“கஞ்சா பூ கண்ணாலே-னு பாட்டு வேற !” கார்த்தியின் விருமனுக்கு ப்ரோமோஷன் செய்யும் ஜெயக்குமார் !
முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி சங்கர் நடித்துள்ள திரைப்படம் 'விருமன்'. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜ், சூரி, கருணாஸ், ராஜ்கிரண், வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தமிழகத்தில் போதைப் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே இதனை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும், மாணவர்களுக்கு போதை பாதிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் சென்னையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறையினர் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தார்.தமிழகம் முழுவதும் தீவிர சோதனையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி சங்கர் நடித்துள்ள திரைப்படம் 'விருமன்'. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜ், சூரி, கருணாஸ், ராஜ்கிரண், வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 2டி என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் தமிழகம் முழுவதும் 475 திரைகளில் வெளியானது. ஏ சென்டர்களில் நெகட்டிவான விமர்சனங்கள் வந்தாலும், பி மற்றும் சி சென்டர்களில் பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்து பட்டையை கிளப்பி வருகிறது.
மேலும் செய்திகளுக்கு..தமிழ்நாட்டில் உங்க விளையாட்டு எடுபடாது.. சமூக விரோதிகளே ! பாஜகவை எச்சரிக்கும் மு.க ஸ்டாலின்
அதுமட்டுமல்லாமல், வரும் நாட்களில் வசூல் அதிகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்ட ட்விட்டர் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. அதில், ‘தமிழ்நாட்ல ஏற்கனவே திரும்பிய திசையெல்லாம் கஞ்சா தடையில்லாம கிடைக்குது. அதை தடுக்க திமுக அரசுக்கு திராணியும் இல்லை. போதாக்குறைக்கு கஞ்சா பூ கண்ணாலே-னு பாட்டு வேற..’ என்று பதிவிட்டுள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள், அதிமுக விஜய் நடித்த சர்க்கார் படத்துக்கு இலவசமாக விளம்பரம் செய்து கொடுத்தார்கள். தற்போது கார்த்தி நடித்த விருமன் படத்துக்கு செய்கிறார்கள் என்றும், கஞ்சா பூவு என்ற வார்த்தை பெண்ணுக்கு உவமையாக பாடலாசிரியர் கூறியிருக்கிறார், வேற வேலை இருந்தால் பாருங்க’ என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு..“முக்கிய துறை எல்லாம் போச்சு..” முதல்வரை டம்மியாக்கிய துணை முதல்வர் - மகாராஷ்டிராவில் அதிரடி திருப்பம்!