- Home
- டெக்னாலஜி
- வெறும் ரூ.35 போதும்.. 1GB டேட்டாவுடன் 2 ரீஜினல் ஓடிடி சந்தாக்கள் இலவசம்: வி.ஐ அதிரடி ஆஃபர்!
வெறும் ரூ.35 போதும்.. 1GB டேட்டாவுடன் 2 ரீஜினல் ஓடிடி சந்தாக்கள் இலவசம்: வி.ஐ அதிரடி ஆஃபர்!
வோடபோன் ஐடியா (Vi) நிறுவனம் தனது ப்ரீபெய்ட் பயனர்களுக்காக ரூ.35 விலையில் புதிய ரீஜினல் ஓடிடி ஆட்-ஆன் பேக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் பயனர்கள் தங்களுக்குப் பிடித்த ஏதேனும் 2 ஓடிடி தளங்களைத் தேர்வு செய்து கொள்ளலாம்.

1GB டேட்டாவுடன் 2 ரீஜினல் ஓடிடி சந்தாக்கள் இலவசம்
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடபோன் ஐடியா (Vi), தனது ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்காக குறைந்த விலையில் புதிய ரூ.35 ஆட்-ஆன் பேக்கை (Add-on Pack) அறிமுகப்படுத்தியுள்ளது. வட்டார மொழிப் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்க்கும் பயனர்களுக்காகத் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் மூலம், தனித்தனியாகச் சந்தா கட்டணம் செலுத்தாமல் 2 ரீஜினல் ஓடிடி (OTT) தளங்களை பயனர்கள் இலவசமாகப் பார்க்க முடியும்.
Vi ரூ.35 ப்ரீபெய்ட் திட்டத்தின் சிறப்பம்சங்கள்
9 இந்திய மொழிகளை உள்ளடக்கிய 6 முன்னணி ஓடிடி தளங்களில் இருந்து தங்களுக்கு விருப்பமான ஏதேனும் 2 ஓடிடி தளங்களை பயனர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இந்த ஆட்-ஆன் பேக்குடன் 1GB டேட்டா வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் கிடைக்கும் 1GB டேட்டாவின் வேலிடிட்டி 7 நாட்கள் ஆகும். ஆனால், பயனர்கள் தேர்வு செய்யும் 2 ஓடிடி தளங்களின் சந்தா முழுமையாக 28 நாட்களுக்குச் செயல்படும்.
தேர்ந்தெடுக்கக்கூடிய 6 முன்னணி ஓடிடி தளங்கள்
பயனர்கள் தங்களின் மொழி விருப்பத்திற்கு ஏற்ப 6 தளங்களில் இருந்து 2 தளங்களைத் தேர்வு செய்துகொள்ளலாம்.
SonyLIV South: தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள்.
Chaupal: பஞ்சாபி, ஹரியான்வி மற்றும் போஜ்புரி மொழிப் பொழுதுபோக்குகள்.
ManoramaMAX: மலையாளத் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்.
KLiKK: பெங்காலி மொழி உள்ளடக்கங்கள்.
AddaTimes: பெங்காலி திரைப்படங்கள் மற்றும் தொடர்கள்.
Aao NXT: ஒடியா மொழி பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள்.
இந்தச் சலுகையைப் பெறுவது எப்படி?
இந்த ஆட்-ஆன் திட்டத்தைப் பெற வாடிக்கையாளர்கள் தங்களின் Vi எண்ணில் ஏற்கனவே ஆக்டிவ் சேவை வேலிடிட்டி (Active Service-Validity) கொண்ட அடிப்படைத் திட்டத்தைப் பெற்றிருக்க வேண்டும். தகுதியுள்ள Vi வாடிக்கையாளர்கள் Vi மொபைல் செயலி (Vi App) மூலமாகவோ அல்லது மூன்றாம் தரப்பு ரீசார்ஜ் செயலிகள் (Google Pay, PhonePe, Paytm போன்றவை) மூலமாகவோ ரூ.35 திட்டத்தை ரீசார்ஜ் செய்யலாம். ரீசார்ஜ் செய்த பிறகு, தங்களின் ஸ்மார்ட்போனில் ‘Vi Movies and TV’ செயலியைத் திறந்து, Vi மொபைல் எண்ணைக் கொண்டு உள்நுழைய (Login) வேண்டும். பின்னர் அங்கு பட்டியலிடப்படும் ஓடிடி விருப்பங்களில் இருந்து தங்களுக்குப் பிடித்த 2 ரீஜினல் ஓடிடி தளங்களைத் தேர்வு செய்து, தங்களின் 28 நாள் இலவசச் சந்தாவை உடனே ஆக்டிவேட் செய்து கண்டென்ட்டுகளை ஸ்ட்ரீமிங் செய்யலாம்.
முன்னதாக, இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) வழிகாட்டுதலின்படி, வாய்ஸ் கால் வசதியை மட்டுமே கொண்ட 4 புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை (ரூ.179, ரூ.189, ரூ.2023 மற்றும் ரூ.206) கடந்த மாதம் வோடபோன் ஐடியா அறிமுகப்படுத்தி இருந்த நிலையில், தற்போது இந்த புதிய ரூ.35 ரீஜினல் ஓடிடி ஆட்-ஆன் பேக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.











