தமிழகத்தில் குடும்ப அரசியல் தலைவிரித்தாடுகிறது.. திமுகவை மறைமுகமாக தாக்கிய அண்ணாமலை!
இந்தியாவின் 75வது சுதந்திர தினம், சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
75வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில், அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தேசியக்கொடி ஏற்றி மரியாதை செய்தார். அப்போது பேசிய அவர், ' 75-வது சுதந்திர தினம் முடிந்து, 76-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் தருணமிது. காஷ்மீரில் இருந்து கொண்டு வரப்பட்ட தேசியக்கொடியை இங்கு ஏற்றியுள்ளோம்.
மேலும் செய்திகளுக்கு..“கஞ்சா பூ கண்ணாலே-னு பாட்டு வேற !” கார்த்தியின் விருமனுக்கு ப்ரோமோஷன் செய்யும் ஜெயக்குமார் !
சுதந்திரத்துக்கு பாடுபட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு மிக அதிகம். தமிழ்நாட்டில் மருது சகோதரர்கள் முதல் பலர் சுதந்திரத்துக்காக போராடியுள்ளனர். கடந்த ஓராண்டாகவே சுதந்திரத்துக்காக பாடுபட்டவர்களை பாஜக கொண்டாடி வருகிறது. இன்று தமிழ்நாட்டில் தேசியக்கொடி இல்லாத வீடுகளே இல்லை. இந்தியாவின் கண்முன் இருப்பது லஞ்சம், குடும்ப அரசியல் என்ற இரு பிரச்சனைகள் தான் என்று பிரதமர் பேசியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு..“முக்கிய துறை எல்லாம் போச்சு..” முதல்வரை டம்மியாக்கிய துணை முதல்வர் - மகாராஷ்டிராவில் அதிரடி திருப்பம்!
ஏழை மக்கள், திறமையுள்ளவர்கள் முன்னேறிச் செல்ல லஞ்சம் தடையாக உள்ளது. தமிழ்நாட்டில் லஞ்ச லாவண்யம், குடும்ப அரசியல் தலைவிரித்தாடுகிறது, இதை ஒழிக்க பாஜக கடுமையாக உழைக்கும். அடுத்த 25 ஆண்டுகள் முடிந்த உடன், தமிழ்நாடு இந்தியாவின் விஷ்வகுருவாக வர வேண்டும். நாம் அனைவரும் அதற்காக உழைத்திட வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு..கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி மார்பு & விலா எலும்பில் காயம்.. சிசிடிவி காட்சி எங்கே? விசிகவுக்கு தொடர்பு?