- Home
- டெக்னாலஜி
- சாதனங்கள்
- ரெட்ரோ லுக், டைப்-சி கனெக்டிவிட்டி: வாக்மேன் ஸ்டைலில் சோனி MDR-3R ஹெட்ஃபோன்கள் அறிமுகம்!
ரெட்ரோ லுக், டைப்-சி கனெக்டிவிட்டி: வாக்மேன் ஸ்டைலில் சோனி MDR-3R ஹெட்ஃபோன்கள் அறிமுகம்!
சோனி நிறுவனம் 1979-ஆம் ஆண்டைய தனது புகழ்பெற்ற வாக்மேன் (Walkman) மாடலின் தழுவலில் 'MDR-3R' என்ற புதிய ரெட்ரோ ரக ஒயர்டு ஹெட்ஃபோன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

சோனி MDR 3R ஹெட்ஃபோன்கள்
பிரபல சோனி (Sony) நிறுவனம் தனது மிகவும் பிரபலமான பழைய ஆடியோ சாதனத்தின் வடிவமைப்பை மீண்டும் நினைவூட்டும் விதமாகப் புதிய ஒயர்டு (Wired) ஹெட்ஃபோன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. 'சோனி MDR-3R' (Sony MDR-3R) என பெயரிடப்பட்டுள்ள இந்த ஹெட்ஃபோன்கள், 1979-ஆம் ஆண்டு நிறுவனத்தின் முதலாவது வாக்மேனுடன் (Walkman) அறிமுகமான புகழ்பெற்ற MDR-3 மாடலின் தழுவலில் உருவாக்கப்பட்டுள்ளது.
பழைய மாடலின் இலகுவான எடைகொண்ட 'ஓபன்-ஈயர்' (Open-Ear) வடிவமைப்பு மற்றும் அதன் ரெட்ரோ தோற்றத்தை அப்படியே தக்கவைத்துக்கொண்டுள்ள இந்த புதிய மாடலில், வழக்கமான 3.5mm ஆடியோ ஜாக்கிற்கு பதிலாக நவீன USB Type-C போர்ட் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதில் 23mm டிரைவர்கள், இன்-லைன் ரிமோட் மற்றும் மைக்ரோஃபோன் வசதிகளும் இடம்பெற்றுள்ளன.
விலை & விற்பனை விவரங்கள்
சோனி MDR-3R (Standard Edition):
இதன் விலை சுமார் ரூ. 5,600.
சோனியின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் தளம், அமேசான், பெஸ்ட் பை (Best Buy) மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விற்பனையாளர்கள் மூலம் இது விற்பனைக்குக் கிடைக்கிறது.
சோனி MDR-3R ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் எடிஷன் (Stranger Things Edition):
இதன் விலை சுமார் ரூ. 7,500.
சோனி தளம், நெட்ஃபிலிக்ஸ் ஷாப் (Netflix Shop) மற்றும் அமேசான் மூலம் முன்பதிவு (Pre-orders) செய்யலாம்.
சிறப்பம்சங்கள் (Specifications & Features)
ரெட்ரோ வடிவமைப்பு: 1979-ஆம் ஆண்டைய MDR-3 மாடலின் தோற்றத்தை அப்படியே பெற்றுள்ள இதில், மாற்றி அமைத்துக் கொள்ளக்கூடிய (Interchangeable) நீலம் மற்றும் ஆரஞ்சு நிற இயர்பேட்கள் (Ear Pads) வழங்கப்படுகின்றன. இதன் பேக்கிங் பெட்டி மற்றும் பயனர் கையேடு (User Manual) கூட பழைய காலத்து மாடல்களை நினைவுபடுத்தும் வகையில் ரெட்ரோ ஸ்டைலில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
USB Type-C வசதி: இதில் செய்யப்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றம் USB Type-C கனெக்ஷன் ஆகும். இதன் மூலம் புளூடூத் இணைப்பு அல்லது தனியாக சார்ஜ் செய்யும் தொந்தரவு ஏதுமின்றி, நவீன சாதனங்களுடன் நேரடியாக இணைத்துப் பயன்படுத்த முடியும்.
மைக்ரோஃபோன் & ரிமோட் - இதன் கேபிளில் அழைப்புகளைப் பேச மற்றும் கட்டுப்படுத்த இன்-லைன் ரிமோட் மற்றும் மைக்ரோஃபோன் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் சோனி ஹெட்ஃபோன்கள்
ஆடியோ தரம் - 23mm டிரைவர்கள் மூலம் 1970-களின் இறுதிக்கால திறந்தவெளி ஆடியோ அனுபவத்தை (Open sound profile) வழங்கும் அதே வேளையில், நவீன டிஜிட்டல் ஆடியோ வடிவங்களுக்கு ஏற்ப சிறிய அளவிலான ஒலி மேம்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் எடிஷன் (Stranger Things Edition) - நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்தச் சிறப்புப் பதிப்பு, புகழ்பெற்ற 'Stranger Things' தொடரின் 'Max Mayfield' கதாபாத்திரத்தின் பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 'Upside Down' கருப்பொருளை மையமாகக் கொண்டு செதுக்கப்பட்ட லோகோ, சிவப்பு-கருப்பு நிற இயர்பேட்கள் மற்றும் சிறப்பு தீம் பேக்கிங் இடம்பெற்றுள்ளன.





