8 ஆம் வகுப்பு படித்திருந்தாலே போதும்.. மாதந்தோறும் ரூ.50,000 வரை சம்பளத்தில் ஊராட்சி ஒன்றியத்தில் வேலை..
கன்னியாகுமரி மாவட்டம் குறுந்தன் கோடு ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
காலி பணியிடங்கள்:
அலுவலக உதவியாளர் , இரவு காவலர் , பதிவு எழுத்தர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
மொத்த பணியிடங்கள்
உதவியாளர் - 03
இரவு காவலர் - 01
பதிவு எழுத்தர் - 01
விண்ணப்பிக்கும் தேதி:
இந்த பதவியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் நாளை மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும்.
மேலும் படிக்க:தேர்வர்களே !! இனி என்னென்ன போட்டி தேர்வுகள் ..? அடுத்து எந்தெந்த அரசு வேலைக்கு ரெடியாகலாம்..? முழு விவரம்
சம்பள விவரம்:
உதவியாளர் பணிக்கு ரூ. 15,700 - ரூ.50,000 வரை ஊதியம் வழங்கப்படும். இரவு காவலர் பணிக்கு ரூ. 15,700 முதல் ரூ.50,000 வரையும் பதிவு எழுத்தர் பணிக்கு ரூ. 15,700 முதல் ரூ.50,000 வரையும் ஊதியம் வழங்கப்படும்.
வயது :
எஸ்.டி மற்றும் எஸ்.சி பிரிவினர் 37 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
MBC/DNC மற்றும் BC பிரிவினருக்கு 34 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். OC பிரிவினருக்கு 32 வயதில் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி :
உதவியாளர் பதவிக்கு 8ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் மிதி வண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
இரவு காவலர் பதவிக்கு தமிழில் எழுதவும் , படிக்கவும் தெரிந்திருந்தால் மட்டுமே போதும்.
பதிவு எழுத்தர் பதவிக்கு 10ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் படிக்க:காவல்துறையில் காலியாக உள்ள 3,552 பணியிடங்கள்.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.. முழு விவரம்
முக்கிய குறிப்பு:
1. விண்ணப்ப படிவத்தில் உள்ள விபரங்களை தவறு இல்லாமல், முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.
2, பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, சாதிச்சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம், விண்ணப்பத்துடன் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.
2. கொடுக்கப்பட்டுள்ள வயது மற்றும் கல்வி தகுதியுள்ள நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும்.
3, தகுதியில்லாத மற்றும் கொடுக்கப்பட்டுள்ள தேதிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
5. எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு.
விண்ணப்ப அனுப்ப வேண்டிய முகவரி:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை உரிய சான்றுகளின் நகல்களுடன் ஆணையாளர், குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேரில் வழங்கலாம்
ஆணையாளர், குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியம், குருந்தன்கோடு அஞ்சல் 629803 வேண்டும் என்ற முகவரிக்கு அனுப்பலாம்.