MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • விஜய் சென்ற அதே இடத்தை தேர்வு செய்த அஜித்... அடுத்து எங்கே செல்கிறது AK 61 படக்குழு? வெளியான சூப்பர் அப்டேட்!

விஜய் சென்ற அதே இடத்தை தேர்வு செய்த அஜித்... அடுத்து எங்கே செல்கிறது AK 61 படக்குழு? வெளியான சூப்பர் அப்டேட்!

விஜய் சென்ற அதே இடத்திற்கு அஜித் தன்னுடைய படப்பிடிப்பிற்காக செல்ல உள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது. 

1 Min read
Author : manimegalai a
Published : Aug 15 2022, 12:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'வாரிசு'. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினத்தில் பரபரப்பாக நடந்து வருகிறது. குறிப்பாக விசாகப்பட்டினத்தின் துறைமுக பகுதியில், விஜய்யின் அதிரடி ஸ்டண்ட் காட்சிகள் படமாக்கப்பட்டதாகவும், பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
 

25
varisu

varisu

இதை தொடர்ந்து சமீபத்தில் தான் விசாகப்பட்டினத்தில் படப்பிடிப்பை முடித்து கொண்டு, 'வாரிசு' படக்குழுவினர் சென்னை திரும்பிய நிலையில், அஜித்தும் அதே இடத்தில் தன்னுடைய படப்பிடிப்பை நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்: 'விருமன்' படத்திற்கு முதல் நாளே சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடிய நடிகர் கார்த்தி! வைரலாகும் போட்டோஸ்..!
 

35

இது குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலில், அஜித் 'வலிமை' படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் நடித்து வரும் ஏகே 61வது படத்தின் படப்பிடிப்பு, நாளை முதல் விசாகப்பட்டினத்தில் துவங்க உள்ளதாக கூறப்படுகிறது.
 

45

ஏற்கனவே அஜித் நடித்த 30 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில், டிசம்பர் மாதத்திற்குள் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்து, படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளார்களாம்.

மேலும் செய்திகள்: நடிகை ஸ்ருதிஹாசன் அம்மா சரிகாவா இது? இப்படி மாறிட்டாங்களே... ஷாக்காக்கிய லேட்டஸ்ட் புகைப்படம் இதோ!
 

55

விசாகப்பட்டினத்தில் நாளை முதல் துவங்க உள்ள படப்பிடிப்பில், அஜித்துக்கு ஜோடியாக நடிக்க உள்ள நடிகை மஞ்சு வாரியர்  கலந்து கொள்ள உள்ளாராம். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜிப்ரன் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
Thaai Kizhavi Day 1 Box Office : பாக்ஸ் ஆபிஸ் குயினாக மாறிய தாய் கிழவி... முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?
Recommended image2
விஜய்யைவிட பணக்காரியா? சங்கீதா-வின் சொத்து மதிப்பு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!
Recommended image3
கார்த்திகை தீபம் இன்றைய கூத்து: லாஜிக் மீறிய புதையல் வேட்டை! சந்திரகலா விரித்த வலையில் சிக்குவது யார்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved