Asianet News TamilAsianet News Tamil

சென்னையில் வங்கி கொள்ளை.. 72 மணி நேரத்தில் முக்கிய குற்றவாளி கைது.. 18 கிலோ தங்கம் மீட்பு.. நடந்தது என்ன..?

சென்னை அரும்பாக்கம் ஃபெடரல் வங்கி கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த  ஊழியர் முருகன் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே இந்த வழக்கில் பாலாஜி, சக்திவேல், சந்தோஷ் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது திருமங்கலம் காவல்நிலையத்தில் முருகன் சரணடைந்ததாகவும் காவல்துறையினர் சுற்றிவளைத்து கைது செய்ததாகவும் இறு வேறு தகவல் வெளியாகியுள்ளது.நேற்று முன் தினம், வங்கியில் காவலாளி குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து, கிளை மேலாளர், ஊழியர் இருவரை அடித்து, கை கால்களை கட்டி போட்டு, ரூ.11 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்தனர். 

Bank Robbery in Chennai - Main Culprit Arrested
Author
Chennai, First Published Aug 15, 2022, 12:48 PM IST

சென்னை அரும்பாக்கம் ஃபெடரல் வங்கி கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த  ஊழியர் முருகன் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே இந்த வழக்கில் பாலாஜி, சக்திவேல், சந்தோஷ் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது திருமங்கலம் காவல்நிலையத்தில் முருகன் சரணடைந்ததாகவும் காவல்துறையினர் சுற்றிவளைத்து கைது செய்ததாகவும் இறு வேறு தகவல் வெளியாகியுள்ளது.நேற்று முன் தினம், வங்கியில் காவலாளி குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து, கிளை மேலாளர், ஊழியர் இருவரை அடித்து, கை கால்களை கட்டி போட்டு, 11 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்தனர். 

கொள்ளையடிக்கப்பட்ட 32 கிலோ தங்கத்தில் இதுவரை 18 கிலோ நகைகள் வரை மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். வங்கி கொள்ளை நடந்து 72 மணி நேரத்தில் கொள்ளையில் ஈடுபட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான முருகன் திருமங்கலம் காவல்நிலையத்தில் இன்று சரணடைந்ததாகவும் காவல்துறயினர் முருகனை சுற்றி வளைத்து பிடித்ததாகவும் இருவேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை எந்த தகவலும் உறுதிப்படுத்தப்பட வில்லை.

மேலும் படிக்க:பட்ட பகலில் வங்கியில் நகை கொள்ளை.. திட்டம் போட்டு காய் நகர்த்திய கும்பல்..? காவல்துறை சொன்ன முக்கிய தகவல்

சென்னை அரும்பாக்கம் ரசாக் கார்டன் பிரதான சாலையில் உள்ள ஃபெட் பேங்க் ஃபாஸ்ட் கோல்டு லோன் என்ற தனியார் வங்கியில் சனிக்கிழமை கொள்ள சம்பவம் நடந்தேறியது. இந்த வங்கியிலேயே வாடிக்கையாளர் சேவை மையத்தில் மேலாளராக பணியாற்றிய முருகன், தனது கூட்டாளிகளுடன் சேர்த்து இந்த கொள்ளை சம்பவத்தை நடத்தியுள்ளார். அன்று வங்கியில் பணியில் இருந்த கிளை மேலாளர் சுரேஷ் மற்றும் ஊழியர் விஜயலெட்சுமி ஆகியோர் கத்தி காட்டி மிரட்டி,பாதுகாப்பு பெட்டக அறையின் சாவி வாங்கி 11 கோடி மதிப்பிலான 32 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பித்துயுள்ளார்.

பாதுகாப்பு பணியில் இருந்த காவாளி சரவணனுக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்து விட்டு, வங்கிக்குள் நுழைந்து இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். மேலும் தப்பி சென்ற கொள்ளை கும்பல் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.  வங்கி கொள்ளை குறித்து தகவல் கொடுக்கும் காவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ரூ.1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றும் டிஜிபி சைலேந்திரபாபு அறிவித்திருந்தார்.

மேலும் படிக்க:Tamil News live : சென்னை வங்கி கொள்ளை.. முக்கிய குற்றவாளி கைது...

இதனிடையே கொள்ளைவழக்கில் தேடப்பட்டு வந்த முருகனின் கூட்டாளிகள் பாலாஜி, சக்திவேல், சந்தோஷ் ஆகிய மூவரும் நேற்று கைது செய்யப்பட்டனர். மேலும் இவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட 32 கிலோவில், 18 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டன. மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் ரகசிய இடத்தில் வைத்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை அரும்பாக்கம் ஃபெடரல் வங்கி கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி முருகன் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே இந்த வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது திருமங்கலம் காவல்நிலையத்தில் முருகன் சரணடைந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். 

மேலும் படிக்க:சென்னை தனியார் வங்கியில் ஊழியர்களை கட்டிப்போட்டு பணம் கொள்ளை... அதிர்ச்சி தரும் முதற்கட்ட தகவல்!!

Follow Us:
Download App:
  • android
  • ios