சார்பில் வழங்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் எழும்பூர் அருட்காட்சியகத்திற்கு வந்த முதலமைச்சர் ஸ்டாலின், அங்கு நிறுவப்பட்டிருந்த மகாத்மா காந்தியின் முழு உருவ சிலை திறந்து வைத்தார்.
10:34 AM (IST) Aug 15
தமிழ் சினிமாவில் பன்முகத்திறமை கொண்ட கலைஞனாக வலம் வரும் எஸ்.ஜே.சூர்யாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.மேலும் படிக்க
10:34 AM (IST) Aug 15
டெல்லி செங்கோட்டையில் இன்று நடந்த ராணுவ வீரர்களின் அணிவகுப்பில், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் மூலம் 21 குண்டுகள் முழங்க மரியாதை செய்யப்பட்டது.விரிவான செய்திகளுக்கு.....