- Home
- Cinema
- தொலைக்காட்சி
- Pandian Stores 2: ராஜீக்கு வலுக்கும் எதிர்ப்பு? சரவணனிடம் சிக்குவாரா தங்கமயில்!
Pandian Stores 2: ராஜீக்கு வலுக்கும் எதிர்ப்பு? சரவணனிடம் சிக்குவாரா தங்கமயில்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 462ஆவது எபிசோடில் அரசு வேலையா அரசி கல்யாணமா என்று யோசித்த செந்தில் ரூ.10 லட்சம் பணத்தை மாமனாரிடம் கொடுக்காமல் வந்துவிட்டார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 462ஆவது எபிசோடானது அரசு வேலைக்காக ரூ. 10 லட்சம் கொடுக்கவா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருக்கும் செந்திலின் காட்சியோடு தொடங்குகிறது. காசு, பணம் கொடுக்காமல் எங்கேயும் இந்த காலத்தில் வேலை நடக்காது. அப்படியிருக்கும் போது எப்படியும் கொடுத்தால் தான் வேலை கிடைக்கும் என்று மாமனார் சொல்ல, அரசியின் கல்யாணத்தை எப்படியாவது நல்லபடியாக நடத்த வேண்டும். ரூ.10 லட்சத்தை கரெக்டா எடுத்துக் கொண்டு வந்துவிடு என்று அப்பா சொன்னது செந்திலுக்கு நினைவிற்கு வருகிறது.
Senthil Decision
பணத்தை மாமனாரிடம் கொடுக்காத செந்தில்:
அதன் பிறகு கொடுக்க நினைத்த பணத்தை அப்படியெ பேக்கில் வைத்து அரசி கல்யாணத்திற்கு பிறகு பணத்திற்கு ஏற்பாடு செய்து கொள்ளலாம் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு வந்துவிடுகிறார்.
Pandian Stores 2: காதல் விஷயத்தை கூறிய அரசி; சதீஷ் எடுக்கப்போகும் முடிவு என்ன?
Thangamayil Reached Home
வீட்டுக்கு வந்து சேரும் தங்கமயில்
இன்னொரு புறம் கோயிலிலிருந்து புறப்பட்ட தங்கமயில் வீட்டிற்கு வந்துவிட்டார். அவரிடம் நீ வேலைக்கு போக வேண்டாம். இனிமேல் வர முடியாது என்று சொல்லிவிடு என்று சரவணன் சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.
Saravanan and Thangamayil
தங்கமயிலுக்கு ஆடர் போடும் சரவணன்
மேலும், சரவணன் எதற்காக அதற்குள் அங்கிருந்து வந்த என்று கேட்க... நீ எந்த காலேஜ் எந்த வருஷம் படித்து முடிச்ச என்ற விவரங்களை கேட்கிறார். இதுவரையில் நீ அனுப்பவில்லை. எனக்கு உடனே மெசேஜ் அனுப்பு என்று சரவணன் சொல்லிவிட்டு புறப்படுகினார்.
Pandian Stores: மீண்டும் சிக்கிய மயிலு... ஆப்பு கன்ஃபாம்; மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் ராஜு!
Local Peoples Against Raji
ராஜீ கிளம்பும் எதிர்ப்பு:
ஆனால், அதற்கு என்ன பதில் சொல்ல என்று தங்கமயில் யோசித்துக் கொண்டிருக்கிறார். இறுதியாக துர்க்கை அம்மன் கோயிலின் சித்திரை மாத சிறப்பு நிகழ்ச்சியாக டான்ஸ் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. டான்ஸ் ஆடுவதற்கு கோமதி அனுமதி கொடுத்த நிலையில் டான்ஸ் போட்டிக்கு ராஜீ பெயர் கொடுத்துள்ளார். கிட்டத்தட்ட 20, 30க்கும் அதிகமானோர் டான்ஸ் போட்டிக்கு பெயர் கொடுத்திருக்கிறார்கள். இதில் ஒவ்வொருவராக டான்ஸ் ஆடும் நிலையில் இன்றைய எபிசோடின் கடைசி போட்டியாளராக ராஜீ ஸ்டேஜ் ஏறினார்.
Raji Dance Performance:
ராஜீ ஸ்டேஜில் பதற்றத்துடன் காணப்படுகிறார்:
ஆனால் அவர் டான்ஸ் காஸ்டியூமில் இல்லாத நிலையில் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் கேலி, கிண்டலும் செய்கிறார்கள். அதோடு வெளியூரைச் சேர்ந்தவர்கள் டான்ஸ் ஆடக் கூடாது என்று கோஷமிட்டனர். இதனால், அதிர்ச்சி அடைந்த ராஜீ ஸ்டேஜில் பதற்றத்துடன் காணப்பட்டார். அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடு முடிவடைகிறது. இனி நாளை நடக்கும் 463ஆவது எபிசோடில் ராஜீ டான்ஸ் ஆடுவாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.