- Home
- குற்றம்
- என்ன நடிப்புடா சாமி! காதல் கணவனை போட்டு தள்ளிவிட்டு நாடகமாடிய 25 வயது ஷர்மிளா! சிக்கியது எப்படி?
என்ன நடிப்புடா சாமி! காதல் கணவனை போட்டு தள்ளிவிட்டு நாடகமாடிய 25 வயது ஷர்மிளா! சிக்கியது எப்படி?
திருவண்ணாமலை அருகே கள்ளக்காதலனுடன் ரீல்ஸ் எடுத்ததை கண்டித்த லாரி ஓட்டுநரான கணவரை, அவரது மனைவியும் மாமியாரும் சேர்ந்து கொலை செய்துள்ளனர். பின்னர், கணவர் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய நிலையில், காவல்துறையின் விசாரணையில் அதிர்ச்சி.

காதலித்து திருமணம்
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டை அடுத்துள்ள இடையன்குளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜய் (27). லாரி ஓட்டுநர். இவரது மனைவி ஷர்மிளா (25). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஹன்சிகா(4) என்ற மகளும், ஆஜீஸ்(3) என்ற மகனும் உள்ளனர். விஜய் லாரி ஓட்டுநர் என்பதால் வெளியூர்களுக்கு சென்று விட்டு 10 முதல் 15 நாட்கள் சென்றுவிட்டு வீட்டிற்கு வருவாராம். இந்நிலையில் விஜய்க்கு காதல் மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
மனைவியின் நடத்தையில் சந்தேகம்
அக்கம்பத்தினர் யாரோ ஒருவர் அடிக்கடி வீட்டிற்கு வந்து செல்வதாக கூறியுள்ளனர். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஷர்மிளா அடிக்கடி கோபித்துக்கொண்டு அதே பகுதியில் வசிக்கும் தாய் வீட்டிற்கு செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் தம்பதி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது விஜய், ஷர்மிளாவை சரமாரி தாக்கியுள்ளார். இதனை கண்ட ஷர்மிளாவின் தாய் மருமகனை கண்டித்துள்ளார்.
tiruvanகிடுக்குப்பிடி விசாரணையில் அதிர்ச்சி
இந்நிலையில் விஜய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்களிடம் காதல் மனைவி ஷர்மிளா கூறியுள்ளார். ஆனால் விஜயின் உறவினர்கள் சாவில் சந்தேகம் இருப்பதாக சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து ஷர்மிளா மற்றும் அவரது தாய் ராணிபாத்திமா இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து கிடுக்குப்பிடி விசாரணை நடத்திய போது பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
நாடகமாடிய மனைவி மாமியார்
அதில், ஷர்மிளா கள்ளக்காதலனுடன் ரீல்ஸ் எடுத்து பதிவிட்டதை பார்த்த விஜய் அவரது மனைவியை கண்டித்துள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் ஷர்மிளா, ராணிபாத்திமா இருவரும் சேர்ந்து விஜய்யை உருட்டு கட்டையாலும், கம்பியாலும் சரமாரி தாக்கி அவரது கழுத்தை கயிற்றால் கட்டி ஜன்னல் கம்பியில் இறுக்கி கொலை செய்தது தெரியவந்தது. ஆனால் விஜய் ஜன்னலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியுள்ளார். இதனையடுத்து இருவரையும் கைது செய்தனர். மேலும் இந்த கொலை வழக்கில் கள்ளக்காதலனுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

