“முக்கிய துறை எல்லாம் போச்சு..” முதல்வரை டம்மியாக்கிய துணை முதல்வர் - மகாராஷ்டிராவில் அதிரடி திருப்பம்!
மகாராஷ்டிரா அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாததை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வந்தனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது.மகாராஷ்டிராவில் 43 பேர் வரை அமைச்சர்களாக பதவி வகிக்க முடியும். முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை சேர்த்து தற்போது 20 பேர் மட்டுமே அமைச்சர்களாக இருந்தனர்.
முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மட்டுமே அனைத்து துறைகளையும் கவனித்து வந்தனர். மகாராஷ்டிரா அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாததை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் மகாராஷ்டிரா அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. 18 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.
மேலும் செய்திகளுக்கு..தமிழ்நாட்டில் உங்க விளையாட்டு எடுபடாது.. சமூக விரோதிகளே ! பாஜகவை எச்சரிக்கும் மு.க ஸ்டாலின்
இந்த நிலையில், தற்போது மகாராஷ்டிரா அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு நகர்ப்புற மேம்பாட்டுத் துறையும், துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு நிதி, உள்துறை, ஷிண்டே நகர்ப்புற வளர்ச்சி ஆகிய துறைகள் ஒத்துக்கப்பட்டுள்ளது.
மேலும் சட்டம் மற்றும் நீதி, நீர்வளம், வீட்டுவசதி மற்றும் எரிசக்தி துறை ஆகியவைகளை ஏக்நாத் ஷிண்டே கூடுதலாக கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியின் ஒப்புதலுக்குப் பிறகு இந்த ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 18 அமைச்சர்களின் விவரங்கள் பின்வருமாறு,
ராதாகிருஷ்ண விகே - பாட்டீல் - வருவாய், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள மேம்பாடு
சுதிர் முங்கண்டிவார் - வனவியல், கலாச்சார நடவடிக்கைகள் மற்றும் மீன்பிடி
சந்திரகாந்த் பாட்டீல் - உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வி, ஜவுளித் தொழில் மற்றும் நாடாளுமன்றப் பணி
டாக்டர் விஜயகுமார் காவிட் - பழங்குடியினர் மேம்பாடு
கிரிஷ் மகாஜன் - கிராம மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ், மருத்துவக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்
குலாப்ராவ் பாட்டீல் - நீர் வழங்கல் மற்றும் சுகாதாரம்
தாதா பூஸ் - துறைமுகங்கள் மற்றும் சுரங்கங்கள்
சஞ்சய் ரத்தோட் - உணவு மற்றும் மருந்து நிர்வாகம்
சுரேஷ் காடே - தொழிலாளர் துறை
சந்தீபன் பும்ரே - வேலை உறுதித் திட்டம் மற்றும் தோட்டக்கலை
மேலும் செய்திகளுக்கு..“ஜெயலலிதா இருந்திருந்தால்.. செருப்படி விழுது தலைவரே.!” குமுறும் திமுகவினர் !
உதய் சமந்த் - தொழில்
பேராசிரியர் தானாஜி சாவந்த் - பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நலன்
ரவீந்திர சவான் - பொதுப் பணிகள் (பொது நிறுவனங்கள் தவிர்த்து), உணவு மற்றும் குடிமைப் பொருட்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு
அப்துல் சத்தார் - விவசாயம்
தீபக் கேசர்கர் - பள்ளிக் கல்வி மற்றும் மராத்தி மொழி
அதுல் சேவ் - ஒத்துழைப்பு, பிற பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பகுஜன் நலன்
ஷம்புராஜ் தேசாய் - மாநில கலால் வரி
மங்கள் பிரபாத் லோதா - சுற்றுலா, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு
மேலும் செய்திகளுக்கு..பாஜக ஆட்சிக்கு வந்தால் பெரியார் சிலை கதி? நாங்க யாருக்கு சிலை வைப்போம் தெரியுமா ? அண்ணாமலை அதிரடி