First OTT platform in India: இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட முதல் ஓடிடி தளம் எது தெரியுமா?
First OTT platform in India : நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வருவதற்கு முன்பே இந்தியாவில் ஓடிடி வந்தாச்சு. 2008-ல ஆரம்பிக்கப்பட்ட அந்த ஓடிடி தளம் மூலமா ஆன்லைன் சினிமா ஸ்ட்ரீமிங் ஆரம்பமாகிடுச்சு.

First OTT platform in India
நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோலாம் இந்தியாவுக்கு வர்றதுக்கு முன்னாடியே ஆன்லைன்ல படம் பார்க்குற பழக்கம் இங்க ஆரம்பிச்சிருச்சு. ஆமாங்க, இந்தியாவில ஓடிடி மாதிரி டிஜிட்டல் சினிமா ஸ்ட்ரீமிங்குக்கு முதல் அடி எடுத்து வச்ச நிறுவனம் எதுனு தெரியுமா? கேட்டா நீங்களே ஆச்சரியப்படுவீங்க!
ஒரு காலத்துல படம் பார்க்கணும்னா தியேட்டருக்கு தான் போகணும், இல்லனா டிவியில போடுற வரைக்கும் காத்திருக்கணும். ஆனா இப்போ காலம் மாறிடுச்சு. கையில இருக்குற ஸ்மார்ட்போன் இல்லனா வீட்ல இருக்குற ஸ்மார்ட் டிவியை ஆன் பண்ணா போதும், புடிச்ச படத்தை எப்ப வேணும்னாலும் பார்க்கலாம்.
இன்னைக்கு நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, ஆஹா, ஜியோ ஹாட்ஸ்டார்னு பல ஓடிடி தளங்கள் நம்ம அன்றாட பொழுதுபோக்கின் ஒரு அங்கமாகவே மாறிடுச்சு. தியேட்டர்ல ரிலீஸ் ஆகுற படங்கள் சில வாரங்கள்லயே ஓடிடிக்கு வந்துடுது. படங்களோட வெப் சீரிஸ், டாக்குமெண்டரி, ஒரிஜினல் கன்டென்ட்னு ரசிகர்களை கவர்ந்திழுக்குது.
ஆனா இவ்வளவு பிரபலமான இந்த ஓடிடி உலகத்துக்கு இந்தியாவில முதல் விதை எப்போ போட்டாங்க? நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோவுக்கு முன்னாடியே இந்திய ரசிகர்களுக்கு ஆன்லைன் சினிமா அனுபவத்தை கொடுத்த நிறுவனம் எதுங்கிற ஆர்வம் இப்போ பலருக்கும் வந்திருக்கு.
2008-லேயே ஆரம்பமான டிஜிட்டல் சினிமா முயற்சி!
இந்தியாவில டிஜிட்டல் வீடியோ மார்க்கெட் வளருறதுக்கு முன்னாடியே சில நிறுவனங்கள் ஆன்லைன் மூலமா படங்களை கொண்டு சேர்க்குற முயற்சியில இறங்குனாங்க. இதுல முக்கியமா அடிபடுற பெயர் ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட்.
2008-ல ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம், பிக்ஃப்ளிக்ஸ் (BIGFLIX) அப்படிங்கிற பெயர்ல வீடியோ ஆன் டிமாண்ட் சேவையை தொடங்குனாங்க. இன்னைக்கு இருக்குற ஓடிடி தளம் மாதிரி இது முழுமையான தளமா இல்ல. ஆனா இன்டர்நெட் மூலமா படங்களை ரசிகர்கள்கிட்ட கொண்டு சேர்க்குற முயற்சியா, இது இந்தியாவோட டிஜிட்டல் என்டர்டெயின்மென்ட் துறையில ஒரு முக்கியமான ஆரம்பமா இருந்துச்சு.
இன்னைக்கு ஓடிடினா நெட்ஃபிக்ஸ் இல்லனா அமேசான் பிரைம் வீடியோ தான் டக்குனு ஞாபகம் வரும். ஆனா இந்த தளங்கள் இந்தியாவில பெரிய அளவுல பிரபலமாகுறதுக்கு முன்னாடியே பிக்ஃப்ளிக்ஸ் இந்திய ரசிகர்களுக்கு டிஜிட்டல் மூலமா படம் பார்க்குற ஐடியாவை அறிமுகப்படுத்திடுச்சு.
தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளுக்கு முக்கியத்துவம்
படங்களை இன்டர்நெட் மூலமா ரசிகர்கள்கிட்ட கொண்டு சேர்க்குறது தான் பிக்ஃப்ளிக்ஸோட முக்கிய நோக்கம். ஹிந்தியோட சேர்ந்து தமிழ், தெலுங்குனு பல இந்திய மொழி படங்களை ஆன்லைன்ல கிடைக்க செய்ற முயற்சியும் நடந்துச்சு. ஆனா அப்போ இருந்த நிலைமை வேற. 2008 முதல் 2012 வரைக்கும் இந்தியாவில இன்டர்நெட் பயன்பாடு இப்போ இருக்குற அளவுக்கு பரவலா இல்ல. பல இடங்கள்ல 2G கனெக்ஷன் தான் சாதாரணமா இருந்துச்சு. 3G கூட எல்லாருக்கும் ஈஸியா கிடைக்கல. அதைவிட முக்கியமா மொபைல் டேட்டா ரொம்ப காஸ்ட்லியா இருந்துச்சு.
இன்னைக்கு மாதிரி சில நூறு ரூபாய்க்கு பெரிய டேட்டா இல்லனா அன்லிமிடெட் டேட்டா பேக்லாம் அப்போ இல்ல. இன்டர்நெட் ஸ்பீடும் கம்மி தான். இதனால ஆன்லைன்ல ஒரு படம் பார்க்குறதே பெரிய சவாலா இருந்துச்சு. வீடியோ பிளே பண்ணா முதல்ல பஃபர் ஆகும். கொஞ்ச நேரம் பிளே ஆனதும் திரும்ப நிற்கும். திரும்ப லோட் ஆகும். அதுலயும் HD கன்டென்ட்டை ஆன்லைன்ல ஸ்ட்ரீம் செய்றது அப்போ இருந்த நெட்வொர்க் நிலைமையில ஈஸியான காரியமா இல்ல.
ஓடிடி வளர இன்டர்நெட் புரட்சி தான் காரணம்!
இன்னைக்கு இருக்குற ஓடிடி தளங்கள் மாதிரி அந்த சமயத்துல பெரிய அளவிலான ஒரிஜினல் வெப் சீரிஸ்கள், பிக் பட்ஜெட் ஷோக்கள் இல்லனா எக்ஸ்க்ளூசிவ் கன்டென்ட்கள்லாம் இல்ல. இதனால பிக்ஃப்ளிக்ஸ் மாதிரி ஆரம்பகால டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் முயற்சிகள் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வெற்றியை பார்க்க பல சவால்களை சந்திக்க வேண்டியதா போச்சு.
ஆனா அதுக்கப்புறம் இந்தியாவில இன்டர்நெட் பயன்பாடு வேகமா அதிகமாச்சு. ஸ்மார்ட்போன்களோட பயன்பாடு அதிகமாச்சு. கம்மி விலையில டேட்டா பேக் கிடைச்சுது. இன்டர்நெட் ஸ்பீடும் சூப்பராச்சு. இதோட விளைவா இந்தியாவில ஓடிடி துறைக்கு ஒரு புது பாதை கிடைச்சுது. ஒண்ணு பின்னாடி ஒண்ணா பல ஓடிடி தளங்கள் மார்க்கெட்டுக்கு வந்துச்சு. இன்னைக்கு படங்கள்ல ஆரம்பிச்சு வெப் சீரிஸ் வரைக்கும் எல்லாத்தையும் வீட்லயே உக்காந்து பார்க்குற அளவுக்கு ஓடிடி பொழுதுபோக்கு உலகம் பிரம்மாண்டமா வளர்ந்திருக்கு.
இதனால, இன்னைக்கு நாம நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோனு பல ஓடிடி தளங்களை நினைச்சு பார்த்தாலும், இந்தியாவில இன்டர்நெட் மூலமா படம் பார்க்குற முயற்சி ரொம்ப காலத்துக்கு முன்னாடியே ஆரம்பமாகிடுச்சுங்கிறது தான் உண்மை.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.













