MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ரஜினி ரிஜெக்ட் பண்ணிய பாடலை பட்டிதொட்டியெங்கும் ஹிட்டாக்கிய இளையராஜா... அது என்ன பாட்டு தெரியுமா?

ரஜினி ரிஜெக்ட் பண்ணிய பாடலை பட்டிதொட்டியெங்கும் ஹிட்டாக்கிய இளையராஜா... அது என்ன பாட்டு தெரியுமா?

1990களில் வெளிவந்த தமிழ் படத்திற்காக இளையராஜா இசையமைத்த பாடல் ரஜினிக்கு திருப்தி அளிக்கவில்லை. ஆனால், இளையராஜா சொன்னபடியே அந்தப் பாடல் சூப்பர் ஹிட்டானது.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 06 2026, 09:51 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Rajinikanth Movie Song Secret
Image Credit : Asianet News

Rajinikanth Movie Song Secret

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - இளையராஜா காம்போ என்றால் அப்படம் நிச்சயம் வெற்றி என்றே சொல்லலாம். ஆனால், இவர்கள் கூட்டணியில் வந்த ஒரு எவர்கிரீன் பாடலை ரஜினி வேண்டாம் என்று நிராகரித்திருக்கிறார். பலமுறை அப்பாடலைக் கேட்டும் ரஜினிக்கு திருப்தி அளிக்கவில்லை. ஆனால் இளையராஜா சொன்ன ஒற்றை வார்த்தையில் ரஜினி அப்பாடலை படத்தில் வைக்க சம்மதித்தார். ரஜினியின் கணக்கு தப்புக்கணக்காகி போனதால், அப்பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது. அது என்ன பாடல் என்பதை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

24
ரஜினியை சமாதானப்படுத்திய இளையராஜா
Image Credit : Google

ரஜினியை சமாதானப்படுத்திய இளையராஜா

1992ல் 'மன்னன்' பட வேலைகள் நடந்தன. அப்போது இளையராஜா 'அம்மா என்றழைக்காத' பாடலின் ட்யூனை போட்டுக் காட்டினார். அந்த நேரத்தில் ரஜினி ஒரு மாஸ் ஹீரோவாக, ஆக்‌ஷன் படங்களில் பிஸியாக இருந்தார். பாடலைக் கேட்ட ரஜினி, 'ராஜா, இந்தப் பாடல் மெதுவாக உள்ளது, என் இமேஜுக்கு செட் ஆகுமா? ரசிகர்கள் ஏற்பார்களா? வேறு பாடல் செய்யலாமா?' எனக் கேட்டார். ரஜினி தயங்குவதைக் கண்ட இளையராஜா, 'இதுவரை நீங்கள் ஒரு கமர்ஷியல் ஹீரோ. இந்தப் பாடல் உங்களை ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் கொண்டு செல்லும். இது உங்களை வேறு உயரத்திற்குக் கொண்டு செல்லும்' என்றார்.

Related Articles

Related image1
இசைஞானியையே சோதித்த 'அந்த' பாடல்! 8 மணி நேர போராட்டத்திற்கு பின் கிடைத்த மாஸ் ஹிட்!
Related image2
சவால் விட்ட பாலசந்தர்.! மேடையில் வைத்து கண்ணதாசன் செய்த சம்பவம்.! சூப்பர் ஹிட் பாடல் உருவான கதை.!
34
அடிபொலி ஹிட் அடித்த பாடல்
Image Credit : Google

அடிபொலி ஹிட் அடித்த பாடல்

இளையராஜாவின் அசைக்க முடியாத நம்பிக்கையை ரஜினி ஏற்றுக்கொண்டார். 'மன்னன்' வெளியானதும், இளையராஜா சொன்னது உண்மையானது. வாலியின் வரிகள், ஜேசுதாஸின் குரல், ரஜினியின் நடிப்பு அப்பாடலை காவியமாக்கியது. குடும்ப ரசிகர்கள் ரஜினியை தங்கள் வீட்டுப் பிள்ளையாக பார்க்க, அவரது 'பேமிலி ஆடியன்ஸ்' பல மடங்கு அதிகரித்தது. அன்று இளையராஜா சொன்னது வெறும் ஆறுதல் வார்த்தை அல்ல, அது ஒரு மகத்தான கலைஞனின் பார்வை.

44
ரஜினியின் கெரியரில் சிறந்த பாடல்
Image Credit : instagram

ரஜினியின் கெரியரில் சிறந்த பாடல்

ஒருவேளை ரஜினி பிடிவாதமாக அந்தப் பாடலை நிராகரித்திருந்தால், தமிழ் சினிமாவின் சிறந்த 'அம்மா' பாடல்களில் ஒன்றை நாம் இழந்திருப்போம். இன்றும் அன்னையர் தினம் என்றால் முதலில் ஒலிப்பது இந்தப் பாடல்தான். இப்பாடல் வரிகள் திருச்சி அருகே உள்ள ஒரு ஐயப்பன் கோவில் கல்வெட்டில் செதுக்கப்பட்டிருப்பது அதற்கு கிடைத்த மற்றுமொரு பெருமையாக கருதப்படுகிறது. இன்று அம்மாவைப் பற்றி எத்தனைப் பாடல்கள் வந்தாலும், அதற்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்டது ரஜினியின் மன்னன் பட பாடல் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ரஜினிகாந்த்
இளையராஜா
தமிழ்ப் பாடல்கள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
மீனாவுக்கு சவால்விட்ட ரோகிணி.... விசாரணையில் இறங்கும் முத்து - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Recommended image2
ஒரே கார்.. ஒரே நிற உடை; எதைப் பற்றியும் கவலை இல்ல; மேரேஜ் ரிஷப்சனுக்கு ஜோடியாக வந்த விஜய் அண்ட் த்ரிஷா!
Recommended image3
ராசியில்லாத நடிகை என முத்திரை..ஷங்கர் கொடுத்த மிகப்பெரிய லைஃப்! ஒரே படத்தில் ஓவர்நைட் பிரபலம்!
Related Stories
Recommended image1
இசைஞானியையே சோதித்த 'அந்த' பாடல்! 8 மணி நேர போராட்டத்திற்கு பின் கிடைத்த மாஸ் ஹிட்!
Recommended image2
சவால் விட்ட பாலசந்தர்.! மேடையில் வைத்து கண்ணதாசன் செய்த சம்பவம்.! சூப்பர் ஹிட் பாடல் உருவான கதை.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved