முழுவதுமாக அம்மனாக மாறிய அன்னபூரணி.. கையில் சூலம்.. தலையில் கிரீடம்.. பக்தர்களுக்கு சிறப்பு தரிசனம்..!
கீழ்பென்னாத்தூரில் ஆடி மாதம் முன்னிட்டு அன்னபூரணி அரசு அம்மா கையில் சூலம், தலையில் கிரீடங்களுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
கீழ்பென்னாத்தூரில் ஆடி மாதம் முன்னிட்டு அன்னபூரணி அரசு அம்மா கையில் சூலம், தலையில் கிரீடங்களுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மிகவும் பிரபலமானவர் அன்னபூரணி அரசு அம்மா எனும் பெண் சாமியார். தன்னை ஆதிபராசக்தியின் அடுத்த உருவம் என கூறி வருவதுடன், அவ்வப்போது பக்தர்களுக்கு ஆன்லைன் மூலம் அட்வைஸ் கொடுத்து பக்தி பரவசத்தில் ஆழ்த்தி வருகிறார். செங்கல்பட்டு மாவட்டத்தை பூர்விகமாகக் கொண்ட இவர் கடந்த 2014ம் ஆண்டு தனியார் தொலைக்காட்சி நடத்திய ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில், திடீரென சாமியார் அவதாரம் எடுத்தார். அப்போது முதல் நெட்டிசன்களால் விமர்சிக்கப்பட்டும் அதனை கண்டு கொள்ளாமல், ஆன்மீக சேவை ஆற்றி வருகிறார்.
இதையும் படிங்க;- நல்லவன் ஆன்மிகவாதி ஆக முடியாது..அன்னபூரணி அரசு அம்மா ரிட்டர்ன்ஸ் - நெட்டிசன்கள் கலாய்
இந்நிலையில், ஆடி மாசம் அம்மனுக்கே உரிய மாதம் என்பதால் பக்தர்களுக்கு அம்மன் வேடத்தில் காட்சியளித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ராஜாதோப்பு பகுதியில் ஆசிரமம் அமைத்துள்ள அன்னபூரணி அரசு பொதுமக்களுக்கு ஆன்மீக சொற்பொழிவு வழங்கி வருகிறார். தன்னை ஆதிபராசக்தியின் மறு அவதாரம் என கூறி பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகிறார். இதைதொடர்ந்து யூடியூப்பில் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றுகிறார்.
ஆடி மாதத்தை முன்னிட்டு நேற்று அன்னபூரணி அரசு அம்மாவின் பக்தர்கள் அம்மன் வேடத்தில் பார்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனையடுத்து அன்னபூரணி அம்மா சூலம், கிரீடம் அணிந்து அம்மன் வேடத்தில் பக்தர்களுக்கு சிறப்பு தரிசனம் அளித்துள்ளார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க;- புருஷனை இழந்த நீ இப்படி செய்யறது தப்புமா! மகளுக்கு அட்வைஸ் செய்த பெற்றோர்.. ஆத்திரத்தில் வாலிபர் செய்த பகீர்.!