Asianet News TamilAsianet News Tamil

நல்லவன் ஆன்மிகவாதி ஆக முடியாது..அன்னபூரணி அரசு அம்மா ரிட்டர்ன்ஸ் - நெட்டிசன்கள் கலாய்

சமூக வலைதளங்களில் வைரல் ஆன அன்னபூரணி அரசு அம்மாவை யாரும் மறந்திருக்க முடியாது.

annapurani arasu amma new post on facebook nettizens trolled
Author
First Published Jul 18, 2022, 6:08 PM IST

இவர் தன்னை ஆதிபராசக்தியின் அடுத்த உருவம் என்று கூறி பக்தர்களுக்கு பரவசத்தை ஏற்படுத்தினார். தனியார் தொலைக்காட்சியில் கலந்து கொண்ட இவர், ஒரு பெண்ணின் கணவரை இரண்டாவதாக திருமணம் செய்ய அந்த நிகழ்ச்சிக்கு கலந்துகொண்டதாக கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே பல தனியார் திருமண மண்டபங்களில் கூட்டம் நடத்தியதோடு மட்டுமில்லாமல், ஆசி வாங்க வாருங்கள் என்று கூறி போஸ்டர் அடித்து அட்டகாசம் செய்தார். 

annapurani arasu amma new post on facebook nettizens trolled

கடந்த மாதம், திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை அடுத்த ராஜாதோப்பு பகுதியில் அன்னப்பூரணி அரசு அம்மா ஆசிரமத்தில் அன்னப்பூரணி அரசு அம்மாவின் அவதார திருநாள் நடந்தது. அன்னப்பூரணி அரசு அம்மாவுக்கு பாதபூஜை செய்தும், மாலை அணிவித்தும், மலர்தூவியும், கற்பூரம் ஏற்றியும், தீபாராதனை காண்பித்தும் ஆசி பெற்றனர். நிகழ்ச்சியில் பக்தர்கள் குடும்ப பிரச்சினை, திருமணத்தடை, குழந்தை வரம் உள்ளிட்ட பிரச்சினைகளை முறையிட்டவர்களுக்கு அன்னபூரணி அரசு அம்மா அருள் வாக்கு கூறி ஆசி வழங்கினார்.

மேலும் செய்திகளுக்கு..என்ன நடக்கிறது கள்ளக்குறிச்சியில்? பதவி தான் முக்கியமா? திமுகவை பொளந்த அண்ணாமலை

எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் வரவில்லை என்றாலும், வந்திருந்த பக்தர்களுக்கு நிறைவாக ஆசி வழங்கினார். தற்போது முகநூலில் அவர் வெளியிட்டுள்ள பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவர் வெளியிட்டுள்ள பதிவில், நல்லவன் ஆன்மீகவாதி அல்ல. இந்த சமுதாயத்தில் வாழும் பெரும்பாலோர் நல்லது செய்பவர்களையும், நல்ல பழக்க வழக்கங்களை உடையவர்களையும், ஒழுக்கவாதிகளையும், பொய் பேசாமல் உண்மை பேசுபவர்களையும், தினமும் கோயிலுக்கும், மசூதிக்கும், சர்ச்க்கும் செல்பவர்களையுமே ஆன்மிகவாதி என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

annapurani arasu amma new post on facebook nettizens trolled

நல்லவன் ஆன்மிகவாதி ஆக முடியாது. அதற்கு அவன் நல்லதையும் கடக்க வேண்டும். ஒரு கெட்டவன் எப்படி கெட்ட பண்புகளுக்கு ஆளாகி இருக்கிறானோ அதேபோல் நல்லவன் நல்ல பண்புகளுக்கு ஆளாகி இருக்கிறான் இதுவும் ஒரு பழக்கத்திற்கு அடிமையான விஷயமே. உலகத்திற்கு வேண்டுமானால் நல்லவனாக இருக்கலாமே தவிர ஆன்மிகத்திற்கு உதவ போவது இல்லை. கெட்ட எண்ணங்களை விடுத்து நல்ல எண்ணங்களை வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், நல்லவனாக வாழ வேண்டும். 

இதுவே ஆன்மிகம் என்ற தவறான வழிகாட்டுதல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. கெட்ட எண்ணங்கள் போன்று நல்ல எண்ணங்களும் ஆன்மிகத்திற்கு தடையே. உன்னை அடைத்து வைத்திருக்கும் சிறை இரும்பால் இருந்தால் என்ன? தங்கத்தால் இருந்தால் என்ன? இரண்டும் சிறைகளே. இரண்டையும் உடைத்தெரிந்து எண்ணங்களற்று சுதந்திரனாக வாழ்வதே ஆன்மிகம். மனதை நல்ல பழக்க வழக்கங்களில் பழக்கி அதற்கு அடிமையாக, நல்லவனாக வாழ்வது ஆன்மிகமாகாது. 

மேலும் செய்திகளுக்கு..மச்சி சைட்டிஷ் வாங்கிட்டு வா.. மது போதையில் நண்பனை போட்டு தள்ளிய நண்பர்கள்.!

மனதை கடந்து வாழ்வதே ஆன்மிகம். அறிவில் சிறந்தவனாக, வேத சாஸ்திரம் அறிந்தவனாக, நுனுக்கமான அறிவால் அனைத்திற்கும் விளக்கம் கூறிக்கொண்டு தன்னை  நிலைநிறுத்திக் கொண்டு   அந்த அறிவிற்கு அடிமையாக வாழ்வது ஆன்மிகமாகாது. அந்த அறிவையும் கடந்து நிற்பதே ஆன்மிகமாகும். நல்லவனாக வாழ்வது தவறு என்று நான் கூறவில்லை. அது ஆன்மிகமாகாது என்றே கூறுகிறேன். 

நல்லவன் கெட்டவன், பாவி புனிதன் இவையெல்லாம் ஆணவத்தின் படைப்புகளே. இயற்கைக்கு இவைகள் என்னவென்றே தெரியாது. அதனால் ஆணவத்திடம் சிக்காமல் ஆணவத்தை விடுத்து இயற்கையில் (இயல்பில்) நிலைபெறுங்கள். இரண்டற்ற எதார்த்தம் என்னவென்று நீங்களே உணர்வீர்கள். இப்படிக்கு அன்னபூரணி அரசு அம்மா என்று பதிவிட்டுள்ளார். மறுபடியும் முதல்ல இருந்தா ? என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு..புதிய கட்சியை தொடங்கும் சசிகலா? பதறும் இபிஎஸ் - ஓபிஎஸ்.. அதிமுக என்னவாகும்?

Follow Us:
Download App:
  • android
  • ios