ஆகஸ்ட் 16 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !
வரும் ஆகஸ்ட் 16ம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவின் 75வது சுதந்திர தினம் சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவாக நாடு முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று 13ம் தேதி முதல் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி நாட்டுப் பற்றை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு..ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்து.. ஓபிஎஸ் உள்ளே - எடப்பாடி வெளியே ! மீண்டும் பரபரப்பு
பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரி மாநிலம் கடந்த 1962-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் தேதி இந்தியாவுடன் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டது. இந்ததினத்தை சட்டபூர்வ பரிமாற்ற தினமாக புதுச்சேரி அரசு சார்பில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சட்டபூர்வ பரிமாற்ற தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி மாநிலத்தில் ஆகஸ்ட் 16 அரசு பொது விடுமுறை விடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு..கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி மார்பு & விலா எலும்பில் காயம்.. சிசிடிவி காட்சி எங்கே? விசிகவுக்கு தொடர்பு?