இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, வானிலை நிலவரம், அதிமுக, இன்றைய ஐபிஎல் போட்டி, முதல்வர் ஸ்டாலின், சினிமா செய்திகள், இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

11:56 PM (IST) Apr 24
ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜோஸ் ஹேசில்வுட் மேஜிக் பவுலிங் செய்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
மேலும் படிக்க
11:06 PM (IST) Apr 24
அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் கணவர் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க10:10 PM (IST) Apr 24
UPSC தோல்விக்குப் பிறகு மீள்வது எப்படி: UPSC 2024 இறுதி முடிவுகள் வெளியாகிவிட்டன. தகுதிப் பட்டியலில் 1009 பேர் இடம் பிடித்துள்ளனர். இந்தத் தேர்வில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கின்றனர், ஆனால் ஒரு சிலரே வெற்றி பெறுகின்றனர். வெற்றி பெறாதவர்கள் மீண்டும் முயற்சி செய்ய 7 வழிகள் உள்ளன.
மேலும் படிக்க
10:05 PM (IST) Apr 24
பகுதி நேர வேலை: யுபிஎஸ்சி தேர்வுக்குப் படிப்பது கடினமானதும், செலவு பிடித்ததும் ஆகும். பயிற்சி, புத்தகங்கள், வாடகை, உணவு என எல்லாவற்றுக்கும் பணம் தேவை. இது மன அழுத்தத்தை அதிகரிக்கும். ஆனால் கவலை வேண்டாம். படிப்புடன் சம்பாதிக்க 5 விரைவான வழிகள் இங்கே.
மேலும் படிக்க
09:59 PM (IST) Apr 24
மெட்டா நிறுவனம் ரெ-பான் மெட்டா ஸ்மார்ட் கண்ணாடிகளை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதன் விலை, நேரடி மொழிபெயர்ப்பு, இன்ஸ்டாகிராம் டிஎம் & அழைப்புகள் போன்ற அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க09:52 PM (IST) Apr 24
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம், 'எடிட்ஸ்' என்ற புதிய இலவச வீடியோ எடிட்டிங் செயலியை iOS மற்றும் Android-ல் அறிமுகம் செய்துள்ளது. இதன் அம்சங்களை அறிந்து உடனே பதிவிறக்குங்கள்!
09:51 PM (IST) Apr 24
மத்திய அரசின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு முழு ஆதரவு அளிப்பதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. டெல்லியில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் இந்த முடிவை எடுத்துள்ளன.
மேலும் படிக்க09:33 PM (IST) Apr 24
2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான கோடை விடுமுறைக்குப் பின் தமிழ்நாட்டில் கல்லூரிகள் திறக்கப்படும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. விவரங்களை இங்கே சரிபார்க்கவும்.
08:34 PM (IST) Apr 24
பஹல்காம் சம்பவம் தொடர்பாக ராஜ்நாத் சிங் தலைமையில் டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.
மேலும் படிக்க08:30 PM (IST) Apr 24
தளபதி விஜய்க்கு ஜோடியாக 'சச்சின்' படத்தில் நடித்திருந்த ஜெனிலியா, சச்சின் ரீ-ரிலீசுக்கு ரசிகர்கள் கொண்டு வரவேற்புக்கு நன்றி தெரிவித்து தற்போது வெளியே ஒன்றை வெளியிட்டுள்ளார்.
07:43 PM (IST) Apr 24
பாகிஸ்தானியர்களுக்கான விசா சேவை முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. பாகிஸ்தானியர்கள் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
07:37 PM (IST) Apr 24
பிரபல முதலீட்டாளர் சௌரப் முகர்ஜியா, இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு காரணமாக சம்பள வேலைகள் அழிந்து வருவதாக எச்சரிக்கிறார். தொழில்முனைவுதான் நடுத்தர வர்க்கத்திற்கான புதிய பாதை என்கிறார் அவர்.
07:09 PM (IST) Apr 24
ஜம்மு-காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவ வீரரை பாகிஸ்தான் ராணுவம் பிடித்துச் சென்றது. இடுஹ் தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.
மேலும் படிக்க07:09 PM (IST) Apr 24
தமிழ்நாடு மாநில தகுதித் தேர்வு (TNSET) 2025-க்கான முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்ற கேள்விக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளித்துள்ளது.
மேலும் படிக்க06:48 PM (IST) Apr 24
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ரெட்ரோ படம் குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மனம் திறந்து பேசியுள்ளார்.
06:26 PM (IST) Apr 24
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் (எம்எஸ்யூ), ஜனவரி 2025 பருவத்திற்கான பி.எச்.டி தகுதி நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டுள்ளது. தேர்வு தேதிகள், செயல்முறை மற்றும் நேரடி பதிவிறக்க இணைப்பு உள்ளிட்ட அனைத்து முக்கிய விவரங்களையும் இங்கே பெறுங்கள்.
06:11 PM (IST) Apr 24
இந்தியா சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்ததற்கு பதிலடியாக சிம்லா ஒப்பதந்தத்தை பாகிஸ்தான் ரத்து செய்துள்ளது. சிம்லா ஒப்பந்தம் என்றால் என்ன? இதனால் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு ஏற்படும்? என்பது குறித்து பார்க்கலாம்.
மேலும் படிக்க05:41 PM (IST) Apr 24
கடலைமாவை உணவில் அடிக்கடி சேர்ப்பது நல்லதா.. கெட்டதா? என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க05:23 PM (IST) Apr 24
தமிழ்நாட்டில் புதிய வடிவமைப்பு மையத்தைத் தொடங்கிய ரெனால்ட், 2027 ஏப்ரலில் இந்திய சந்தையில் ஐந்து புதிய மாடல்களை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இந்த கார்களில் சன்ரூஃப் மற்றும் வலுவான ஹைப்ரிட் தொழில்நுட்பம் இருக்கும்.
மேலும் படிக்க05:16 PM (IST) Apr 24
டாடா மோட்டார்ஸ் இரண்டு புதிய கார்களை அறிமுகப்படுத்த உள்ளது - ஹாரியர் எலக்ட்ரிக் வாகனம் மற்றும் ஆல்ட்ரோஸ் ஃபேஸ்லிஃப்ட். ஹாரியர் EV மே அல்லது ஜூன் மாதங்களிலும், புதுப்பிக்கப்பட்ட ஆல்ட்ரோஸ் 2025 பண்டிகை காலத்திலும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க05:09 PM (IST) Apr 24
இந்தியாவுக்கு பதிலடியாக பாகிஸ்தானும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது. இந்திய விமானங்கள் பறக்க தடை விதித்துள்ளது.
மேலும் படிக்க
04:30 PM (IST) Apr 24
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பயங்கரவாதிகளுக்கு எதிராக பிரதமர் மோடி வலுவான எச்சரிக்கை விடுத்துள்ளார். பீகார் மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஆங்கிலத்தில் பேசிய அவர், பயங்கரவாதிகளையும் அவர்களின் ஆதரவாளர்களையும் இந்தியா தண்டிக்கும் என்று உறுதிபடக் கூறினார்.
மேலும் படிக்க04:25 PM (IST) Apr 24
பஹல்காம் சம்பவத்துக்கு பிறகு இந்திய கடற்படை நடுக்கடலில் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
மேலும் படிக்க03:52 PM (IST) Apr 24
சென்னை செனாய் நகரில் 500 மாணவர்கள் தங்கிப் பயிலக்கூடிய அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய யுபிஎஸ்சி (UPSC) பயிற்சி மையம் ரூ. 40 கோடி செலவில் அமைக்கப்படும்.
மேலும் படிக்க03:50 PM (IST) Apr 24
டிரம்ப்பின் வரிகள் ஜப்பானிய வாகன உற்பத்தியாளர்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை இந்தத் தரவுகள் காட்டுகின்றன.
மேலும் படிக்க03:23 PM (IST) Apr 24
தஞ்சாவூர் ராசா மிராசுதார் மருத்துவமனையின் பிரசவ வார்டில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. கர்ப்பிணிகள், குழந்தைகள் உட்பட அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஏசி-யில் ஏற்பட்ட கோளாறே தீ விபத்துக்குக் காரணம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
மேலும் படிக்க03:16 PM (IST) Apr 24
குழந்தைகள் மன அழுத்தம், பதற்றம் போன்ற உளவியல்ரீதியான சிக்கல்கள் சிக்கி தவிப்பதாக ஆய்வுகளில் பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் படிக்க03:10 PM (IST) Apr 24
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் 2 படத்தில் லேட்டஸ்டாக புஷ்பா 2 வில்லன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் படிக்க02:56 PM (IST) Apr 24
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமியை வணங்கி உரையைத் தொடங்கினார். திமுக அரசின் கல்வித்துறை செயல்பாடுகளை விமர்சித்த அவர், ஆசிரியர் நியமனம் மற்றும் பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து கேள்வி எழுப்பினார்.
மேலும் படிக்க02:39 PM (IST) Apr 24
சன் டிவியின் சிங்கப்பெண்ணே சீரியல் முதல், ஜீ தமிழின் சந்தியா ராகம் சீரியல் வரை இந்த வாரம் அதிக டிஆர்பி பெற்ற டாப் 10 சீரியல்களை பற்றி பார்க்கலாம்.
மேலும் படிக்க02:35 PM (IST) Apr 24
தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின், முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் கும்பகோணத்தில் புதிய பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். கல்வி வளர்ச்சிக்கு பாடுபட்ட கலைஞருக்கு இது ஒரு சிறந்த அங்கீகாரம்.
மேலும் படிக்க02:32 PM (IST) Apr 24
அரைத்த இட்லி, தோசை மாவு குளிக்காமல் நீண்ட நாள் பிரெஷ்ஷாக வைத்திருப்பது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.
மேலும் படிக்க02:31 PM (IST) Apr 24
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த 28 பேருக்கு நீதி கிடைக்கும் என்று பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். குற்றவாளிகள் தப்பிக்க விடப்பட மாட்டார்கள் என்றும், உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களைத் துரத்திப் பிடித்து தண்டிப்போம் என்றும் அவர் கூறினார்.
மேலும் படிக்க02:15 PM (IST) Apr 24
தமிழகத்தில் நேற்று 10 மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் சுட்டெரித்த நிலையில், இன்று தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க02:15 PM (IST) Apr 24
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 462ஆவது எபிசோடில் அரசு வேலையா அரசி கல்யாணமா என்று யோசித்த செந்தில் ரூ.10 லட்சம் பணத்தை மாமனாரிடம் கொடுக்காமல் வந்துவிட்டார்.
01:46 PM (IST) Apr 24
பஹல்காம் பயங்ரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் அதன் கராச்சி கடற்கரையில் ஒரு ஏவுகணை சோதனையை நடத்த திட்டமிட்டுள்ளது.
மேலும் படிக்க01:44 PM (IST) Apr 24
ரூ.6 லட்சத்திற்கும் குறைவான விலையில் 6 ஏர்பேக்குகள் மற்றும் அதிக மைலேஜ் வழங்கும் மூன்று கார்கள்: மாருதி சுசுகி ஆல்டோ கே10, ஈகோ, செலெரியோ. பாதுகாப்பு மற்றும் மைலேஜ் விரும்புவோருக்கு.
மேலும் படிக்க01:43 PM (IST) Apr 24
நடிகர் அஜித் குமாருக்கும், நடிகை ஷாலினிக்கும் திருமணமாகி 25 ஆண்டுகள் ஆகும் நிலையில், இன்று இருவரும் தங்கள் 25வது திருமண நாளை கொண்டாடி வருகிறார்கள்.
மேலும் படிக்க01:10 PM (IST) Apr 24
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக இயக்க உள்ள படம் மற்றும் அந்த படத்தின் ஹீரோ - ஹீரோயின் குறித்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.
01:06 PM (IST) Apr 24
பாகிஸ்தான் தூதரகத்திற்குக் கேக் கொண்டு செல்லும் நபரின் காணொளி சமூக ஊடகங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க