Arasan Anirudh : வெற்றிமாறன் உடன் மோதல்?... அரசன் படத்தில் இருந்து விலகினாரா அனிருத்?
Anirudh Quits Arasan Movie? வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்கும் அரசன் படத்தில் இருந்து அனிருத் விலகியதாக தகவல் பரவி வருகிறது. அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.

Anirudh Quits Arasan Movie?
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத் ரவிச்சந்தர். இவரது இசையில் வெளியாகும் பாடல்களும் பின்னணி இசையும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. இந்நிலையில், சிலம்பரசன் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கி வரும் ‘அரசன்’ திரைப்படத்தில் அனிருத் இசையமைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அவர் இந்தப் படத்திலிருந்து விலகிவிட்டதாக வெளியாகியுள்ள தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் ராக்ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அனிருத், விஜய், அஜித், ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவரது பாடல்கள் மட்டுமின்றி, படங்களின் வெற்றிக்கு வலுசேர்க்கும் பின்னணி இசையும் தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளது. அந்த வகையில், சிலம்பரசன் மற்றும் அனிருத் முதன்முறையாக இணையும் திரைப்படமாக ‘அரசன்’ அறிவிக்கப்பட்டதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்தது.
வெற்றிமாறன் - சிலம்பரசன் கூட்டணியில் அரசன்!
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் ‘அரசன்’. கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படம், தனுஷ் நடிப்பில் வெளியான ‘வட சென்னை’ திரைப்படத்தின் கதைக்களத்துடன் தொடர்புடைய பின்னணியைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, வட சென்னை உலகத்துடன் தொடர்புடைய சில கதாபாத்திரங்களும் இப்படத்தில் இடம்பெறுவதாக வெளியாகியுள்ள தகவல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளன. வெற்றிமாறனின் தனித்துவமான இயக்கமும், சிலம்பரசனின் அதிரடியான நடிப்பும் இணைவதால் இப்படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.
அரசன் படத்திலிருந்து அனிருத் விலகினாரா?
இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்ற தகவல் வெளியானது ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தைக் கொடுத்தது. சிலம்பரசன் - அனிருத் கூட்டணியில் உருவாகும் முதல் திரைப்படம் என்பதால் பாடல்கள் மற்றும் பின்னணி இசை குறித்த எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்தது.
இந்நிலையில், தற்போது அனிருத் இப்படத்திலிருந்து விலகியுள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகின்றன. தீபாவளிக்கு வெளியான ‘அரசன்’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவுக்கு அனிருத் இசையமைக்கவில்லை. அவர் திருமண வேலைகளில் பிசியாக இருந்ததால் அவருக்கு பதில் வேறு ஒருவரை வைத்து பாடல் ரெடி பண்ணி கிளிம்ப்ஸ் வெளியிட்டனர். அது மிகப்பெரிய ட்ரோல் மெட்டீரியலாக மாறியது.
வெற்றிமாறனுடன் கருத்து வேறுபாடா?
அனிருத் படத்திலிருந்து விலகியதாகக் கூறப்படுவதற்கு இயக்குநர் வெற்றிமாறனுடன் ஏற்பட்ட படைப்பு சார்ந்த கருத்து வேறுபாடுகளே காரணமாக இருக்கலாம் என வலைப்பேச்சு டீம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்தத் தகவல்கள் எதுவும் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
அனிருத் உண்மையிலேயே ‘அரசன்’ படத்திலிருந்து விலகியிருந்தால், அவருக்குப் பதிலாக யார் இசையமைக்கப் போகிறார் என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அநேகமாக சாய் அபயங்கர் பக்கம் அரசன் பட வாய்ப்பு செல்ல அதிக சான்ஸ் இருப்பதாக கூறப்படுகிறது. அது நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.













