- Home
- Cinema
- ஹனி மூன் சென்ற இடத்தில் பிரச்சனையா? சோகமாக அமர்ந்திருக்கும் நயன்தாராவின் ஷாக்கிங் புகைப்படம்!
ஹனி மூன் சென்ற இடத்தில் பிரச்சனையா? சோகமாக அமர்ந்திருக்கும் நயன்தாராவின் ஷாக்கிங் புகைப்படம்!
நடிகை நயன்தாரா... தற்போது தன்னுடைய காதல் கணவர் விக்னேஷ் சிவனுடன் இரண்டாவது முறையாக ஹனிமூனுக்கு சென்றுள்ள நிலையில், நயனின் சோகமான புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

ஒருவழியாக தன்னுடைய 7 வருட காதலரான, விக்னேஷ் சிவனை நயன்தாரா இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்டுள்ள நிலையில், திருமணத்திற்கு பின்னர் மீண்டும் தன்னுடைய பணியில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார். இவரை போலவே இவரது கணவர் விக்னேஷ் சிவனும் தன்னுடைய பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்
அந்த வகையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா... முதல் முறையாக பாலிவுட் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார். அட்லீ இயக்கத்தில் நடிகர் ஷாருகானுக்கு ஜோடியாக 'ஜவான்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் துவங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதில் 'ஜவான்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ள விஜய்யின் காட்சிகளும் படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்: விஜய் சென்ற அதே இடத்தை தேர்வு செய்த அஜித்... அடுத்து எங்கே செல்கிறது AK 61 படக்குழு? வெளியான சூப்பர் அப்டேட்!
அதே போல் நயன்தாராவின் காதல் கணவர் விக்னேஷ் சிவன், சமீபத்தில் சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்து, தன்னுடைய பணியை சிறப்பாக செய்து முடித்த நிலையில், நயன்தாராவோடு இரண்டாவது ஹானிமூனுக்கு பறந்துள்ளார்.
தற்போது இந்த ஜோடி, ஸ்பெயின் நாட்டுக்கு சென்றுள்ள நிலையில்... அவ்வப்போது காதல் பொங்கும் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு சிக்கிள்ஸை வெறுப்பேற்றி வருகிறது.
மேலும் செய்திகள்: 'விருமன்' படத்திற்கு முதல் நாளே சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடிய நடிகர் கார்த்தி! வைரலாகும் போட்டோஸ்..!
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள நயன்தாராவின் புகைப்படத்தை பார்த்து அவரது ரசிகர்கள்.. என்ன ஆனது? என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
கன்னத்தில் கை வைத்து கொண்டு மிகவும் சோகமாக எதையோ பார்த்து கொண்டிருக்கிறார் நயன்தாரா? இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சியாகி... நயனுக்கு என்ன கவலை என கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகள் : ஆர்யா எங்கே... இரவில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சாயிஷா..! எங்கு தெரியுமா..?
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.