இன்னும் ஒரு வருஷமா! பிரபாஸின் ‘சலார்’ படத்தின் புது ரிலீஸ் தேதியை அறிவித்த KGF இயக்குனர்... ஷாக்கான ரசிகர்கள்
கே.ஜி.எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், சுருதிஹாசன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் சலார் படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
கே.ஜி.எஃப் எனும் பிரம்மாண்ட படத்தை கொடுத்த பிரசாந்த் நீல், சமீபத்தில் அதன் இரண்டாம் பாகத்தையும் செம்ம மாஸாக எடுத்து வெளியிட்டார். அப்படம் இந்திய சினிமாவே வியக்கும் அளவுக்கு வசூலை வாரிக்குவித்து பிரம்மாண்ட வெற்றியை ருசித்தது. கே.ஜி.எஃப் 2 படத்தின் வெற்றிக்கு பின்னர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் படம் சலார்.
பாகுபலி நாயகன் பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகர் கமல்ஹாசனின் மகள் சுருதிஹாசன் நடித்துள்ளார். மலையாள நடிகர் பிருத்விராஜும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கே.ஜி.எஃப் படத்தின் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் தான் இப்படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.
இதையும் படியுங்கள்... விஜய் சென்ற அதே இடத்தை தேர்வு செய்த அஜித்... அடுத்து எங்கே செல்கிறது AK 61 படக்குழு? வெளியான சூப்பர் அப்டேட்!
சலார் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இப்படத்தை இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 14-ந் தேதி வெளியிட திட்டமிட்டு இருந்தனர். கடந்த ஆண்டு இது தொடர்பான அறிவிப்பும் வெளியானது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படத்தின் ஷுட்டிங் முடிய தாமதம் ஆனதால் சலார் படத்தை திட்டமிட்டபடி ரிலீஸ் செய்யமுடியாமல் போனது.
இதனால் இன்று அப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்டை படக்குழு வெளியிட்டு உள்ளது. அதன்படி சலார் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்படம் 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள், இன்னும் ஓராண்டுக்கு மேல் காத்திருக்கனுமா என ஷாக் ஆகி உள்ளனர்.
இதையும் படியுங்கள்... Soori : வீடு துடைக்கும் மாப் குச்சியில் தேசியக் கொடியை கட்டி பறக்க விட்ட சூரி... வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்