MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • விஜய்யைவிட பணக்காரியா? சங்கீதா-வின் சொத்து மதிப்பு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

விஜய்யைவிட பணக்காரியா? சங்கீதா-வின் சொத்து மதிப்பு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா சினிமா பக்கம் தலைகாட்டாமல் இருந்தாலும் அவருக்கு ஏராளமான சொத்துக்கள் இருக்கின்றன. அவரின் சொத்து மதிப்பு பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 28 2026, 08:15 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Sangeetha Vijay Net Worth
Image Credit : facebook

Sangeetha Vijay Net Worth

நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளது தான் தற்போது தமிழ்நாட்டில் ஹாட் டாபிக்காக உள்ளது. நடிகர் விஜய்க்கும் நடிகை ஒருவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகவும், அதை தான் கையும் களவுமாக பிடித்து விட்டதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ள சங்கீதா, கடந்த சில ஆண்டுகளாக விஜய்யை பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் கூறி இருக்கிறார். செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் இந்த விவாகரத்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கு வருகிற ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி விசாரணைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விஜயின் மனைவி சங்கீதா சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகி இருக்கிறது.

25
யார் இந்த சங்கீதா?
Image Credit : facebook

யார் இந்த சங்கீதா?

சங்கீதா இலங்கைத் தமிழர் ஆவார். இவரது தந்தை சொர்ண லிங்கம் இங்கிலாந்தில் மிகப்பெரிய தொழிலதிபராக வலம் வருகிறார். அங்கு ஏற்றுமதி - இறக்குமதி பிசினஸ் செய்து வரும் அவருக்கு எக்கச்சக்கமான சொத்துக்களும் உள்ளன. விஜயின் தீவிர ரசிகையான சங்கீதா, ஒருமுறை விஜயை பார்க்க சென்னைக்கு வந்து சூட்டிங் ஸ்பாட்டில் அவரை சந்தித்து பேசி இருக்கிறார். தனக்காக வெளிநாட்டில் இருந்து வந்திருப்பதை அறிந்த விஜய் அவருடன் பேசுகையில் முதல் சந்திப்பிலேயே இருவருக்கும் பிடித்துப் போனது. இதையடுத்து இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

Related Articles

Related image1
சங்கீதா முடிவின் பின்னணியில் அரசியல் சதி?.. விஜய்யை முடக்கும் 'மெகா' கட்சி?.. தவெகவினர் புலம்பல்!
Related image2
திருமணத்தை மீறிய உறவை தட்டிக்கேட்டதால் தண்டனை அனுபவிக்கிறேன் : மன வேதனையுடன் விவாகரத்து கோரிய சங்கீதா விஜய்!
35
காதல் டூ கல்யாணம்
Image Credit : instagram

காதல் டூ கல்யாணம்

இவர்களின் காதல் விவகாரம் வீட்டுக்கு தெரிந்ததை அடுத்து முறைப்படி பேசி கடந்த 1999 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். கிறிஸ்தவ முறைப்படி இவர்களது திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் உறவினர்கள் நண்பர்கள், திரையுலக பிரபலங்கள் மட்டுமின்றி விஜயின் ரசிகர்களும் கலந்து கொண்டனர். விஜய் - சங்கீதா ஜோடிக்கு ஜேசன் சஞ்சய் என்கிற மகனும், திவ்யா ஷாஷா என்கிற மகளும் உள்ளனர். இதில் ஜேசன் சஞ்சய் தற்போது சினிமாவில் இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவர்களது மகள் திவ்யா லண்டனில் படித்து வருகிறார்.

45
சங்கீதா சொத்து மதிப்பு
Image Credit : instagram

சங்கீதா சொத்து மதிப்பு

நடிகர் விஜய் சினிமா மூலம் கோடி கோடியாய் சம்பாதித்து 600 கோடிகளுக்கு மேல் சொத்துக்களை குவித்து வைத்துள்ளார். விஜய் திருமணம் செய்து கொள்ளும்போது அவரை விட அதிகளவு சொத்து மதிப்பு கொண்டவராக இருந்திருக்கிறார் சங்கீதா. ஆனால் சமீபத்திய காலகட்டத்தில் விஜயின் மார்க்கெட் பன்மடங்கு உயர்ந்து ஒரு படத்துக்கு 200 கோடி சம்பளம் வாங்கும் அளவுக்கு உயர்ந்து விட்டார். இதன் காரணமாகவே விஜய்யோடு ஒப்பிடுகையில் சங்கீதாவின் சொத்து மதிப்பு சற்று குறைவாக இருக்கிறது. அவரின் சொத்து மதிப்பு 400 கோடிக்கு மேல் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

55
விஜய்க்கு பின்னடைவு
Image Credit : instagram

விஜய்க்கு பின்னடைவு

தற்போது சங்கீதா விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளது மட்டுமின்றி நடிகர் விஜய் மீது அடுக்கடுக்கான புகார்களையும் கூறி இருக்கிறார். அவருக்கு நடிகையுடன் இருந்த தவறான உறவை தட்டிக் கேட்டதால் தன்னை ஹவுஸ் அரஸ்ட் செய்து வைத்ததாகவும் குற்றச்சாட்டு முன் வைத்துள்ளார் சங்கீதா. இந்த விவாகரத்து வழக்கால் விஜய்யின் அரசியல் கெரியரும் சற்று அடி வாங்கும் என இணையவாசிகள் கூறி வருகின்றனர். குறிப்பாக வருகிற சட்டமன்றத் தேர்தலில் பெண்களின் வாக்குகளை விஜய் கவருவது கடினம் என்கிற பேச்சுக்கள் எழத் தொடங்கி இருக்கின்றன.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
கார்த்திகை தீபம் இன்றைய கூத்து: லாஜிக் மீறிய புதையல் வேட்டை! சந்திரகலா விரித்த வலையில் சிக்குவது யார்?
Recommended image2
லாஜிக் இல்லா மேஜிக் – புதையலை வைத்து டிராமா போட்ட இயக்குநர் – சந்திரகலாவின் டபுள் மாஸ்டர் பிளான் – கார்த்திகை தீபம்!
Recommended image3
விஜியை குறிவைக்கும் சுந்தரபாண்டியன் - லாவண்யா கூட்டணி! நடுவில் சிக்கித் தவிக்கும் விஜி - செல்லமே செல்லமே அதிரடி!
Related Stories
Recommended image1
சங்கீதா முடிவின் பின்னணியில் அரசியல் சதி?.. விஜய்யை முடக்கும் 'மெகா' கட்சி?.. தவெகவினர் புலம்பல்!
Recommended image2
திருமணத்தை மீறிய உறவை தட்டிக்கேட்டதால் தண்டனை அனுபவிக்கிறேன் : மன வேதனையுடன் விவாகரத்து கோரிய சங்கீதா விஜய்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved