தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் காலியாக 3,552 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை இரண்டாம் நிலைக் காவலர், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்டப் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இன்றுடன் விண்ணப்பித்திருக்க வேண்டும்.  

காலி பணியிடங்கள்: 

பதவி : இரண்டாம் நிலை காவலர் (Police Constable)

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 3,552

காவல்துறையில் ஆயுதப்படை பிரிவில் மொத்த காலி பணியிடங்கள் - 2,180 (ஆண் – 1,526, பெண்/ திருநங்கை – 654)

தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில் காலி பணியிடங்கள் - 1,091 (ஆண்கள் மட்டும்)

சிறை மற்றும் சீர்திருத்தத்துறை யில் இரண்டாம் நிலைக் காவலர் - 161 (ஆண் – 153, பெண்/ திருநங்கை – 8)

தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் தீயணைப்பாளர் - 120 (ஆண்கள் மட்டும்)

வயது: 

காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள், 18 முதல் 26 வயதிற்குள் இருக்க வேண்டும். பிற்படுத்தபட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிலிருந்து 2 ஆண்டுகள் சலுகை வழங்கப்பட்டுள்ளது. எஸ்.டி மற்றும் எஸ்.சி மற்றும் திருநங்கை பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வரை சலுகை வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் 31 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி : 

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும் 

சம்பள விவரம்: 

இரண்டாம் நிலை காவலர்களுக்கான மாதந்தோறும் ஊதியமாக ரூ.18,200 யிலிருந்து ரூ.67,100 வரை வழங்கப்படும்.

மேலும் படிக்க:தேர்வர்களே !! இனி என்னென்ன போட்டி தேர்வுகள் ..? அடுத்து எந்தெந்த அரசு வேலைக்கு ரெடியாகலாம்..? முழு விவரம்

விண்ணப்பிக்கும் தேதி : 

மேல் குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களுக்கு கடந்த மாதம் 7 ஆம் தேதி முதல் விண்ணப்பப்பதிவு தொடங்கியது. இன்று தான் விண்ணப்பிக்க கடைசி நாள்.

கூடுதல் தகவல்களை தெரிந்துக்கொள்ள https://www.tnusrb.tn.gov.in/pdfs/notification.pdf அல்லது https://www.tnusrb.tn.gov.in/pdfs/informationbrochure.pdf என்ற இணையதள பக்கங்களில் தெரிந்துக்கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை : 

https://www.tnusrb.tn.gov.in/cronlinerecruitment.php என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம் : 

காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கட்டணமாக ரூ.250 செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

எழுத்துத் தேர்வு

இந்த பணியிடங்களுக்கு இரண்டு கட்டங்களாக எழுத்துத் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, முதல் கட்டமாக 80 மதிப்பெண்களுக்கு தமிழ் மொழித் தகுதி தேர்வு நடத்தப்படும். இதில் குறைந்தபட்சம் 32 மதிப்பெண்கள் பெற்றிருந்தால் மட்டுமே, இரண்டாம் கட்ட தேர்வுக்கு தகுதி பெறுவர்.

அதன்படி இரண்டாம் தேர்வில் 70 மதிப்பெண்களுக்கு பொது அறிவு மற்றும் உளவியல் சார்ந்த வினாக்கள் கேட்கப்படும். எழுத்துத் தேர்வு கொள்குறி வகை வினாக்கள் அடங்கியதாக இருக்கும்.

உடற்தகுதி தேர்வு

எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். பின்பு, அதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு உடற்தகுதி தேர்வு நடத்தப்படும். இது 24 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.

இதில் NCC அல்லது NSS அல்லது விளையாட்டில் சிறந்து விளங்குபவர்களுக்கு சிறப்பு மதிப்பெண்களாக தலா 2 மதிப்பெண்கள் என மொத்தம் 6 மதிப்பெண்கள் வழங்கப்படும். எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, மற்றும் சிறப்பு மதிப்பெண்கள் என மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு தேர்வு செயல்முறை இருக்கும். இதில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் பணி ஆணை வழங்கப்படும். 

மேலும் படிக்க:சென்னை ஐஐடியில் டேட்டா சயின்ஸ் படிப்பு - மாணவர்களுக்கு உதவித்தொகை அறிவிப்பு ! எவ்வளவு தெரியுமா ?