பிரபல விஜே மற்றும் சினிமா விமர்சகர் கௌஷிக் இளம் வயதில் மாரடைப்பால் மரணம்!

இளம் வயதிலேயே பிரபல பத்திரிக்கையாளர் கௌஷிக் மாரடைப்பால் மரணமடைந்துள்ளது, திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

famous vj and cinema reviewer sudden death in heart attack

சினிமா துறையில் ஒரு பத்திரிகையாளராக தன்னை தனித்துவமான ஆற்றலுடன் வெளிக்காட்டுவது எளிதான விஷயம் அல்ல. அந்த வகையில், சிறந்த பத்திரிகையாளர், சினிமா விமர்சகர், மற்றும் விஜே  என தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி, சமூக வலைத்தளத்தில் தனக்கென நிறைய ஃபாலோவர்ஸை வைத்திருப்பவர், கௌஷிக். இவர் 'கலாட்டா' என்கிற தனியார் இணையதளத்தில் விஜே-வாகவும் பணியாற்றி வருகிறார்.

famous vj and cinema reviewer sudden death in heart attack

சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் இவருக்கு 35 வயதே ஆகும் நிலையில், திடீர் என...  இன்று மதியம் 12 மணியளவில் கௌஷிக் மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம், பத்திரிகையாளர்களை மட்டும் இன்றி, பல பிரபலங்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இவர் சிலமணி நேரத்திற்கு முன்பு கூட, சீதா ராமம் படம் மற்றும் பிரபாஸின் சலார் படத்தின் அப்டேட் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது மரணம் குறித்து அறிந்த நடிகர் கெளதம் கார்த்திக் உள்ளிட்ட பிரபலங்கள் சமூக வலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்து, இவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios