நயனை கட்டிப்பிடித்து நச்சுனு முத்தம் கொடுத்த விக்கி..! வைரலாகும் படு ரொமான்டிக் ஹாட் போட்டோ..!
நயன்தாராவுடன் ஸ்பெயின் நாட்டில் 75 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடிய நயன் - விக்கி ஜோடி தற்போது ரொமான்டிக் புகைப்படம் ஒன்றை வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
கோலிவுட் திரையுலகின் புது திருமண நட்சத்திர ஜோடியான நயன்தாரா - விக்கி ஜோடி திருமணம் ஆகி இரண்டு மாதங்கள் ஆன போதிலும், இன்னும் தங்களுடைய ஹனி மூனை கொண்டாடி வருகிறார்கள்.
ஏற்கனவே, திருமணமான கையேடு தாய்லாந்து நாட்டுக்கு சென்று... காதல் ரசம் பொங்க ஹனி மூனை கொண்டாடி கலக்கலான புகைப்படங்களை வெளியிட்ட இந்த ஜோடி தற்போது இரண்டாவது முறையாக ஹனி மூனுக்கு ஸ்பெயின் நாட்டுக்கு பறந்துள்ளது.
மேலும் செய்திகள்: வெள்ளை நிற டீ-ஷர்ட்டில்... வெக்க புன்னகையோடு விதவிதமாக போஸ் கொடுத்த பிரியங்கா மோகன்! கியூட் போட்டோஸ்!
எவ்வித கவலையும் இன்றி சுதந்திர காதல் பறவைகளாக வலம் வந்து கொண்டிருக்கும் இந்த ஜோடி, ஸ்பெயின் நாட்டில், நம் தாய்நாட்டின் தேசிய கொடியை பிடித்த படி, நடந்து செல்லும் புகைப்படங்களை வெளியிட்டனர். இவர்களது தேசிய கொடி புகைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வேற லெவலுக்கு லைக்குகள் குவிந்தது.
இதை தொடர்ந்து, தற்போது விக்கி மிகவும் ரொமான்டிக் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில், பொது வெளியில்... நயன்தாராவுக்கு நச் என நெற்றியில் முத்தம் கொடுக்கிறார். இந்த லேட்டஸ்ட் ரொமான்டிக் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகள்: 75-ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடிய பிரபலங்கள்..! புகைப்பட தொகுப்பு..!