- Home
- Cinema
- சவால் விட்ட பாலசந்தர்.! மேடையில் வைத்து கண்ணதாசன் செய்த சம்பவம்.! சூப்பர் ஹிட் பாடல் உருவான கதை.!
சவால் விட்ட பாலசந்தர்.! மேடையில் வைத்து கண்ணதாசன் செய்த சம்பவம்.! சூப்பர் ஹிட் பாடல் உருவான கதை.!
Interesting fact about avargal movie: தன் படத்திற்கு பாட்டு எழுதாமல் காலம் தாழ்த்திக் கொண்டிருந்த கண்ணதாசனை கே பாலச்சந்தர் மேடையிலேயே மடக்கி பாடல் எழுத வைத்த சுவாரஸ்ய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

‘அவர்கள்’ திரைப்படம்
1976 ஆம் ஆண்டு கே. பாலச்சந்தர் ‘அவர்கள்’ என்கிற படத்தை இயக்கிக் கொண்டிருந்தார். இந்த படத்திற்கு பாடல் எழுதுவதற்காக அவர் கண்ணதாசனை அணுகியுள்ளார். கண்ணதாசன் “இருமனம் கொண்ட..” மற்றும் “காற்றுக்கென்ன வேலி..” ஆகிய இரண்டு பாடல்களை எழுதி முடித்து அதற்கு எம்.எஸ்.வியும் இசையமைத்து முடித்துவிட்டார். ஆனால் அடுத்த பாடலை எழுதுவதற்கு முன்னர் கண்ணதாசன் வேறு படங்களில் பிஸியாகிவிட்டார்.
மேடையில் மடக்கிய பாலசந்தர்
அந்த சமயம் சினிமா விருது வழங்கும் விழா ஒன்று நடைபெறுகிறது. அந்த நிகழ்ச்சியில் கண்ணதாசனின் பிறந்தநாளை கொண்டாட விழாக் குழுவினர் திட்டமிடுகின்றனர். இந்த விழாவில் வைத்து கண்ணதாசனை மடக்கி எப்படியாவது மேடையிலேயே பாடல் எழுத வைத்து விட வேண்டும் என்று கே பாலச்சந்தர் திட்டம் தீட்டுகிறார். அதற்காக கண்ணதாசன் மேடையிலேயே வைத்து பாடல் எழுதப்போகிறார் என்று விளம்பரமும் செய்யப்படுகிறது.
சவாலை ஏற்ற கவிப்பேரரசு
இந்த விவரங்களை அறியாத கண்ணதாசன் பிறந்த நாள் விழா மேடைக்கு வருகை தருகிறார். அப்போது பாலச்சந்தர் மேடையில் வைத்து கண்ணதாசன் பாட்டு எழுத போகிறார் என்கிற விஷயத்தை கூற கண்ணதாசன் அதிர்ச்சியில் உறைகிறார். ஒரு பாட்டு எப்படி உருவாகிறது? கண்ணதாசன் எவ்வாறு பாட்டை எப்படி எழுதப் போகிறார்? அதற்கு எப்படி இசையமைக்க போகிறார்கள்? என்பதை காண மக்கள் ஆர்வத்துடன் கூடியிருந்தனர். எனவே கண்ணதாசனும் இந்த சவாலை ஏற்றுக் கொண்டு பாடல் எழுதத் தொடங்குகிறார்.
பாடலின் சூழலைச் சொன்ன பாலசந்தர்
கே.பாலச்சந்தர் பாடலின் சூழலை சொல்ல தொடங்குகிறார். சுஜாதாவின் முதல் காதல் தோல்வியில் முடிய, ரஜினியை கணவராக ஏற்கிறார். ரஜினி கொடுமைப்படுத்தவே அவரைப் பிரிந்து சென்னைக்கு வந்து வேலை பார்க்கிறார். அங்கு கமல் சுஜாதாவை ஒருதலையாக காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் ரஜினியும் மனம் திருந்தி சுஜாதாவை பார்க்க சென்னைக்கு வருகிறார். சுஜாதாவின் உடல்நிலை சரியில்லாமல் போக மூன்று பேரும் அவர்களை கவனித்துக் கொள்கின்றனர். ஒரு புறம் முன்னாள் காதலன், மறுபுறம் முன்னாள் கணவன், இன்னொரு பக்கம் தன்னை மனைவி போல் கருதும் நண்பன் என சுஜாதா குழம்பி நிற்கிறார்.
மேடையிலேயே பாடலை எழுதி முடித்த கண்ணதாசன்
இந்த சூழலுக்கு ஏற்றார் போல் பாட்டு எழுத பாலச்சந்தர் வேண்டுகோள் விடுக்கிறார். உடனடியாக கண்ணதாசன் பல்லவியை எழுதத் தொடங்குகிறார். அங்கும், இங்கும் பாதை உண்டு, இன்று நீ எந்த பக்கம்? ஞாயிறு உண்டு, திங்கள் உண்டு, எந்த நாள் இந்த நாளோ? என கண்ணதாசன் தனது பாடலை வாசித்து முடிக்கவும் அரங்கமே கைத்தட்டலால் அதிர்ந்தது. பாடலுக்கு மூன்று சரணம் வேண்டும் என்று பாலச்சந்தர் கேட்க அதையும் கண்ணதாசன் எழுதி முடித்தார். இந்த தகவலை கண்ணதாசனின் மகன் அண்ணாதுரை கண்ணதாசன் கேட்டு ஒன்றில் பதிவு செய்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

