சென்னை ஐஐடியில் டேட்டா சயின்ஸ் படிப்பு - மாணவர்களுக்கு உதவித்தொகை அறிவிப்பு ! எவ்வளவு தெரியுமா ?

12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பு முடித்த மாணவர்கள் அனைவரும் விண்ணப்பித்து நான்கு ஆண்டு பட்டப்படிப்பு பயிலலாம். 

Scholarship for Adi Dravidar Students in Data Science Course of IIT Chennai TAHDCO Announcement

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் 12ம் வகுப்பு முடித்ததும் ஐஐடி வழங்கும் தொழில் பாதை திட்டத்தில் சேர்ந்து பயிலலாம். இதுகுறித்து தமிழக அரசு  வெளியிட்டுள்ள அறிக்கையில், 'உலகின் முதல் இளங்கலை தரவு அறிவியலில் பட்டப்படிப்பு திட்டம் மெட்ராஸ் ஐ.ஐ.டி.யால் தொடங்கப்பட்டது. இதில் 12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பு முடித்த மாணவர்கள் அனைவரும் விண்ணப்பித்து நான்கு ஆண்டு பட்டப்படிப்பு பயிலலாம். 

செப்டம்பர் 2022ம் ஆண்டிற்கான வகுப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி தேதி 21 ஆகஸ்ட் 2022.  www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தில் சேர 12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பு முடித்த மாணவர்களுக்கு ஐ.ஐ.டி, மெட்ராஸ் மற்றும் தாட்கோ மூலம் அளிக்கப்படும் 4 வார பயிற்சியின் முடிவில் வரும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதுமானது.

Scholarship for Adi Dravidar Students in Data Science Course of IIT Chennai TAHDCO Announcement

மேலும் செய்திகளுக்கு..மாதம் ரூ.1,500 ஊக்கத்தொகை ! இந்த தேர்வு எழுதினால் போதும்.. மாணவர்கள் விண்ணப்பிப்பது எப்படி?

தகுதி

12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பு (Diploma) தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களாக இருக்க வேண்டும். மாணவர்கள் தங்களது 12ம் வகுப்பு கல்வியில் மொத்த மதிப்பெண்ணில் 60% க்கு மேல் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

10ம் வகுப்பு ஆங்கிலம் மற்றும் கணித பாடத்தில் 60% க்கு மேல் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். தாட்கோவில் பதிவு செய்த மாணவர்கள் சென்னை  ஐஐடி, நடத்தும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

இத்திட்டத்தில் பயில அறிவியல், மனிதவியல் , வணிகவியல் போன்ற அனைத்து பாடப்பிரிவு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் ஒவ்வொரு  நிலையின் முடிவிலும் வெளியேறும் வழிகள் உள்ளன. மேலும் மாணவர்கள் ஒரு அடிப்படைச் சான்றிதழ், ஒன்று அல்லது இரண்டு டிப்ளமோ, அல்லது பட்டப்படிப்புடன் வெளியேறலாம்.

இத்திட்டத்தில் வகுப்புகள் இணையதளம் வழியாகவே நடத்தப்படும். நாடு முழுவதும் உள்ள தேர்வு மையங்களில் தேர்வுகள் நேரில் நடத்தப்படுகின்றன. மாணவர்கள் ஒரே நேரத்தில் தங்களது விருப்ப பட்டப்படிப்பினை படித்துக் கொண்டே  ஐ.ஐ.டி மெட்ராஸ் வழங்கும் Bachelor of Science in Data Science & Applications பட்டப்படிப்பையும் பயிலலாம். 

இந்த பட்டப்டிப்பிற்கான செலவினை தாட்கோ கல்விகடனாக வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிவியல், மனிதவியல், வணிகவியல் போன்ற அனைத்து பாடப்பிரிவு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணம் ரூ.1500 ஆகும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

மேலும் செய்திகளுக்கு..மாதம் 10,000/- ஊக்கத்தொகை.. வேலைவாய்ப்புடன் பட்டப்படிப்பு - தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios