'விருமன்' படத்திற்கு முதல் நாளே சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடிய நடிகர் கார்த்தி! வைரலாகும் போட்டோஸ்..!
இயக்குனர் முத்தையா இயக்கத்தில், சூர்யா தயாரிப்பில் அவரது தம்பி கார்த்தி நடித்துள்ள 'விருமன்' திரைப்படத்திற்கு முதல் நாளே சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
நடிகர் கார்த்தி - இயக்குனர் முத்தையா கூட்டணியில், கொம்பன் படத்தை தொடர்ந்து இன்று வெளியான 'விருமன்' திரைப்படத்தில் 7 ஆண்டுகளுக்கு பின் மீண்டும், கிராமத்து கதை களத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பிரபல இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி கதாநாயகியாக நடித்துள்ளார்.
காமெடி நடிகர் சூரி, சிங்கம்புலி, வடிவுக்கரசி, சரண்யா பொன்வண்ணன், இளவரசு, பிரகாஷ் ராஜ், ஆர்.கே.சுரேஷ், இந்திரஜா ரோபோ ஷங்கர் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
மேலும் செய்திகள்: நடிகை ஸ்ருதிஹாசன் அம்மா சரிகாவா இது? இப்படி மாறிட்டாங்களே... ஷாக்காக்கிய லேட்டஸ்ட் புகைப்படம் இதோ!
குடும்ப உறவுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் சுவாரஸ்யமே... அப்பா - மகனுக்குள் நடக்கும் பிரச்சனை தான். அந்த வகையில் கார்த்தியை டார்ச்சர் செய்யும் அப்பாவாக நடிகர் பிரகாஷ் ராஜ் நடித்துள்ளார். முரட்டு மகனாக கார்த்தியும் தன்னுடைய நடிப்பால் மாஸ் காட்டியுள்ளார்.
கிராமத்து மனம் மாறாமல் படத்தை அசத்தலாக இயக்குனர் முத்தையா எடுத்துள்ளார். பாடல்களுகம் ரசிகர்கள் மனதை வருடும் விதத்தில் உள்ளது. குறிப்பாக அதிதி தேன்மொழியாக வந்து ரசிகர்கள் மனதை கொள்ளை கொள்கிறார். பெரும்பாலும் இந்த படத்திற்கு தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சங்களே கிடைத்து வரும் நிலையில், முதல் நாளே சுமார் 7 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்துள்ளது இப்படம். படத்திற்கு ரசிகர்களிடம் கிடைத்த அமோக வரவேற்பை பார்த்து, முதல் நாளே நடிகர் கார்த்தி , இயக்குனர் முத்தையா ஆகியோர் சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடியுள்ளனர். இது குறித்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.