- Home
- Cinema
- OTT Releases : ஜெயிலர் 2 முதல் அன்பில் அவன் வரை... இந்த வாரம் ஓடிடி-யில் என்னென்ன படங்கள் மற்றும் வெப் சீரிஸ் ரிலீஸ்?
OTT Releases : ஜெயிலர் 2 முதல் அன்பில் அவன் வரை... இந்த வாரம் ஓடிடி-யில் என்னென்ன படங்கள் மற்றும் வெப் சீரிஸ் ரிலீஸ்?
This Week OTT Releases : ஓடிடி தளங்களில் வார வாரம் புதுப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் போட்டிபோட்டு ரிலீஸ் ஆவது வழக்கம். அந்த வகையில் இந்த வாரம் என்னென்ன புது வரவுகள் வருகின்றன என்பதை பார்க்கலாம்.

This Week OTT Releases
ஓடிடி தளங்கள் அசுர வளர்ச்சி அடைந்துள்ளதால், வார வாரம் அதில் புதுப் படங்களும் ரிலீஸ் ஆகி வருகின்றன. எவ்வளவு பெரிய உச்ச நடிகரின் படமாக இருந்தாலும் ரிலீஸ் ஆன 28 நாட்களில் ஓடிடிக்கு வந்துவிடுகிறது. இதனால் ஓடிடியில் படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தியேட்டரில் மிஸ் ஆன படங்களைக் கூட ஓடிடியில் பார்த்துக் கொள்ளலாம் என்கிற மனநிலைக்கு படிப்படியாக மக்கள் மாறி வருகின்றன. இதனால் ஓடிடி தளங்களில் ரிலீஸ் ஆகும் படங்களின் எண்ணிக்கையும் ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. அந்த வகையில் இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆன படங்கள் மற்றும் வெப் தொடரின் பட்டியலை பார்க்கலாம்.
ஜெயிலர் 2
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் ஜெயிலர் 2. இப்படத்தை நெல்சன் இயக்கி இருக்கிறார், கலாநிதி மாறன் தயாரித்துள்ளார். ஜெயிலர் 2 திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 830 கோடிக்கு மேல் வசூலித்து திரையரங்குகளில் வெற்றிநடைபோட்டு வரும் நிலையில், இன்று (நவம்பர் 12) முதல் ஓடிடியில் ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் பார்க்கலாம். இப்படத்தின் டிஜிட்டல் உரிமம் மட்டும் ரூ.160 கோடிக்கு விற்பனையாகி இருந்தது.
ரணபாலி
ராஷ்மிகா மந்தனாவும், விஜய் தேவரகொண்டாவும் திருமணத்துக்கு பின்னர் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்த படம் ரணபாலி. இப்படத்தை ராகுல் சங்க்ரித்யன் இயக்கி இருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன இப்படம் ஜெயிலர் 2 புயலில் சிக்கி சின்னாபின்னமானது. இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டாலும் வசூலில் பலத்த அடிவாங்கியது. இப்படம் தற்போது ஓடிடி ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. நவம்பர் 13ந் தேதி இப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அன்பில் அவன்
கார்த்திகேயன் என்கிற புதுமுக இயக்குநரின் இயக்கத்தில் அசோக் செல்வன் ஹீரோவாக நடித்த படம் அன்பில் அவன். இப்படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் நடித்திருந்தார். ரொமாண்டிக் ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவான இப்படம் திரையரங்கில் ரிலீஸ் ஆனபோது பெரியளவில் கொண்டாடப்படவில்லை. இந்த நிலையில், இப்படத்தை ஓடிடிக்கு கொண்டு வந்துள்ளனர். இப்படம் நவம்பர் 13ந் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஓடிடியில் ரிலீஸ் ஆகும் வெப் சீரிஸ்
பவர் புக் என்கிற திகில் வெப் தொடர் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. அதேபோல் தி ரிங் ஆஃப் பவர் என்கிற ஆங்கில் வெப் தொடர் அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீஸ் ஆகி உள்ளது. இதோடு மர்டர் இன் கேலிசியா என்கிற ஆங்கில வெப் சீரிஸ் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் நவம்பர் 13ந் தேதி முதல் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. மேலும் மஸ்ட் டேட் தி பிளே பாய் என்கிற தமிழ் வெப் சீரிஸ் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் ஆகிறது.
ஓடிடியில் ரிலீஸ் ஆகும் பிற மொழி படங்கள்
ஹாப்பி ஜர்னி என்கிற தெலுங்கு படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது. இதுதவிர பந்த்ரா என்கிற மலையாள படம் ஜீ5 ஓடிடியிலும், தி தேர்டு மர்டர் என்கிற மலையாள திரைப்படம் நேரடியாக மனோரமா மேக்ஸ் ஓடிடியிலும் நவம்பர் 13ந் தேதி ரிலீஸ் ஆகிறது. டாய்ரா என்கிற இந்திப் படம் நெட்ஃபிளிக்ஸிலும், ஹார்ட் லேண்ட் என்கிற ஆங்கிலப் படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியிலும் 13ந் தேதி முதல் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.













