வெள்ளை நிற டீ-ஷர்ட்டில்... வெக்க புன்னகையோடு விதவிதமாக போஸ் கொடுத்த பிரியங்கா மோகன்! கியூட் போட்டோஸ்!
இளம் நடிகைகள் பார்த்து பொறாமை படும் அளவிற்கு, அடுத்தடுத்த படங்களில்... முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வரும், பிரியங்கா மோகன் மாடர்ன் உடையில் வெளியிட்டுள்ள கியூட் போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
எவ்வளவு தான் அழகாக இருந்தாலும், தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் அனைத்து நடிகைகளும், ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிடுவது இல்லை. ஆனால் குறுகிய சில வருடங்களிலேயே... 'டாக்டர்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ள பிரியங்கா மோகன் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்துவிட்டார்.
இவர் தன்னுடைய திரைப்பயணத்தை துவங்கியது கன்னட மொழியில் வெளியான "ஒந்து கதை ஹெல" என்கிற படத்தின் மூலம் தான். இந்த படம் 2019 ஆம் ஆண்டு வெளியாகி, சுமாரான வெற்றியை பெற்றது.
முதல் படத்திலேயே கன்னட திரையுலகை தாண்டி மற்ற மொழி ரசிகர்களையும் சுண்டி இழுத்த இவருக்கு தெலுங்கி, மற்றும் தமிழ் பட வாய்ப்புகளும் அடுத்தடுத்து கிடைத்தது. அந்த வகையில் தான் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்த, பிளாக்பஸ்டர் திரைப்படமான டாக்டர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு அம்மணிக்கு கிடைத்தது.
இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதால், அடுத்தடுத்த தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக மீண்டும் சிவகார்த்திகேயனுடன் 'டான்', சூர்யாவுடன் 'எதற்கும் துணிந்தவன்', படங்களில் நடித்தார்.
தற்போது தமிழில் முன்னணி கதாநாயகி பட்டியலில் இணைந்துள்ள பிரியங்கா மோகன், அடுத்தடுத்து பட வாய்ப்புகளை கைப்பற்றி வருகிறார். அதன்படி இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் இன்னும் பெயரிடப்படாத புதிய படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்கிறார்.
அதே போல், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள தலைவர் 169 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரியங்கா மோகன், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், தற்போது வரை இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் வெளியாகவில்லை.
தற்போது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வரும், ப்ரியங்கா மோகன்... அழகிய வெள்ளை நிற டீ - ஷர்ட் அணிந்து, வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.