MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • டிஆர்பி ரேஸில் அதிரடி மாற்றம்; இந்த வார டாப் 10 தமிழ் சீரியல்கள் லிஸ்ட் இதோ

டிஆர்பி ரேஸில் அதிரடி மாற்றம்; இந்த வார டாப் 10 தமிழ் சீரியல்கள் லிஸ்ட் இதோ

சன் டிவியின் சிங்கப்பெண்ணே சீரியல் முதல், ஜீ தமிழின் சந்தியா ராகம் சீரியல் வரை இந்த வாரம் அதிக டிஆர்பி பெற்ற டாப் 10 சீரியல்களை பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 24 2025, 02:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

Top 10 Tamil Serial TRP Rating : சீரியல்களின் வெற்றியோ... தோல்வியோ, அதன் டிஆர்பி ரேட்டிங்கை வைத்து தான் மதிப்பிடப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் சீரியல்களின் டிஆர்பி பட்டியல் வெளியிடப்படும். அந்த வகையில் 2025-ம் ஆண்டின் 15வது வாரத்திற்கான டாப் 10 தமிழ் சீரியல்களின் டிஆர்பி பட்டியல் இன்று வெளியாகி உள்ளது. இதில் வழக்கம் போல் சன் டிவி சீரியல்கள் ஆதிக்கம் செலுத்தி இருந்தாலும், அதற்கு டஃப் கொடுக்கும் விதமாக விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் சீரியல்களும் வரிசைகட்டி நிற்கின்றன. அதன் டாப் 10 பட்டியலை பார்க்கலாம்.

24
sandhiya raagam Serial

sandhiya raagam Serial

டாப் 10ல் சந்தியா ராகம்

கடந்த வாரம் ஜீ தமிழின் அண்ணா சீரியல் 10வது இடத்தை பிடித்திருந்த நிலையில், இந்த வாரம் ஜீ தமிழின் மற்றொரு சூப்பர் ஹிட் சீரியலான சந்தியா ராகம் சீரியல் 5.29 டிஆர்பி ரேட்டிங் உடன் 10ம் இடத்தை பிடித்துள்ளது. கடந்த வாரத்தை போல் இந்த வாரம் 8 மற்றும் 9வது இடங்களை விஜய் டிவியின் அய்யனார் துணை மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்கள் பிடித்துள்ளன. இதில் அய்யனார் துணை சீரியலுக்கு 6.70 டிஆர்பியும், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலுக்கு 6.10 டிஆர்பி புள்ளிகளும் கிடைத்துள்ளது.

இதையும் படியுங்கள்... புது சீரியல் வரவால்; 2 முக்கிய சீரியல்களின் நேரத்தை அதிரடியாக மாற்றிய விஜய் டிவி!

34
Serial TRP

Serial TRP

சரிவை சந்தித்த சிறகடிக்க ஆசை சீரியல்

சன் டிவியின் அன்னம் சீரியல் கடந்த வாரம் 7-வது இடத்தில் இருந்ததை போல் இந்த வாரமும் 7.15 டிஆர்பி ரேட்டிங் உடன் அதே இடத்தை தக்கவைத்துள்ளது. அடுத்ததாக ஆறாவது இடத்தில் எதிர்நீச்சல் 2 சீரியல் உள்ளது. இந்த சீரியலுக்கு 7.20 டிஆர்பி புள்ளிகள் கிடைத்துள்ளன. கடந்த வாரம் 4ம் இடத்தில் இருந்த விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் இந்த வாரம் ஒரு இடம் பின்னுக்கு தள்ளப்பட்டு டாப் 10 பட்டியலில் 5ம் இடத்தை பிடித்துள்ளது. இந்த சீரியலுக்கு 7.52 டிஆர்பி புள்ளிகள் கிடைத்துள்ளன.

44
Top 10 Serial

Top 10 Serial

ஆதிக்கம் செலுத்தும் சன் டிவி சீரியல்கள்

டாப் 10 ரேஸில் முதல் நான்கு இடங்களை சன் டிவி சீரியல்கள் தான் ஆக்கிரமித்து உள்ளன. கடந்த வாரம் 5ம் இடத்தில் இருந்த மருமகள் சீரியல் இந்த வாரம் ஒரு இடம் முன்னேறி 7.87 புள்ளிகளுடன் 4ம் இடத்தில் இருக்கிறது. வழக்கம்போல் சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு மற்றும் கயல் ஆகிய சீரியல்கள் தான் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளது. 3ம் இடத்தில் உள்ள கயல், 8.53 டிஆர்பியையும், இரண்டாம் இடத்தில் உள்ள மூன்று முடிச்சு 8.89 புள்ளிகளையும், முதலிடத்தில் உள்ள சிங்கப்பெண்ணே சீரியல் 9.27 டிஆர்பி ரேட்டிங்கையும் பெற்றுள்ளது.

இதையும் படியுங்கள்... Pandian Stores 2: ராஜீக்கு வலுக்கும் எதிர்ப்பு? சரவணனிடம் சிக்குவாரா தங்கமயில்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ் சீரியல்
விஜய் தொலைக்காட்சி
சன் தொலைக்காட்சி
ஜீ தமிழ் தொலைக்காட்சித் தொடர்கள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரஜினிக்கு தேவா செதுக்கிய இசை சிம்மாசனம்! ரசிகர்களை துள்ளி குதிக்க வைத்த சூப்பர் ஸ்டாரின் 'மாஸ்' இன்ட்ரோ பாடல்கள்!
Recommended image2
கார்த்திகை தீபம் அப்டேட்: அம்மாவுக்காக கருவை கலைக்கத் துணிந்த ரோகிணி! கார்த்திக்கிடம் சிக்கிய உண்மை - விறுவிறுப்பான எபிசோட்!
Recommended image3
அரிசி வாங்கக் கூட காசு இல்ல; இன்று கோடிகளில் சொத்து! வறுமையை வென்று சாதித்த நடிகர் சிங்கமுத்துவின் வாழ்க்கை கதை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved