சர்ச்சையில் சிக்கிய 'விருமன்'... கார்த்தி - சூர்யாவை துரத்தும் நெகடிவ் விமர்சனம்!
'விருமன்' திரைப்படம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியான நிலையில், இந்த படத்திற்கு சிலர் தொடர்ந்து நெகடிவ் விமர்சனங்கள் தெரிவித்து வருவது மட்டும் இன்றி, குறிப்பிட்ட சாதியை இப்படம் தூக்கி பிடிப்பதாக சர்ச்சை கருத்தை முன்வைத்து வருகிறார்கள்.
இயக்குனர் முத்தையா இயக்கத்தில், கார்த்தி - அதிதி ஷங்கர் நடிப்பில்... கிராமத்து கதையசம்சத்துடன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் 'விருமன்'. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படத்திற்கு ஒரு தரப்பினர் பாசிட்டிவ் விமர்சனங்கள் கூறி வந்தாலும், மற்றொரு தரப்பினர் தொடர்ந்து நெகட்டிவ் விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
தன்னுடைய அம்மா சரண்யா பொன்வண்ணனின் தற்கொலைக்கு காரணமான, அப்பா பிரகாஷ் ராஜை எப்படியும் பழிவாங்கியே தீர வேண்டும் என, நினைக்கும் முரட்டு மகனாக நடித்துள்ளார் கார்த்தி. தாய்மாமன் ராஜ்கிரண் அரவணைப்பில் வளரும் கார்த்தியை ஏமாற்றி அவரது தாய் சரண்யா பொன்வண்ணனுக்கு சொந்தமான சொத்தை அபகரிக்க முயல்கிறார் பிரகாஷ் ராஜ்? இதன்பின் என்ன ஆனது என்பதே படத்தின் மீதிக்கதை.
மேலும் செய்திகள்: ஹனி மூன் சென்ற இடத்தில் பிரச்சனையா? சோகமாக அமர்ந்திருக்கும் நயன்தாராவின் ஷாக்கிங் புகைப்படம்!
இதற்கு இடையில், சூரியின் காமெடி... அதிதியுடனான காதல், செண்டிமெண்ட், வெறுப்பு, கோபம் என அனைத்து அம்சமும் கலந்து படமாக எடுத்துள்ளார். 'விருமன்' ஒரு படமாக பார்த்தல் ஓகே தான், ஆனால் புதிதாக ஏதாவது இருக்குமோ... என எதிர்பார்த்து செல்லும் ரசிகர்களுக்கு ஏமாற்றமே.
பல படங்களில் பார்த்த அதே கதை தான் இந்த படத்திலும் இருக்கிறது. புதுசா ஒன்னுமே இல்லை என புலம்புகிறார்கள். அதேபோல்... இந்த படத்தில் குறிப்பிட்ட சாதி தூக்கி பிடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது.
மேலும் செய்திகள்: விஜய் சென்ற அதே இடத்தை தேர்வு செய்த அஜித்... அடுத்து எங்கே செல்கிறது AK 61 படக்குழு? வெளியான சூப்பர் அப்டேட்!
அனைவரும் சமம் என்பது போல் கூறும் விதமாக ஜெய்பீம் போன்ற சாதிக்கு அப்பாற்பட்ட கதையை தயாரித்து நடித்திருந்த சூர்யா ஏன் இப்படி சாதியை தூக்கி பிடிக்கும் கதைகளை தயாரிக்கிறார் என்றும், அதில் ஏன் கார்த்தி நடிக்க ஒப்பு கொள்கிறார் என்பது போன்ற விமர்சனங்களும் சூர்யா - கார்த்தியை துரத்தி வருகிறது.
படத்தில் மிகப்பெரிய ப்ளஸ் என பார்த்தால், அதிதி கிராமத்து பெண்ணாக வந்து நடிப்பு, ஆட்டம் என தன்னுடைய ரோலை கண்காட்சிதமாக செய்துள்ளார். யுவன் மியூசிக் அல்டிமேட். 'விருமன் ' படம் குறித்த உங்கள் பார்வை என்ன?
மேலும் செய்திகள்: நடிகர் பாபி சிம்ஹாவின் 'தடை உடை' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!