மாஸ் காட்டும் எடப்பாடி பழனிசாமி! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு அசத்தல்!
தொடர் தோல்விகளுக்குப் பிறகு 2026 சட்டமன்றத் தேர்தலில் இபிஎஸ் புதிய வியூகத்தின் ஒரு பகுதியாக கேரள உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார். திருவனந்தபுரம், இடுக்கி மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற சந்தித்த உள்ளாட்சி மற்றும் சட்டமன்றம், நாடாளுமன்ற தேர்தல்களில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறார். இந்நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதால் இபிஎஸ் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார். அதாவது வலுவான கூட்டணி அமைத்து போட்டியிட பல்வேறு கட்சிகளுடன் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். ஏற்கனவே போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்குவதா? அல்லது புதுமுகத்திற்கு வாய்ப்பா? என ஆராய்ந்து வருகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி கேரளாவில் உள்ளாட்சி மன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
கேரளா உள்ளாட்சி தேர்தல்
கேரளா தேர்தல்- அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
கேரளாவில் வருகிற டிசம்பர் மாதம் 9 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.
திருவனந்தபுரம் மாவட்டம்
திருவனந்தபுரம் மாநகராட்சி 98-ஆவது வார்டு- S. வெங்கடேஷ்பாபு
நெய்யாற்றிங்கரா சட்டமன்றத் தொகுதி:
நெய்யாற்றிங்கரா நகராட்சி 14-ஆவது வார்டு- K. கலா
இடுக்கி மாவட்டம்
தேவிகுளம் சட்டமன்றத் தொகுதி, மறையூர் ஊராட்சி 3-ஆவது வார்டு -சனில், 4-ஆவது வார்டு- செல்வி கணேசன், மூணார் ஊராட்சி 13-ஆவது வார்டு- K. பவுன்ராஜ், 18-ஆவது வார்டு- P.K. முருகன், தேவிகுளம் ஊராட்சி 14-ஆவது வார்டு- K. முருகையா, 15-ஆவது வார்டு- R. கிட்னம்மா, வட்டவடை ஊராட்சி 4-ஆவது வார்டு- R. சத்தியா, சின்னகானல் ஊராட்சி 4-ஆவது வார்டு- A. உதயகுமார், 11-ஆவது வார்டு- R. மல்லிகா
பீர்மேடு சட்டமன்றத் தொகுதி
குமிழி ஊராட்சி 22-ஆவது வார்டு-P. எஸ்தர், பீர்மேடு ஊராட்சி 2-ஆவது வார்டு-C.M. ஜாக்சன்,
ஊராட்சி ஒன்றியக் குழு வார்டு உறுப்பினர்கள்
தேவிகுளம் ஊராட்சி ஒன்றியம் 1ஆவது வார்டு சாந்தகுமார், 3ஆவது வார்டு சுரேஷ், 11வது வார்டு பழனிசாமி
இடுக்கி மாவட்ட ஊராட்சிக் குழு வார்டு உறுப்பினர்கள்:
2-ஆவது வார்டு- M. செல்லதுரை, 3-ஆவது வார்டு- S. துரைப்பாண்டி
பாலக்காடு மாவட்டம்
பாலக்காடு மாவட்டம் :
சித்தூர் சட்டமன்றத் தொகுதி
வடகரப்பதி ஊராட்சி 10-ஆவது வார்டு- வல்சம்மா
11-ஆவது வார்டு- K. கலாதரன்
நெம்மாரா சட்டமன்றத் தொகுதி
நெம்மாரா ஊராட்சி 2-ஆவது வார்டு- N. தேவதாஸ்
9-ஆவது வார்டு- H. லத்தீப்
22-ஆவது வார்டு- A. செல்வராஜ்
மன்னார்காடு சட்டமன்றத் தொகுதி
அகழி ஊராட்சி 5-ஆவது வார்டு- பழனி
6-ஆவது வார்டு- சுருதி
12-ஆவது வார்டு-M. தீபா
புதூர் ஊராட்சி 14-ஆவது வார்டு- J. பிரின்சி
சோலையூர் ஊராட்சி 4-ஆவது வார்டு- N. சுப்பிரமணியன்
கேரள மாநிலத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் ஒன்றிணைந்து, கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றி பெற்றிடும் வகையில், சிறந்த முறையில் தேர்தல் பணிகளை ஆற்றிட வேண்டுமெனக் கேட்டுக்கொள்வதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

