75-ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடிய பிரபலங்கள்..! புகைப்பட தொகுப்பு..!
நாடு முழுவதும் இன்று 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி அனைத்து மக்களும், பிரபலங்களும் தங்களுடைய வீட்டில் தேசியக்கொடி ஏற்றுமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். அவரின் வேண்டுகோளுக்கு இணங்க பலரும் தேசியக் கொடியை ஏற்றி வருகின்றனர். அந்த வகையில், பிரபலங்கள் தேசிய கொடியோடு வெளியிட்ட புகைப்பட தொகுப்பு இதோ..
தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர், மகேஷ் பாபு தன்னுடைய மகள் சித்தாராவுடன், கையில் தேசிய கொடியோடு போஸ் கொடுத்தபடி 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடியுள்ளார்.
முன்னாள் காமெடி நடிகரும், தற்போதைய கதாநாயகனுமான சந்தானம் கலக்கலாக கங்களில் கூலிங் கிளாஸ் போட்டபடி, ஸ்டைலிஷாக தேசிய கொடியுடன் சுதந்திர தினத்தை கொண்டாடியுள்ளார்.
பாலிவுட் திரையுலகின் கிங் கான் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் ஷாருகான்... தன்னுடைய மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் வீட்டின் மொட்டை மாடியில் தேசிய கொடியை ஏற்றி மிகவும் சுதந்திரமாக இந்த சுதந்திர தினத்தை கொண்டாடியுள்ளார்.
மேலும் செய்திகள்: சர்ச்சையில் சிக்கிய 'விருமன்'... கார்த்தி - சூர்யாவை துரத்தும் நெகடிவ் விமர்சனம்!
தற்போதைய ஹாட் இளம் நடிகர், விஜய் தேவார கொண்டா பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க... இந்த 75 ஆவது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடிய புகைப்படம் இதோ...
பொன்னியின் செல்வன் பட இயக்குனர், மணிரத்னத்தின் மனைவியும், நடிகையுமான சுஹாசினி தன்னுடைய வீட்டில் ஏற்றப்பட்டிருக்கும் தேசிய கொடியுடன் எடுத்து கொண்ட புகைப்படம் இது.
தெலுங்கு திரையுலக சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, தன்னுடைய மொட்டை மாடியில் ஏற்றப்பட்ட தேசிய கொடிக்கு சல்யூட் அடித்து, மரியாதை செலுத்தும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும் செய்திகள்: உலக அளவில் 50 கோடி... அமெரிக்க பாக்ஸ் ஆபிஸியில் புதிய சாதனை படைத்த 'சீதா ராமம்' எவ்வளவு தெரியுமா?
எப்போதும் தன்னுடைய குழந்தைகளுடன் எடுத்து கொள்ளும் புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கும் சூரி, இந்த முறை... தன்னுடைய மகன் மற்றும் மகள் இல்லாமல் தேசிய கொடியோடு போஸ் கொடுத்துள்ளார்.
பிரபல நடிகை மம்தா மோகன் தாஸ் வெள்ளை நிற சல்வாரில்... கையில் தேசிய கொடியை ஏந்தியபடி, நெஞ்சில் கை வைத்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார்.
வாவ் செம்ம கியூட் என சொல்லும் அளவிற்கு உள்ளது... தெலுங்கு நடிகர் நானி தன்னுடைய செல்ல மகனுடன் 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடி வெளியிட்டுள்ள புகைப்படம்.
மேலும் செய்திகள்: இளம் பெண்களை ஆபாசமாக பேச வைத்து மிரட்டி பணம் பரிப்பில் ஈடுபட்ட நடிகர் அதிரடி கைது!
கோலிவுட் திரையுலகின் நட்சத்திர ஜோடிகளின் ஒன்றான, பிரியா - அட்லீ ஜோடி 75 ஆவது சுதந்திர தினத்தை தன்னுடைய வீட்டில் தேசிய கொடியை ஏற்றி கொண்டாடிய புகைப்படம்.
நடிகர் சூர்யா தன்னுடைய சட்டையில் தேசிய கொடியுடன் சிலருடன் எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
நடிகர் யஷ், தன்னுடைய மனைவி ராதிகா மற்றும் குழந்தைகள் இருவருடன் 75 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை, கையில் தேசிய கொடியை ஏந்தியபடி சிறப்பாக கொண்டாடியுள்ளார்.
மேலும் செய்திகள்: ஹனி மூன் சென்ற இடத்தில் பிரச்சனையா? சோகமாக அமர்ந்திருக்கும் நயன்தாராவின் ஷாக்கிங் புகைப்படம்!
தமிழ் சினிமாவில் எப்படி பட்ட கதாபாத்திரம் கொடுத்தாலும், அதில் அசால்டாக நடித்து அசத்தும் ராதிகா சரத்குமார் தன்னுடைய மகன் ராகுலுடன் தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடியுள்ளார்.
சின்னத்திரையில் இருந்து தற்போது வெள்ளித்திரையில் அடுத்ததடுத்த படங்களில் நடித்து வரும், தர்ஷா குப்தா, வெள்ளை நிற சேலையில்... கையில் தேசிய கொடியோடு போஸ் கொடுத்துள்ளார் அந்த புகைப்படம் இதோ...
கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா 75 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை, தேசிய கொடியின் முன்பு நின்றபடி போஸ் கொடுத்துள்ளனர். அந்த புகைப்படம் இதோ...