தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும்.. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சூப்பர் வேலை.. முழு விவரம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காலியாக உள்ள 19 பணியிடங்களுக்கு தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. சமையல்காரர், பிளம்பர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விருப்பமுள்ளவரின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலி பணியிடங்கள்:
மொத்தம் 19 பணியிடங்கள் காலியாக உள்ளன. தாளம், வேதபாராயணம், சமயல்காரர், பிளம்பர் உள்ளிட்ட 13 பதவிகளில் மொத்தம் 19 இடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி:
ஐடிஐ அல்லது தமிழில் எழுத படிக்க தெரிந்திருந்தாலே போதும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் காலியாக உள்ள பணிகளுக்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:சென்னை ஐஐடியில் டேட்டா சயின்ஸ் படிப்பு - மாணவர்களுக்கு உதவித்தொகை அறிவிப்பு ! எவ்வளவு தெரியுமா ?
சம்பள விவரம்:
இந்த பணியிடங்களுக்கு தகுதியானவர்களுக்கு மாதந்தோறும் ரூ.18,500 முதல் ரூ. 58,600 வரை வழங்கப்படும்
வயது:
காலியாக உள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள், 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் தேதி:
இந்த பதிவுகளுக்கு விருப்பம் மற்றும் தகுதி உள்ளவர்கள் வரும் 18 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
முதலில் Maduraimeenakshi " target=""rel="dofollow"> Maduraimeenakshi என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்
விண்ணப்பிக்க வேண்டிய பணிகள் குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும்.
விண்ணப்பிக்க வேண்டிய படிவத்தை பதவிறக்க செய்ய வேண்டும்
கேட்கப்பட்ட தகவல்களை நன்கு படித்து பார்த்து, சரியாக பூர்த்தி செய்ய வேண்டும்.
பின்னர், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் எடுத்து வைத்து கொள்ளவும்.
ஆகஸ்ட் 18 ஆம் தேதிக்குள் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி:
Madurai Meenakshi Amman Temple
Madurai 625001
மேலும் படிக்க:தேர்வர்களே !! இனி என்னென்ன போட்டி தேர்வுகள் ..? அடுத்து எந்தெந்த அரசு வேலைக்கு ரெடியாகலாம்..? முழு விவரம்