- Home
- Cinema
- தொலைக்காட்சி
- Pandian Stores: மீண்டும் சிக்கிய மயிலு... ஆப்பு கன்ஃபாம்; மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் ராஜு!
Pandian Stores: மீண்டும் சிக்கிய மயிலு... ஆப்பு கன்ஃபாம்; மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் ராஜு!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடானது, தங்கமயிலுக்காக டூப்ளிகேட் சான்றிதழ் வாங்க கல்லூரியின் பெயரையும், படித்த வருடத்தையும் சரவணன் கேட்பதோடு தொடங்குகிறது.

டூப்பிளிகேட் சான்று வாங்குவதில் சரவணன் காட்டும் மும்முரம்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 460ஆவது எபிசோடில், தங்கமயிலின் டூப்ளிகேட் சான்றிதழ் பற்றி சரவணன் கேட்கிறார். மேலும், படித்த கல்லூரியின் பெயரும், படித்த வருடமும் கேட்கிறார். அதை மட்டும் சொன்னால் போதும் நானே உனக்கு டூப்ளிகேட் சான்றிதழ் வாங்கி கொடுத்துவிடுகிறேன் என்று சரவணன் உறுதியாக சொல்கிறார்.
Thanga Mayil discontinued in 12th
தங்க மயில் 12ஆம் வகுப்பு கூட முழுவதுமாக படித்து முடிக்கவில்லை:
இதனால் மீண்டும் தங்க மயில் சிக்கலில் சிக்குகிறார். அதேநேரம் தங்கமயிலோ 12ஆம் வகுப்பு கூட முழுவதுமாக படித்து முடிக்கவில்லை. அப்படியிருக்கும் போது இங்கிருந்து சமாளிக்க முடியாது, உடனே ஊருக்கு கிளம்ப வேண்டும் என்று எண்ணிக் கொண்டு பொய் சொல்லிவிட்டு ஊருக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
Pandian Stores: வெளியூர் ஆட்டக்காரிக்கு மவுஸ் இருக்குமா? டான்ஸ் போட்டியில் கார் ஜெயிப்பாரா ராஜீ?
Raji Got Permission:
அனுமதி கொடுத்த கோமதி:
எப்படியும் டான்ஸ் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ராஜீ டான்ஸ் பயிற்சியும் எடுக்கிறார். ஆனால், அனுமதி தான் கிடைக்கவில்லை. இதற்காக மீனாவிடம் சிபாரிசு செய்ய சொல்லி கேட்கிறார். மீனாவோ, கோமதியிடம் சாமி தான் நம்மை இங்கு வர வைத்திருக்கிறது. ராஜீயையும் டான்ஸ் ஆட வைக்க போகிறது. இதெல்லாம் சாமி கணக்கு அப்படி இப்படி என்று தாஜா பண்ணி அனுமதியும் பெற்றுள்ளார்.
Senthil confusion:
ரூ.48 கொடுப்பதற்கு பதிலாக ரூ.58 கொடுக்கிறார்:
இதையடுத்து கடைசி காட்சியாக செந்தில் கடையில் உட்கார்ந்து கொண்டு ரூ.48 கொடுப்பதற்கு பதிலாக ரூ.58 கொடுக்கிறார். ஏன் அப்படி கொடுக்கிறாய் என்று குமரேசன் கேட்கவே, செந்தில் மீனாவின் நினைப்பாக இருப்பதாக பழனிவேல் கிட்டல் செய்கிறார். கதிருக்கு ராஜீ வீட்டில் இருப்பது போன்றே தோன்றுகிறது. வீடு முழுவதும் ராஜீ இருப்பது போன்று எண்ணம் தான்.
Pandian Stores: பழனிவேலை டார்ச்சர் செய்யும் சுகன்யா; உண்மையை தெரிந்து கொண்ட சரவணன்!
Raji Won dance competition
பரிசு வெல்வாரா?
ராஜீ தனது கணவருக்கு பைக் வாங்கப் போகிறாரா அல்லது அரசிக்கு வரதட்சணையாக கொடுக்க கார் ஜெயிக்க போகிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ககலாம். இறுதியாக செந்திலின் மாமனார் அவரை பார்க்க வந்திருக்கிறார். அவரது கடைக்கு அருகில் இருப்பதாகவும், உடனே வரும்படியும் கூப்பிடவே உடனே செந்தில் புறப்பட்டுச் செல்வதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.