independence day: modi அடுத்த 25 ஆண்டுகளுக்கு 5 முக்கியத் தீர்மானங்கள்: இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
அடுத்த 25 ஆண்டுகளுக்கு புதிய இந்தியாவை முன்னோக்கி எடுத்துச் செல்ல 5 முக்கியத் தீர்மானங்களை எடுப்பது அவசியம் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
அடுத்த 25 ஆண்டுகளுக்கு புதிய இந்தியாவை முன்னோக்கி எடுத்துச் செல்ல 5 முக்கியத் தீர்மானங்களை எடுப்பது அவசியம் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
நாட்டின் 75-வது சுதந்திரதின விழா மிகுந்த உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் தங்கள் வீடுகளில், கடைகளில், வர்த்தக இடங்களிலும் தேசியக் கொடிகளை ஏற்றி மரியாதை செலுத்தி, மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார்கள்.
அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள்,மருத்துவமனைகள், தொழிற்சாலைகளில் தேசியக் கொடி பறக்கவிடப்பட்டு வருகிறது.
விரைவில் 5ஜி மொபைல் சேவை : பிரதமர் மோடி உறுதி
டெல்லி செங்கோட்டையில் 9-வது முறையாகத் தேசியக் கொடியை ஏற்றி வைத்த, பிரதமர் மோடி, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதன்பின் பிரதமர் மோடி மக்களுக்கு உரையாற்றி பேசியதாவது:
அடுத்த 25 ஆண்டுகளில் தேசத்தை வளர்ந்தநாடாக மாற்ற வேண்டும். 100-வதுசுதந்திரதின விழாவில், நம்முடைய தேசத்துக்கு சுதந்திரம் பெற்றுத் தந்த தியாகிகள் என்ன கனவு கண்டார்களோ அதை நிறைவேற்ற வேண்டும்.
அடுத்த 25 ஆண்டுகளை இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை நாட்டின் முன்னேற்றத்துக்காக அர்ப்பணிக்க வேண்டும். ஒட்டுமொத்த மனித சமுதாயத்தின் மேம்பாட்டுக்காகவும் நாம் உழைக்க வேண்டும். இதுதான் இந்தியாவின் வலிமை.
ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மக்கள் ஆசீர்வாதம் தேவை.. பிரதமர் மோடி..!
இந்தியா 100வது சுதந்திரன விழாவுக்காக, நாம் நம்முடைய இலக்குகளை நிர்ணயித்து, அதை நோக்கி நாம் நடைபோட வேண்டும். அடுத்த 25 ஆண்டுகளுக்கு 5முக்கிய தீர்மானங்களை வகுத்து அதை நோக்கி நாம் நகர வேண்டும்.
இந்தியாவை வளர்ந்தநாடாக மாற்ற வேண்டும், ஒவ்வொரு மட்டத்திலும் இருக்கும் அடிமைத் தனத்தைக் களைய வேண்டும், நாட்டின் பாரம்பரியத்தில் நாம் பெருமை கொள்ள வேண்டும், ஒற்றுமையாக இருக்கவேண்டும், ஒவ்வொருவரும் தங்கள் கடமையை நிறைவேற்ற வேண்டும். இந்த 5 தீர்மானங்களை இளைஞர்கள் எடுக்க வேண்டும். 130 கோடி இந்தியர்களின் மனவலிமை, தீர்க்கமான எண்ணம் ஆகியவற்றால் நிச்சயம் இது சாத்தியமாகும்.
டெல்லி செங்கோட்டை அணிவகுப்பில், முதல்முறையாக ‘மேட் இன் இந்தியா’ துப்பாக்கி மூலம் மரியாதை
நம்முடைய பன்முகத்தன்மையில் பலம் இருக்கிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தேச பக்தியை அசைத்துக்கூடப் பார்க்க முடியாது. இந்த உலகம் இந்தியாவை பிரச்சினை தீர்க்கும் நாடாக, பெருமையாக, நம்பிக்கையின் அடையாளமாகப் பார்க்கிறது. தங்களுடைய எண்ணங்களை, ஆசைகளை நிறைவேற்றும் இடமாக இந்தியாவை உலகம் பார்க்கிறது.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்
- 2022 Independence Day 2022
- 75th Independence Day
- 75th Independence Day Quotes
- Happy Independence Day
- Happy Independence Day wishes
- Independence Day
- Independence Day 2022
- Independence Day August 15 2022
- Independence Day Drawing
- Independence Day Live News
- Independence Day Posters
- Independence Day Quotes
- Independence Day Updates
- Independence Day Wishes
- pm modi
- narendra modi