MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Ilayaraja: என்னங்க சொல்றீங்க? இதெல்லாம் இவங்க பாடியதா? இளையராஜா வாய்ப்பு கொடுத்த 10 அரிதான குரல்கள்.!

Ilayaraja: என்னங்க சொல்றீங்க? இதெல்லாம் இவங்க பாடியதா? இளையராஜா வாய்ப்பு கொடுத்த 10 அரிதான குரல்கள்.!

10 rare voices that gave Ilayaraja a chance: இசைஞானி இளையராஜா வாய்ப்பு கொடுத்த காலத்தால் அழியாத 10 அரிதான குரல்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

3 Min read
Author : Ramprasath S
Published : Feb 09 2026, 01:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111
இளையராஜா வாய்ப்பு கொடுத்த 10 அரிதான குரல்கள்
Image Credit : Facebook

இளையராஜா வாய்ப்பு கொடுத்த 10 அரிதான குரல்கள்

இசை உலகில் முடிசூடா மன்னனாக வலம் வருபவர் இளையராஜா. இவரது இசை என்பது வெறும் வெட்டுக்களால் ஆனது மட்டுமல்ல. அது உணர்வுகளின் சங்கமம். இளையராஜா திரையுலகிற்கு வந்த பின்னர் பாடும் குரல்களில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தினார். 

கணீர் என்ற குரல்கள் மட்டுமே கோலோச்சிய காலத்தில், மண்வாசனை கமழும் குரல்களையும், தனித்துவமான அமைப்பு கொண்ட குரல்களையும் தேடிப் பிடித்து அறிமுகப்படுத்தினார். அவர் தேர்ந்தெடுக்கும் குரல்கள் அந்தப் பாடலுக்கு உயிர் கொடுப்பது மட்டுமல்லாமல் காலத்தால் அழியாமலும் நிலைபெற்று விளங்குகின்றன. 

அப்படி அவர் அடையாளம் கண்டு வாய்ப்பளித்த பத்து முக்கியமான மற்றும் அரிதான குரல்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

211
பாலமுரளி கிருஷ்ணா
Image Credit : Google

பாலமுரளி கிருஷ்ணா

கர்நாடக சங்கீத இசையின் மேதை என்று அழைக்கப்படுபவர் பாலமுரளி கிருஷ்ணா. இவர் இளையராஜா இசையில் பாடிய “சின்ன கண்ணன் அழைக்கிறான்..” என்கிற பாடல் காலத்தால் அழியாத வரம் பெற்றது. திரையிசை பாடல்கள் பொதுவாக சிந்து பைரவி, கல்யாணி, மோகனம் போன்ற ராகங்களில் அமையப்பெற்ற நாட்களில் இளையராஜா அந்தப் பாணியை மாற்றி ரீதி கௌளை ராகத்தில் இந்த பாடலை அமைத்து வெற்றி பாடலாக மாற்றிக் காட்டியிருந்தார். இந்த பாடல் இன்றளவும் சாகா வரம் பெற்று ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.

Related Articles

Related image1
Ilaiyaraja Music: பாடறியேன் படிப்பறியேன்.! சங்கீதம் தெரியாதவர்களும் ரசித்த சிந்து பைரவி! பொளந்து கட்டிய இளையராஜாவை திகைத்து பார்த்த திரையுலகம்!
Related image2
Ilaiyaraja Music: AI-யையே மிஞ்சும் வேகம்! 45 நிமிடங்களில் 9 பாடல்களை செதுக்கிய இளையராஜா!
311
பி.பி.ஸ்ரீனிவாஸ்
Image Credit : Google

பி.பி.ஸ்ரீனிவாஸ்

எம்.எஸ் விஸ்வநாதன் இசையில் பல பாடல்களை பாடி புகழ்பெற்றவர் பி.பி ஸ்ரீனிவாஸ். இவர் இளையராஜா இசையில் ஒரே ஒரு பாடலை மட்டுமே பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எஸ்.பி முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த ‘கடவுள் அமைத்த மேடை’ என்கிற படத்தில் “தென்றலே நீ பேசு..” என்கிற ஒரு பாடலை மட்டுமே பாடியிருக்கிறார். அவரது வசீகரமான குரலும், தபேலா இசையும் பாடலை கேட்பவர்களின் மனதை உருக்கிவிடும்.

411
மஞ்சுளா குருராஜ்
Image Credit : Google

மஞ்சுளா குருராஜ்

கர்நாடகாவைச் சேர்ந்தவர் பின்னணி பாடகி மஞ்சுளா குருராஜ். இவர் ‘நல்லவனுக்கு நல்லவன்’ என்கிற திரைப்படத்தில் வரும் “உன்னைத்தானே தஞ்சம் என்று..” பாடலை பாடியிருப்பார். இந்த பாடலை சுசீலா அல்லது ஜானகி பாடியிருப்பார் என்று நாம் நினைத்திருப்போம். ஆனால் அவர்களைப் போலவே குரல் வளம் கொண்ட மஞ்சுளாவை வைத்து இந்த பாடலை கச்சிதமாக உருவாக்கி இருப்பார் இளையராஜா. இந்த பாடலுக்குப் பின்னர் மஞ்சுளாவிற்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு தமிழில் பாடல்கள் அமையவில்லை.

511
அஜய் சக்ரபர்த்தி
Image Credit : Google

அஜய் சக்ரபர்த்தி

மேற்கு வங்கத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் அஜய் சக்ரபர்த்தி. இவர் ‘ஹேராம்’ படத்தில் வரும் “இசையில் தொடங்குதம்மா..” என்கிற பாடலை பாடியிருந்தார். ஹிந்துஸ்தானி இசையில் கைதேர்ந்த அஜய் சக்ரபர்த்தியின் குரலில் இந்த பாடல் பலரின் மனதையும் அமைதி அடையச் செய்யும். டோலாக், செனாய் போன்ற வட இந்தியாவில் பயன்படுத்தப்படும் முதன்மை கருவிகளைப் பயன்படுத்தி இந்த பாடலை இளையராஜா உருவாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

611
சுதா ரகுதாதன்
Image Credit : Google

சுதா ரகுதாதன்

ஆன்மீகப் பாடல்கள் மற்றும் கர்நாடக இசையில் கோலோச்சி வருபவர் சுதா ரகுநாதன். தனித்துவமான குரல் வளம் கொண்ட இவரை ‘இவண்’ படத்தில் “என்னை என்ன செய்தாய் வேங்குழலே..” என்கிற பாடலை பாட வைத்தார் இளையராஜா. அதே படத்தில் மற்றொரு பாடலையும் சுதா ரகுநாதன் பாடியிருக்கிறார். இளையராஜா இசையின் மூலமாகவே பின்னணி பாடகியாகும் வாய்ப்பை சுதா ரகுநாதன் பெற்றார்.

711
கிருஷ்ணச்சந்திரன்
Image Credit : Twitter

கிருஷ்ணச்சந்திரன்

இளையராஜா கண்டுபிடித்த அரிதான குரல்களில் மற்றும் ஒருவர் கிருஷ்ணச்சந்திரன். இவர் ‘கோழி கூவுவது’ என்கிற திரைப்படத்தில் வரும் “ஏதோ மோகம் ஏதோ தாகம்..” என்கிற பாடலை பாடியிருக்கிறார். கேரளத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், பாடகர், பின்னணி குரல் கொடுப்பவர் என்று பன்முக திறமையாளராக வலம் வருகிறார். இளையராஜாவின் இசையில் இன்னும் சில பாடல்களையும் பாடியிருக்கிறார்.

811
ஜென்சி
Image Credit : Twitter

ஜென்சி

கேரளாவில் இருந்து வந்து, தமிழ் சினிமாவில் ஒரு மாயாஜாலத்தை ஏற்படுத்திய குரல் என்றால் அது ஜென்சியின் குரல் தான். இவர் மிகக் குறுகிய காலமே பாடியிருந்தாலும் இளையராஜாவின் இசையில் பாடிய பாடல்கள் அனைத்தும் இன்னமும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கிறது. குறிப்பாக ‘ஜானி திரைப்படத்தில் வரும் “என் வானிலே ஒரே வெண்ணிலா..”, ‘முள்ளும் மலரும்’ படத்தில் வரும் “அடி பெண்ணே..” என்ற பாடலும், “தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்..” ஆகிய பாடல்கள் இன்றளவும் மக்கள் மனங்களில் சாகா இடம் பிடித்துள்ளது.

911
ஜாலி ஆபிரகாம்
Image Credit : Google

ஜாலி ஆபிரகாம்

‘கட்டப்பஞ்சாயத்து’ என்கிற படத்தில் வரும் “சின்ன மணிக்குயிலே..” என்கிற பாடலை பாடியவர் ஜாலி ஆபிரகாம். கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் மலையாளத்தில் பல பாடல்களை பாடியிருக்கிறார். தமிழில் சில பாடல்கள் மட்டுமே பாடி இருந்தாலும் இவர் ஏனோ கவனிக்கப்படாமலேயே போய்விட்டார். இவரது குரல் ஜெயச்சந்திரன் மற்றும் அருண்மொழி இருவரின் குரலை கலந்து கேட்பது போன்ற ஒரு உணர்வைத் தரும்.

1011
பாம்பே ஜெயஸ்ரீ
Image Credit : our own

பாம்பே ஜெயஸ்ரீ

1994 ஆம் ஆண்டு சந்தான பாரதி இயக்கிய ‘வியட்நாம் காலணி’ படத்தில் “கைவினை ஏந்தும் கலைவாணியே..” என்கிற பாடலை பாம்பே ஜெயஸ்ரீ பாடியிருப்பார். கர்நாடக சங்கீதத்தில் கைதேர்ந்த பாம்பே ஜெயஸ்ரீயை கொண்டு இந்த பாடலை அற்புதமாக வடிவமைத்திருப்பார் இளையராஜா. பின்னர் ‘பாரதி’ படத்தில் வரும் “நின்னை சரணடைந்தேன்..” என்கிற பாடலையும் இளையராஜா பாம்பே ஜெயஸ்ரீ வைத்து பாட வைத்திருப்பார்.

1111
மின்மினி
Image Credit : our own

மின்மினி

‘சின்ன சின்ன ஆசை’ பாடலுக்கு முன்பே இளையராஜாவின் இசையில் அறிமுகமானவர் பாடகி மின்மினி. இவர் மிகவும் மெல்லிய மற்றும் கூர்மையான குரலுக்கு சொந்தக்காரர். இவருடைய பாடல்களில் ஜானகியின் சாயல் அப்படியே இருக்கும். ‘தேவர்மகன்’ படத்தில் வரும் “மாசறு பொண்ணே வருக..” பாடலை மின்மினியை வைத்து இளையராஜா பாட வைத்திருப்பார். அதன் பின் “இந்திரயோ இவள் சுந்தரியோ..”, “சின்ன சின்ன ஆசை” ஆகிய பாடல்களையும் பாடியுள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சினிமா
இளையராஜா

Latest Videos
Recommended Stories
Recommended image1
தேவசகாயத்தின் பிளானை ஒட்டுக்கேட்ட ஜனனி... கதிரை கதிகலங்க வைத்த நந்தினி - எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ட்விஸ்ட்
Recommended image2
விஜயைவிட நான் பெரிய ஆளு.. எனக்கு திரிஷா மாதிரி மனைவி வேணும்..! ‘தர்பீஸ்' திவாகர் அடாவடி..!
Recommended image3
ட்விஸ்ட் வைத்த சரவணணின் முன்னாள் காதலி... மயிலுக்கு வில்லியாக மாறும் அஞ்சலி - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
Related Stories
Recommended image1
Ilaiyaraja Music: பாடறியேன் படிப்பறியேன்.! சங்கீதம் தெரியாதவர்களும் ரசித்த சிந்து பைரவி! பொளந்து கட்டிய இளையராஜாவை திகைத்து பார்த்த திரையுலகம்!
Recommended image2
Ilaiyaraja Music: AI-யையே மிஞ்சும் வேகம்! 45 நிமிடங்களில் 9 பாடல்களை செதுக்கிய இளையராஜா!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved