- Home
- டெக்னாலஜி
- 8,000mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங்: ஓப்போ F35 ப்ரோ வேற லெவல் அப்கிரேட்டுடன் அறிமுகம்!
8,000mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங்: ஓப்போ F35 ப்ரோ வேற லெவல் அப்கிரேட்டுடன் அறிமுகம்!
ஓப்போ F35 ப்ரோ ஸ்மார்ட்போனிற்கு அண்ட்ராய்டு 17 அடிப்படையிலான ColorOS 17 அப்டேட் வெளியீடு. புதிய ஏ.ஐ அம்சங்கள், லேமினார் ஃப்ளோ என்ஜின் மற்றும் 8,000mAh பேட்டரி கொண்ட போனின் முழு விவரங்கள் இதோ!

கலர் ஓஎஸ் 17 புதிய அம்சங்கள்
ஒப்போ நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் மீடியாட்க் டைமன்சிட்டி (MediaTek Dimensity) சிப்செட் மற்றும் 50 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவுடன் ஓப்போ F35 மற்றும் F35 ப்ரோ ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்நிலையில், Oppo F35 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு அண்ட்ராய்டு 17 (Android 17) அடிப்படையிலான புதிய 'ColorOS 17' மென்பொருள் அப்டேட் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த புதிய அப்டேட் மூலம் புதிய சிஸ்டம் அனிமேஷன்கள், மேம்படுத்தப்பட்ட இயங்குதள வேகம் மற்றும் புதிய ஏ.ஐ (AI) அம்சங்கள் கிடைக்கின்றன. மேலும், ஆப்ஸ்கள் இயங்கும் நிலைத்தன்மையை அதிகரிக்க 'லேமினார் ஃப்ளோ என்ஜின்' (Laminar Flow Engine) இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய அம்சங்கள் & வேகமான இயக்கம்
லேமினார் ஃப்ளோ என்ஜின் (Laminar Flow Engine) - இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் ஆப்ஸ்கள் திறக்கும் நிலைத்தன்மை (App launch stability) 55% வரை அதிகரிக்கும் என ஒப்போ கூறுகிறது. மேலும், ColorOS 16 உடன் ஒப்பிடும்போது கேலரி படங்கள் (Gallery thumbnails) முதல்முறை திறக்கும்போது 50 சதவீதம் வரை வேகமாகக் தோன்றும்.
கலர்ஓஎஸ் ஸ்மூத்னெஸ் பூஸ்ட் (ColorOS Smoothness Boost) - F சீரிஸ் போன்களுக்கு மட்டுமே உரித்தான இந்த சிறப்பு அம்சம், பல ஆப்ஸ்களுக்கு இடையே மாறுவது, பிரவுசிங் செய்வது மற்றும் பல பணிகளை ஒரே நேரத்தில் (Multitasking) செய்யும்போது போனின் இயக்க வேகம் குறையாமல் சீராக வைத்திருக்க உதவுகிறது.
புதிய ஏ.ஐ பாதுகாப்பு வசதிகள்
ஏ.ஐ கால் கார்டு - அழைப்புகள் மற்றும் வீடியோ கால்களின் போது போலியான ஏ.ஐ குரல்கள் (Synthetic voices) மற்றும் முக மாற்றங்கள் (AI-manipulated faces) மூலம் நடக்கும் மோசடிகளைக் கண்டறிந்து பயனர்களை எச்சரிக்க இத்தொழில்நுட்பம் உதவுகிறது.
தனியுரிமை பாதுகாப்பு - பயனர்களின் தரவு பாதுகாப்பிற்காக 'பிரைவேட் கம்ப்யூட்டிங் கிளவுட்' வசதியும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள் & விலை
விலை - இந்தியாவில் ஓப்போ F35 ப்ரோ 5G போனின் 6GB RAM + 128GB ஸ்டோரேஜ் அடிப்படை மாடலின் விலை ரூ.45,999 ஆகும்.
டிஸ்பிளே (Display) - 6.78-இன்ச் 1.5K AMOLED டிஸ்ப்ளே மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது.
பாதுகாப்பு சான்றிதழ் - தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக IP66, IP68, IP69 மற்றும் IP69K தரச்சான்றிதழ்களைப் பெற்றுள்ளது.
புரோசசர் - மீடியாட்க் டைமன்சிட்டி 7360 மேக்ஸ் (MediaTek Dimensity 7360 Max) சிப்செட் மூலம் இயங்குகிறது.
கேமரா - பின்புறம் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைடு கேமரா அடங்கிய டூயல் கேமரா அமைப்பு உள்ளது. முன்புறம் 50 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
பேட்டரி - 8,000mAh சக்திவாய்ந்த பேட்டரி மற்றும் 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.





